Friday 15 November 2013

போர்னோ ரைட்டர் அட..த்தூ - சாரு டைம்ஸ் - (16/11/13)

அட..த்தூ வாங்கி குடுக்கும் ஓசி சரக்குக்கு ஆசை பட்டு ஒலக காமெடியன் சாரு, அட..த்தூ எழுதிய போர்னோ  கதைகளை ஒலக இலக்கியம் என்று ஜல்லி அடித்து கொண்டு இருக்கிறது. ஒரு வேளை அட..த்தூ சாருவுக்கு ஓசி சரக்கு வாங்கி குடுக்காமல் இருந்து இருந்தால் மண்டையிடம் இருந்து இது மாதிரி தான் பதிவு வரும்.

அட..த்தூ என்கிற போர்னோ ரைட்டர் !!

டியர் சாரு,

வளர்ந்து வரும் இளம் போர்னோ எழுத்தாளர் அட..த்தூ அவர்கள் தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை ஜனவரி மாதம் வெளியிட உள்ளார். அதைப் பற்றி உங்களது கருத்து அல்லது விமர்சனம்?

அன்புடன்,
மண்டை ஓடு செந்தில் குமார், விமர்சகர் வட்டம்

டியர் மண்டை ஓடு செந்தில்,

பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க வேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே, இது நியாயமா? சர்வதேச எழுத்தாளனாக வாழ்ந்து கொண்டிருக்கும் என்னிடம் இந்தக் கேள்வியை கேட்க உங்களுக்கு யார் அனுமதியளித்தது.

தமிழ்நாட்டில் மட்டுமே ஒரு எழுத்தாளன் குப்பைகளையும், மலங்களையும் பற்றி கருத்துச் சொல்ல வேண்டிய அவலநிலை நிலவுகிறது. தற்கொலைக் குறுங்கதைகள் என்றுகூட சரியாக எழுதத் தெரியாத தற்குறி எழுதியக் குப்பையைப் பற்றி நாற்பது வருடத்திற்கு மேலாக எழுதும், இந்தியாவின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவனாகிய என்னிடம் கருத்து கேட்பீர்களா? யார் அந்த நபர்? ஃபேஸ்புக்கில் நான்கு ஆயிரம் ஃபாலோவர்கள் இருந்தால், அதில் ஐம்பது பேர் எந்தக் குப்பையையும் லைக் செய்வார்கள். அதற்காக அந்த அரைகுறையின் கையில்தான் தமிழ் இலக்கியத்தின் எதிர்காலம் இருக்கிறது என்று சொல்லவேண்டுமா? அதற்குப் பதிலாக நாம் எழுதுவதை நிறுத்திவிட்டு மலத்தைத் தின்னலாம்.

எழுத்தாளனைக் கொண்டாடவில்லை என்றாலும் பரவாயில்லை, இது போன்ற கேனப் .....களை (இப்பொழுதுதான் ஞாபகம் வந்தது, பெண்களும் குழந்தைகளும் இதைப் படிப்பார்கள் என்று) தலையில் தூக்கி வைத்து ஆடாதீர்கள்.

கீழே வரும் வரிகளைப் படியுங்கள்

"சாந்தியும் கணவனும் பெரிய மனது பண்ணி வாசகர்களுக்காக ஒரு ட்விஸ்ட் கொடுத்தனர். அது என்னவெனில் அவர்கள் எரிச்சலோடு புணர்ந்து கொண்டிருக்கையில், உச்சக்கட்டத்தில் இருவரும் காதோரம் சொல்லிக் கொண்டனர் – ஐ லவ் யூ."

இதை எங்கேயோ படித்த ஞாபகம் வருகிறதா. வராதா பின்ன. பஸ் ஸ்டாண்ட் கழிவறைகளில் இப்படித்தானே இலக்கியத்தை வளர்க்கும் இளம் எழுத்தாளர்கள்(!) எழுதுகிறார்கள். இப்பொழுது புரிகிறதா, நான் ஏன் பஸ் ஸ்டாண்ட்டில் முறுக்கு விற்பவரிடம் கேட்க சொன்னேன் என்று.

அடுத்த வரும் வரிகளையும் படித்துவிடுங்கள்.

"அந்தப்புரத்தில் 240 பெண்கள் உள்ளனர். கடுமையான காவல். இந்த நாட்டு மற்றும் அண்டை நாட்டுப் பெண்கள். அந்தப்புரப் பெண்களுக்கு உணவு உடை செல்வத்திற்கெல்லாம் பிரச்சினை இல்லை இளவரசே. பலரும் இன்னும் கன்னி கழியவில்லை இளவரசே. கட்டி அணைத்தல், முத்தமிடுதல் , விரல் விளையாட்டு, வாய் விளையாட்டு என அனைத்தையும் செய்து கிளப்பி விட்டு விட்டு கடைசியில் புணராமல், புணர முடியாமல் அரசர் திருப்பி அனுப்பி விடுவதால் பெண்கள் அனைவரும் பித்துப் பிடித்தது போல் உள்ளனர். சிலர் காய் கனி எடுத்துக் கொண்டு தனி அறைக்குச் சென்று விடுகின்றனர். சிலர் பெண்ணும் பெண்ணுமே… சொல்லவே நாக்கூசுகிறது இளவரசே. சிலர் தப்பித்து ஓடப் பார்த்து , பிடிக்கப்பட்டு சிறையில் உள்ளனர். சிலர் தற்கொலை செய்து கொண்டு விட்டனர்"

இந்த மனிதர் கல்லூரிப் பருவத்தில் செக்ஸ் நகைச்சுவை கதைகள் நிறைய கேட்டிருப்பார் போல. அதைக் கொஞ்சம் உல்டா பண்ணி எழுதிவிட்டால் உலகத் தரத்தில் எழுதுவதாகிவிடுமோ.

உங்களுடைய இந்தக் கடிதத்தால் நான் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். என்னுடைய எவ்வளவு creative வேலையை விட்டு விட்டு இங்கே மாங்கு மாங்கு என்று டைப் செய்து என் நேரத்தை விரயம் ஆக்கிக் கொண்டிருக்கிறேன் பாருங்கள். இதுவா ஒரு எழுத்தாளனுக்கு நீங்கள் செய்யும் பிரதிபலன்? நீங்கள் செய்த தவறை திருத்தி கொண்டு கீழ்காணும் அக்கௌன்ட்டில் பணம் செலுத்தி விடுங்கள்.

Account holder’s Name: K. அறிக்கி
Axis Bank Account number: 999999999999999
Branch: Radhakrishnan Salai, மைலாபூர் முத்திர சந்து.
***********************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு: ரொலான் பார்த், ஜார்ஜ் பத்தாய் போன்ற என் ஃப்ரெஞ்ச் நண்பர்களின்.
கொக்கரக்கோ: மீன் குஞ்சுக்கும், பாத பூசாரிக்கும் இப்படி ஒரு பெயர் இருக்குதா.. அட இது தெரியாம போச்சே.

சாரு: பின்நவீனத்துவத்தின் பல அம்சங்களைத் தற்கொலைக் குறுங்கதைகளில் பார்க்க முடிகிறது. அவற்றில் ஒரு சிலவற்றை இங்கே பார்ப்போம்.  முதலாவது, self reflexivity. 
கொயாக்கொ: இந்தியாவுலேயே ஏன் வேல்டுடலயே கார் வச்சிருக்க கரகாட்ட கோஷ்டினா நம்ம கோஷ்டிதான்.

சாரு: இந்த நாவலில் மெனு என்று ஒரு கதை உள்ளது. ஒரு உணவு விடுதியில் போய் அமர்கிறாள் சாந்தி. சிப்பந்தி மென்யு கார்டைத் தருகிறார். கதை முழுவதும் அந்த மென்யு கார்டில் உள்ள பட்டியல்தான். 
கொக்கரக்கோ: குரு Ohgod Ohgod ன்னு பக்கத்த நிரப்புறாரு, சிஷ்யப் பொறுக்கி மெனு கார்ட் போட்டு பக்கத்த நிரப்புது.

சாரு:  நானே ஒரு பிச்சைக்கார நாய். அப்படிப்பட்ட நானே 1500 ரூ கையில் எடுத்துப் போயிருந்தேன்.
கொயாக்கொ: அப்போ காலையில இஞ்சி சாறு குடிச்சிட்டு pedigreeயும் சாப்பிடுவீங்களா ஜென் தந்தையே.

சாரு:  அராத்து என்பதற்காக நான் பாராட்டவில்லை.
கொயாக்கொ: இப்போ ஐ லவ் யூ சொன்னாங்களே, அது உங்கள பாத்து தான்.. 
பூ கொடுத்துட்டு போனாங்களே அது கூட உங்களுக்கு தான்,
ஏன்னா இப்ப நான் தானே காலிங்....

சாரு:  நம்முடைய தினசரிகளை எடுத்துப் பாருங்கள். ஒவ்வொரு பக்கத்திலும் நடக்கும் கொலைகள் அனைத்தும் செக்ஸோடு சம்பந்தப்பட்டிருக்கும். 
கொக்கரக்கோ: என்ன ஞான தந்தையே.. நீங்க தான் தினசரி பத்திரிக்கை எதுவுமே படிக்க மாட்டேன்.. டி.வி பார்க்க மாட்டேன், தமிழ்ல எழுதுற எதையுமே படிக்க மாட்டேன்னு சொல்லுவீங்க. ஆனா தமிழ் நாட்டுல நடக்குற எல்லா கள்ளக் காதல் செய்திகளையும் finger tipsல வச்சிருக்கீங்க. தினத்தந்தியை லத்தினில் மொழி பெயர்த்துப் படிப்பீங்களா ???

சாரு:  தற்கொலை குறுங்கதைகள் படித்து விட்டேன். தொல்காப்பியர் காலத்திலிருந்து தமிழில் இப்படி ஒரு நூல் வந்ததில்லை.
கொயாக்கொ: பிச்சைகாரனுக்கு செக்யூரிட்டி பிச்சைக்காரனே ....!!!!
கொக்கரக்கோ: அடப்பாவி, உன் ஓசி குடிக்காக தொல்காப்பியரையும், திருவள்ளுவரையும் ஏன்டா கழுவேத்துற

சாரு:  இப்படி தமிழ் இலக்கிய உலகில் கடந்த 40 ஆண்டுகளாக நடந்த எந்த விஷயத்தைப் பற்றியும் தெரியாத ஒருவர் தன் வீட்டுக்கு வந்து சொம்பு தூக்கிய ஒருவரை மட்டுமே தெரிந்து கொண்டு அவரைத் தலைமுறையின் தலை சிறந்த எழுத்தாளர் என்று சொல்வது அயோக்கியத்தனம் இல்லையா?
கும்மாங்கோ: ஒரு வட்டத்தில் 180 நிமிட கிழவர் ஒருத்தர் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள். அவருக்கு நான்கு ஆப்த சிஷ்ய குஞ்சுகளும் ஒரு டஜன் ரசிக குஞ்சுகளும் இருக்கிறார்கள். ஆனால் அவருக்கு எந்தப் குஞ்சு ரெமி மார்டின் வாங்கி கொடுத்து கை கால் அமுக்கி விடுகிறானோ அவனே இந்த தலைமுறையின் மிகச் சிறந்த தமிழ் எழுத்தாளர், மற்றதெல்லாம் தறுதலை, பொறுக்கி என்று அந்தக் கிழவர் சொன்னால் அது அயோக்கியத்தனம் தானே? அதே அயோக்கியத்தனத்தைத்தான் 180 நிமிட தாத்தாவும் செய்திருக்கிறார்.

சாரு:  தமிழில் காமத்தை மையமாகக் கொண்டு வெளிவரும் முதல் நாவலாக அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளைப் பார்க்கிறேன்//
கும்மாங்கோ: குப்பி குருவே, அப்ப இது வரைக்கும் நீங்க எழுதுன நாவல்லாம் போர்த்துக்கீசிய பாஷையா??!!

சாரு:  அராத்து எழுதிய தற்கொலை குறுங்கதைகள் என்ற நாவலை பின்நவீனத்துவத்தையும் கலைத்துப் போடும், பிரித்துப் போடும் ஒரு புதிய இலக்கிய வடிவம் என்கிறேன்.
கொயாக்கொ: முன்னுரை எழுத சொன்னா நீயே ஒரு நாவல் அளவுக்கு எழுதிகிட்டே போனா என்ன பண்ணுறது ...சென்னையில ஒரு குவார்ட்டர் வாங்கி கொடுத்தா கொலை பண்ணகூட ஆளிருக்கு ஆப்டின்னு என் நண்பன் சொன்னப நான் நம்பல ...இப்ப என் நண்பன் கிட்ட மன்னிப்பு கேக்குற மாதிரி ஆகி போச்சு.

சாரு:  தமிழில் சிலர் பின்நவீனத்துவக் கோட்பாடுகளை மட்டும் படித்து விட்டு புனைகதைகளை எழுத முயன்ற போது அது வெறும் விபத்தாகவே முடிந்தது. 
கொக்கரக்கோ: அந்த விபத்தே நீங்க தான் ஜென் குருவே.

சாரு:  அராத்துவின் தற்கொலை குறுங்கதைகளுக்கு உலக இலக்கியத்திலும் தமிழிலும் எனக்கு முன்னோடிகள் கிடைக்கவில்லை.
கொக்கரக்கோ: மஞ்ச பத்திரிக்கைகள்ல தேடி பாத்தீங்களா?

***********************************************************************************************
ஜென் கதைகள்: 

ஒரு ஊர்ல ஒருத்தன் சாயந்தரம்வேலை முடிச்சு வீட்டுக்கு போய்ட்டு இருந்தான்.அப்ப திடீர்னு ஒரு காட்டுக்குள்ள வச்சு அவன் வந்த பைக் பஞ்சர் ஆகிருச்சு. உடனே பக்கத்துல பார்த்தான், தூரத்துல ஒரு மடம் தெரிஞ்சது, அங்க போய்எதாவது உதவி கிடைக்குமான்னு கேட்கலாம்னு போனான்.
அங்க இருந்த ஜென் குரு (மண்டை/சாரு) சொன்னாரு, "தம்பி நேரம் வேறு போயிருச்சு இந்த இருட்டுக்குள்ள நீங்க ஊருக்கு வண்டிய சரி பண்ணி போகனுமா? பேசாம இங்க தங்கிட்டு காலைல போங்கன்னு. உடனே இவனும் சரின்னு ஒத்துக்கிட்டான். அங்கேயே சாப்பிட்டு தூங்கி  கொண்டிருக்கும்போது  மடத்துக்கு பின்னாடி டமால்னு ஒரு பெரிய சத்தம். ஆனா ஒருத்தரும் எழும்பி என்னனு பார்க்கல .உடனே இவனும் அப்படியே படுத்து தூங்கிட்டான். மறுநாள் காலைல வண்டிய சரி பண்ணிக்கிட்டு போகும் போது, அந்த சத்ததுக்கான காரணத்தை மண்டை கிட்ட கேட்டடான் உடனே அவரு அத உன்கிட்டசொல்லகூடாது. நீ போகலாம்அப்படின்னு சொல்லிட்டார். இவனும் வந்துட்டான். அப்புறம் ஒரு வருடம் கழிச்சு அதே வழியா வரும் போது அதே மாதிரி வண்டி பஞ்சர் ஆகி அதே மடத்துல தங்கவேண்டி வந்தது. அன்னைக்கு ராத்திரியும் அந்த சத்தம் கேட்டது. இவனும் மறுநாள் காரணம் கேட்டான். ஆனா மண்டை அப்பவும் சொல்ல கூடாதுன்னு சொல்லிட்டார். மறுபடியும் மூன்றாவது தடவையும் இப்படி நடந்தப்ப அவர்கிட்ட காரணம் கேட்டான். அவர் அப்பவும்மறுத்தார். உடனே இவனுக்கு கோபம் வந்திருச்சு. ஒரு தடவை கூட காரணத்த சொல்ல மாட்டங்குறீங்க. ஏன்னு கொஞ்சம் கோபத்தோட கேட்டான். அதுக்கு அவரு, நீயும் என்னோட வாசகர் வட்டத்துல மெம்பெர் ஆகு அப்ப சொல்றேன்னார்.

உடனே இவனும் வீட்டுக்கு போய் எல்லார்கிட்டையும் சொல்லிட்டு மண்டையோட சீடனாக போறேன்னு சொல்லிட்டு வந்துட்டான். வந்ததும் இவனும் ஆறு மாதம் கடுமையா மண்டையோட புத்தகத்தை படிச்சு எப்படி 180 நிமிஷம் வேலை செய்யறதுன்னு கண்டுட்டான். அதன் பிறகு நம்ம மண்டை இந்தாப்பா இந்த சாவிய வச்சு அந்த கதவ தொற அங்கதான் நீ கேட்ட கேள்விக்கு பதில் இருக்குன்னு சொல்லி ஒரு கதவ காண்பிச்சார் .
உடனே இவனும் தொறந்தான். அங்க இன்னொரு கதவு, பக்கத்திலஒரு சீட்டு அதில ஒரு கேள்வி. "கார் வச்சு இருந்த சொப்பன சுந்தரியை இப்ப யாரு வச்சு இருக்கா". இந்த கஷ்டமான கேள்விக்கான பதில் கண்டு புடிச்ச பிறகு அடுத்தசாவி தருவேன்னு மண்டை சொன்னார். இவனும் கண்டு பிடிச்சான். அடுத்தசாவியும் தந்தார். இவன் தொறந்தான். அப்புறம் இன்னொரு கதவு அதுக்கு ஒரு கேள்வி .
ஒரு வழியா அதுக்கும் பதில் கண்டுபிடிச்சி அந்த கடைசி கதவ தொறந்தான் அங்க தான் இவன் அந்த சத்ததுக்கானகாரணத்தை கண்டு புடிச்சான் . . .அது என்னனு உங்களுக்கு சொல்லனும்னா இங்க கீழ இருக்குற ACCOUNT NO ல ஒரு பெரும் தொகைய செலுத்தவும்.

மண்டை
ICICI BANK
A/C NO :6142999999123451
***********************************************************************************************
ப்ளீஸ்-ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான்:

சீக்கிரம் . 

இரும்மா ...

அய்யோ ! நேரம் ஆவுது . பயங்கர Problem ஆயிடும் . அவரு எந்நேரமும் வீட்டுக்கு வந்துடுவாரு .

ப்ளீஸ் ..

கொஞ்சம் வெயிட் பண்ணும்மா .

ஜஸ்ட் இன்னும் ரெண்டு பேர்தான் !

இன்னும் ரெண்டு பேரா ? அய்யோ !

சாந்திக்கு உயிர் போவது போல தோன்றியது .

கடவுளே ..

காப்பாற்று ..

இன்னும் ரெண்டே ரெண்டு பேர் தான் ... சில நிமிடம்தான் ...

அப்போதுதான் அது நடந்தது ...

டேய் ... 

பொறம்போக்கு ..

என்ன தைரியம் இருந்தால் .
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எங்க ஸ்டாண்டுல , நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துவே ! 

இறக்குடா எல்லா பாசஞ்சரையும் .

இனிமேட்டு எங்க ஸ்டாண்டில் நீ ஆட்டோவை நிறுத்தி சீட்டு ஏத்துனே .. ங் கொ ம் ....

த்தா ...
***********************************************************************************************
பைனல் கிக்:



***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

Friday 1 November 2013

சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! - சாரு டைம்ஸ் (02/11/13)

வாசகர்கள் அனைவருக்கும் சாரு விமர்சகர் வட்டத்தில் சார்பாய் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். எங்கள் அபிமான மண்டை இன்னும் நிறைய காமெடி பதிவுகள் படைத்தது எங்களை மகிழ்விப்பார் என்கிற நம்பிக்கையில் இந்த வார டைம்ஸில் நுழைவோம்.

இப்பொழுது எல்லாம் மண்டையின் ஒரிஜினல் பதிவுகளே பயங்கர காமெடியாய் இருப்பதால், அதை ஸ்பூப் செய்வது எங்களுக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது.
***********************************************************************************************
வாஜக்கர் கடிதம்:

அன்பின் சரோஜாதேவி அவர்களுக்கு,

என் பெயர் காம தம்புரான் ,குஜிலியம்பாறை யை சேர்ந்தவன்.
முன்னொரு காலத்தில் தெரிவில் காயிதம் பொருக்கி கொண்டிரந்த பொது, உங்களின் " புத்தகங்களான ,
"கஜ கஜா ; மஜ மஜா"
"பாப்பா போடவேமாட்டா தாழ்பாள் "
ஆகியவற்றை குப்பை தொட்டியில் கிடைக்கப் பெற்று , அவற்றை படித்தேன் .
அன்றிலிருந்து , உங்களின் புத்தகங்களை வாடகைக்கு விட்டு துட்டு பார்த்தேன் .

தற்பொழுது டாஸ்மாக் Bar ல் இணைப்பாக இருக்கும் ஒரு சிறிய சைட் டிஷ் கடை ஒன்றை ன் முதலாளியாக இருக்கிறேன். உங்கள் எழுத்துக்களின் பக்தன் நான். ஆம் பக்தன் என்று சொல்வதே சரியானது. நான் பிட்டு , நீலப் படங்கள் பலவற்றை பார்த்து முடித்தவன்..பிட்டு படத்தின் கிளு கிளுப்பிற்கும் ளுக்கும் உங்களின் எழுத்துக்களுக்கும் பெரிய வித்யாசம் எனக்கு தெரியவில்லை.

ஒரு பிட்டு பட நடிகர்கள் , ப்ளு பிலிம் இயக்குனரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு ப் ளு பிலிம் இயக்குனர் தான் பிட்டு பட நடிகர்களை தேர்ந்தெடுக்கிறார் என்பதில் நம்பிக்கையுள்ளவன் நான்,

அந்த வகையில் ஒரு கஜ கஜா புத்தக வாசகன் தனக்கான அபிமான எழுத்தாளரை தேர்ந்தெடுப்பதில்லை ஒரு சிறந்த கஜா கஜா எழுத்தாளனின் எழுத்தே, கஜ கஜா புத்தக வாசகனை அபிமானியாக்கி கொள்கிறது என்பதையும் நம்புகிறேன். தங்களின் எழுத்து என்னை வியாபித்ததை போல.

KT குஞ்சு "Moan" உங்களின் எழுத்துக்களை திரை ஓவியமாக்குவாரக !
நன்றி…!
********
டியர் காம தம்புரான்,

இது போன்ற கடிதங்கள் இப்போதும் ஒவ்வொரு வினாடியும் வந்து கொண்டிருக்கின்றன.  என்னுடைய கதைகளும் திரைப் படமாக்க முடியும். அதற்கு இந்தக் கடிதம் ஒரு சான்று.

தக்காளி குருமாவை . சிக்கன் சால்ன்னா என்று நினைத்து அதில் 50 பரோட்டாக்களை பிய்த்து போட்டு , தின்னும் பரோட்டா சூரிகளை பற்றி எனக்கு கவலை இல்லை

அன்புடன் ,
சரோஜா தேவி ரைட்டர் சாரு நிவேதிதா
***********************************************************************************************
சைபர் கிரைமில் சாரு நிவேதிதாத்தா ! 

சாரு நிவேதித்தாத்தாவும், அடத்தூவும், அடத்தூவின் ஆடி காரில் ஆடி ஆடி எழும்பூர் சைபர் கிரைம் அலுவலகம் வாசலில் இறங்கும்போது மணி காலை பத்து ! நாஷ்டா முடித்துவிட்டு வந்த இன்ஸ்பெக்டர் அன்பரசனுக்காக ஐந்து நிமிடம் வெயிட்டீஸில் - அங்கே இடது பக்கம் போட்டிருக்கும் மர பெஞ்சில் குத்தவைக்கிறார்கள் !

அடத்தூ : சாரு, சொன்னதெல்லாம் கரெக்டா நியாபகம் இருக்கில்ல ? 

சாரு : அதை எப்படி மறப்பேன் ? நான் ஜென் குருடா !! காலையில் குடிச்ச அர்க்கும், ஜக்கி சாமியார் வேப்ப்பிலை உருண்டையும் இன்னும் நியாபகம் இருக்கு !

அடத்தூ : தலைவரே, நாம இங்க வந்திருக்கிறது வட்டத்தை பற்றி கம்ளெயிண்ட் கொடுங்க. அவனுங்களை முட்டிக்கு முட்டி நல்லா நாலு தட்டு தட்டி இங்க உட்கார வைக்கனும்...

சாரு : முட்டீன்னவுடனே ஒன்னு நியாபகம் வருது...

அடத்தூ: யோவ் பொத்து, இது சைபர் க்ரைம் ஆபீஸ், கம்ளெயிண்ட் கொடுக்க வந்துட்டு என்னைய உள்ளாற உக்கார வெச்சுடாத !!

உதவி ஆய்வாளர் சத்யப்ரியா மேடம் உள்ளே வருகிறார் !!

டக்கென எழுந்து இரண்டு கைகளையும் நாமக்கல் கோழி போல நீட்டி வழியை மறிக்கிறார் சாரு...

சாரு : மேடம், ஐயாம் சாரு நிவேதிதாத்தா. தமிழ்ச்சூழலில் அதிகம் கொண்டாடப்படாத, ஆனால் ஓரான் பாமுக் அளவுக்கு கொண்டாடப்படவேண்டிய எழுத்தாளர். 

சத்யப்ரியா : யார் சார் நீங்க ? எனக்கு நிறைய வொர்க் இருக்கு. வேலை நேரத்துல தொந்தரவு பண்ணாதீங்க. 

அடத்தூ : மேடம் நீங்க எக்ஸைலை படிச்சதில்லையா ? 

சத்யப்ரியா : எக்ஸஸைஸ் பண்ணியிருக்கேன். யார் நீ, இந்த ஆள் கூட வந்தவனா ? இந்த கிழவனை நகரச்சொல்றியா இல்லை தூக்கி போட்டு மிதிக்கவா ? உள்ள ரைட்டர் சார் இருப்பார் அவர்க்கிட்ட போங்க...இப்ப உடனே வழி விடுங்க...

இரண்டு பேரும் டாமிடம் மாட்டிய ஜெரி மாதிரி பம்மி வழிவிடுகிறார்கள் !!!

இன்ஸ்பெக்டர் அன்பரசன் உள்ளே நுழைகிறார். கொஞ்சம் இலக்கிய ஆர்வம் கொண்டவர், உயிர்மை வாசகர், மாஸ்டர் டிரிகி முடித்தவர், தமிழ்ச்சூழலில் நடக்கும் இலக்கியச்சண்டைகள் பற்றி ரொம்பவே தெரிந்துவைத்திருப்பவர் !!!

அடத்தூ : சார், இளங்கோன்னு இன்ஸ்பெக்டர் இருப்பார்னு சொன்னாங்க. அது நீங்களா சார், இண்டர்நெட் ட்ரோலிங் பத்தி ஒரு கம்ப்ளைண்ட் கொடுக்கனும் !

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : அதுக்கு நீங்க சிபிசிஐடிக்கு தான் போகனும். அவர் ட்ரான்ஸ்பர் ஆகி ஒரு வருசம் ஆச்சே !! அவரை தெரியும் இவரை தெரியும்னு டுபாக்கூர் அடிக்காம பிரச்சனை என்னன்னு சொல்லுங்க...உங்களை எல்லாம் எனக்கு "நல்லா" தெரியும் !!

பேசிக்கொண்டே இன்ஸ்பெக்டர் அன்பரசனின் சீட்டுக்கு போகிறார்கள் !! 

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : டீ சாப்பிடுறீங்களா ? 

சாரு : இல்லை வேண்டாம் சார், டீன்னா சீலே தேயிலை மட்டும் தான் நான் குடிக்கிறது. இண்டியன் / அஸ்ஸாம் / காஷ்மீர் எனக்கு பல் சுளுக்கிக்கும்...

[இன்ஸ்பெக்டர் மனதுக்குள் - "க்கும். இந்த ஈரவெங்காயத்துக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல]

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ம் சொல்லுங்க சார், என்ன செய்யனும் ? 

சாரு : சார், இணையத்துல என்னைய கிண்டல் பண்றாங்க சார். அவனுங்களை கூட்டிட்டு வந்து முட்டிக்கு முட்டி தட்டனும் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : என்ன பண்றாங்கன்னு தெளிவா சொல்லுங்க...சும்மா கிண்டல் பண்றாங்கன்னு பொதுவா சொன்னா எப்படி நடவடிக்கை எடுக்கமுடியும் ? 

சாரு : சார், சாரு நிவேதிதா வாசகர் வட்டத்துல நான் என்ன எழுதினாலும் அதுக்கு பதிலுக்கு பதில் எழுதுறாங்க சார் ! 

அடத்தூ : ஆமாம் சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : எங்க எழுதுறாங்க ?

சாரு : சாரு நிவேதிதா விமர்சர்கர் வட்டதுல...என்னொட வட்டத்துக்கு போட்டியான ஒரு பேஸ்புக் குழுமம் சார்...கும்மிடிப்பூண்டியில குத்த வெச்சி கும்மியடிசீங்கன்னு நான் வாசகர் வட்டத்துல எழுதுனா, குத்தாலத்துல குனிய வெச்சு குண்டியடிச்சீங்கன்னு விமர்சகர் வட்டத்துல ஆபாசமா எழுதுறாங்க சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : ஒன்னும் பெருசா ஆபாசமா தெரியலையே ? இதுல என்ன சார் பிரச்சனை ? ஜாலியா எடுத்துக்கிட்டு போங்களேன் !! நெகட்டிவ் பப்ளிசிட்டி தானே ? இன்னும் ரெண்டு மூனு எச்சில் புக் வித்துட்டு போகுது !

அடத்தூ : சார், அது எக்ஸைல்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : தெரிஞ்சு தான் சொன்னேன். அல்லக்கை, நீ அடங்கு !

சாரு : [இடைமறித்து], எனக்கு யாரும் பணம் அனுப்பவிடாம செய்யுறாங்க சார். என்னோட வாசகர்களுக்கு எல்லாம் வைரஸால பாதிக்கப்பட்ட என்னோட பக்கங்களை வெப் ஆர்க்கைவ்ல இருந்து எடுத்து அனுப்பி என்னைய காறித்துப்ப வெக்குறாங்க சார். 

அடத்தூ : சாருவுக்கு இருந்த இணைய பெண் வாசகர்கள் அத்தனை பேரையும் காலி பண்ணிட்டாங்க சார். நாங்க இப்பல்லாம் வாசகர் வட்ட கூட்டம் போட்டா அது ஓரினச்சேர்க்கையாளர்கள் மாநாடு மாதிரி இருக்குது சார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : உங்க அல்லக்கைக்கு பிகருக கூட்டத்துக்கு வராதது தான் பிரச்சனை போலிக்கு...

சாரு : நோ நோ சார், நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. ஹீ ஈஸ் ஆல்சோ சைட்டர். ச்சே ரைட்டர். அவரோட முதல் 600 பக்க தலைகாணி இந்த புத்தக கண்காட்சிக்கு வருது...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சரி இப்ப என்ன தான் பண்ணனும் அதை சொல்லுங்க !

சாரு : அவனுங்க எல்லாரையும் புடிச்சு FIR போட்டு சுட்டு கத்தியால குத்தி கொலை செஞ்சு ஆயுள் தண்டனை கொடுத்து அது முடிஞ்சதும் மரண தண்டனை கொடுக்கனும் சார். ஜப்பான்ல ஹாருகி முகாரம்னு ஒரு ரைட்டர் டீக்கடை வெச்சிருக்கார் சார், அவரோட ஹிக்கோக்கி முக்காவு அப்படீன்ற சிறுகதைய ஆயா வெச்ச பாயான்னு முப்பது வருசத்துக்கு முன்னால மொழிபெயர்த்தேன். அதுல வரும் தண்டனைகள் அத்தனையும் கொடுக்கனும் சார்...

ரைட்டர் ஆறுமுகம் சில பைல்களோடு உள்ளே வருகிறார்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : வாங்க ஆறுமுகம்...

சாரு : [இருக்கையில் இருந்து எழுந்து] - ஹாய் ஆறுமுகம். ஐயாம் சாரு நிவேதிதா...தமிழ்ச்சூழலின் ஜென் குரு. உத்தம தமிழ் எழுத்தாளருக்கு முன், ரஜினிக்கு முன், இமயமலை தொட்ட ஒரே தமிழ் எழுத்தாளர், ஐ லவ் கனிமொழி...ஜாக்கி ஜட்டி எனக்கு சுடர்மணி..முன்னாள் நித்தி இன்னாள் ஜக்கி...

ரைட்டர் ஆறுமுகம் : [மனதுக்குள் : போடா பக்கி]. யார் சார் இது, சூரியன் படத்து கவுண்டமணி மாதிரி...

அடத்தூ : ஹி ஹி ஹி 

சாரு : [மனதுக்குள்] : என்னைய மதிக்காத இந்த ஆறுமுகம் அடிக்கிற ஜோக்கும் இவனுக்கு சிரிப்பா இருக்கு. இவன் மட்டும் ஐசிஐசிஐ அக்கவுண்ட்ல என்னைய பேயீயா க்ரியேட் பண்ணலைன்னா என்னைக்கோ கழட்டி விட்டுருக்கலாம்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் : சொல்லுங்க சார், எத்தனை பேர் மேல கேஸ் போடனும் ? 

சாரு : அது ஒரு 3800 பேர் கொண்ட கும்பல் சார். அத்தனை பேர் மேலயும் போடனும். 

இன்ஸ்பெக்டர் மற்றும் ரைட்டர் ஜெர்க் ஆகிறார்கள். 

இன்ஸ்பெக்டர் இருக்கையில் இருந்தே எழுந்துவிடுகிறார்...பேயறைந்த மாதிரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள்...

அடத்தூ : சாரு, என்னோட ரெண்டு FAKE ஐடிய எப்.ஐ.ஆர்ல இருந்து நீக்கி சொல்லிடுங்க...

சாரு : கண்டிப்பா செல்லக்குட்டி, வெல்லக்கட்டி... அதுல ஒரு காமெடி என்னன்னா அடத்தூ, நானே ரெண்டு புனைப்பெயர்ல அந்த வட்டத்துலயும் இருக்கேன் !!! 

அடத்தூ, சாரு இருவரும் ஹை-பை (Hi-Fi) செய்துகொண்டு சிரிக்கிறார்கள்...

இன்ஸ்பெக்டர் அன்பரசன் [எரிச்சலாக] : டேய் காலையிலேயே கோவம் வர மாதிரி காமெடி பண்ணாதீங்க...டேய் அடத்தூ, நீ கிளம்பு, சாரு வரமாட்டார்...

அடத்தூ : ஏன் சார் ?

ரைட்டர் ஆறுமுகம் : அதாவது தம்பி அடத்தூ, பொதுவா நாங்க பைனான்ஸியல் க்ரைம், பெண்கள் மீதான இணைய / தொலைபேசி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செய்யக்கூடிய வன்முறைகள் / க்ரெடிட் கார்டு மோசடிகள் மாதிரியான கேஸ்களை தான் எடுக்கிறது...ஏன்னா ஏராளமான டாக்குமெண்டேஷன் வேலைகள் இருக்கு...ஏற்கனவே ஒரு பெண்ணோடு ஆபாச சாட் செய்த விவகாரத்திலும், ஒரு வாசகரை பணம் வாங்கி ஏமாற்றிய வகையிலும் இந்த ஆளை நாங்க புடிக்கலாம்னு நினைச்சிக்கிட்டிருந்தோம். கைல வெச்சிருக்கேனே - இது எல்லாம் அதுக்காக ரெடி பண்ண பைல்ஸ் தான் !!! மூனு நாளைக்கு குனிய வெச்சு கும்மி அனுப்புறோம், நீ ரெமி மார்ட்டின் ரெடி பண்ணி வை !!! 


நாலைந்து காவல் அதிகாரிகள் தபதபவென உள்ளே நுழைந்து வடிவேலு கணக்காக - ராகமாக "ஆ ஆ ஆ " என்று சாரு கூவ கூவ அலேக் ஆக தூக்கி செல்கிறார்கள் !!!
***********************************************************************************************
ஒரு வேண்டுகோள்:

ஈரோடு நண்பர்கள் யாரவது இருக்கிறீர்களா? நான் எல்லா ஞாயிற்றுக்கிழமையும் மதியம் சிக்கன் குருமாவும், முட்டைப் பொரியலும் தான் சாப்பிடுவேன். வெங்காயத்தை நடுத்தண்டை நீக்கி பொரியல் செய்யலாம். சக்தி மசாலா சேர்த்து குருமா செய்யலாம். மசாலா அளவு ஒரு பாக்கெட். இங்கே அண்ணாச்சி கடையில் சக்தி மசாலா தீர்ந்துவிட்டது, ஈரோடு சக்தி தொழிற்ச்சாலையில் இந்த தூள் கிடைக்கும். யாரவது ஒரு பாக்கெட் வாங்கி அனுப்ப முடியுமா? உங்கள் ஊரிலேயே நிறைய கோழிப் பண்ணையும் இருக்கிறது, முடிந்தால் ஒரு கிலோ கோழியும் உடன் அனுப்பவும். தொடர்பு கொண்டால் விலாசம் தருகிறேன் chicken.guruma.india@gmail.com. மேற்கண்ட மசாலாவை சாப்பிட்டால் ஐம்பது வயதில் பைபாஸில் இருந்து தப்பிக்கலாம். (எனக்கு ஏன் பண்ணுனாங்கனு கேக்க கூடாது). கொழுப்பு குறையும், ரத்த அழுத்தம், சர்க்கரை இரண்டும் அளவாக இருக்கும். முக்கியமாக சிக்கன் சாப்பிட்டால் மறுநாள் காலையில் கக்கா போகும் போது வரும் எரிச்சல் குறையும்.

திண்டுக்கல் நண்பர்கள், எதிரிகள்,என்னை யாருன்னே தெரியாதவர்கள் யாரவது இருக்கீர்களா ?
சென்னையில் இருக்கும் திண்டுக்கல் தலைப்பா கட்டியில் , திண்டுக்கல் காரர்கள் கொடுக்கும் பணம் தந்தால் , எக்ஸ்ட்ராவா ஒரு முட்டையை பிரியாணியில் வைக்குரார்களாம் .
அத்துடன் , எலும்பு சாம்பார் ஒரு பாக்கட் எக்ச்ற்றாவாம் .
வேறு ஊர்காரர்களின் பணத்திற்கு இந்த Offer இல்லையாம்.
ஆகவே, திண்டுக்கல்லை சார்ந்த நண்பர்கள், எதிரிகள், வாலிப, வயோதிக அன்பர்கள் , ஆன்டிக்கள் , பாட்டிக்கள் , என்னுடைய அக்கவுன்ட்டுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறேன் 
***********************************************************************************************
தீபாவளி வாழ்த்துக்கள்…

அன்புள்ள சாரு நிவேதாவிற்கு, 

தீபாவளி வாழ்துக்கள். 

நீங்கள் ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு மறுநாள் உங்கள் பிளாக்கில் எழுதும் தீபாவளி புலம்பல்களை கண்டு கலங்கியவன் என்கிற அடிப்படையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். நீங்கள் என்ன எழுதினாலும் உங்களுடைய வாசக ரசிகர்கள் தீபாவளி பலகாரங்களை கொண்டு வந்து கொடுக்க போவதில்லை. இன்று அனைத்து ஹோட்டல்களும் வழக்கம் விடுமுறையாக இருக்கும். தங்கள் அன்பு மனைவி ஏதாவது உறவினர் வீட்டிற்கோ அல்லது பக்தி நிமித்தம் எங்கேனும் கோவில்களுக்கு சென்றிருக்க வாய்ப்பு அதிகம். 

உணவு கிடைக்காமல் நீங்கள் அலைய போவதை நினைத்தால் மிகவும் வருத்தமாக இருக்கிறது. மேலும் உங்கள் பாக்கெட் , வாலெட் எல்லாவற்றயும் துழாவினாலும் 20 ரூபாய் மட்டுமே இருக்கும். பத்திரமாக அந்த இருபது ரூபாய் வைத்து கொள்ளவும். 

இன்றும் "அம்மா உணவகம்" வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்க பட்டுள்ளது. இந்த அறிவிப்பை கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தவர்களில் நானும் ஒருவன். இந்த கடிதத்தை வாசிக்கும் நண்பர்கள் இதனை 'தந்தி' போல சாருவிற்கு தகவல் தெரிவிக்கும் படி கேட்டு கொள்கிறேன். 

காலை: 
இட்லி - 1ரூ (ஒன்றிக்கு)
சப்பாத்தி - 3 ரூ (இரண்டு சப்பாத்தி)

மதியம்:
தயிர் சாதம் - 3 ரூ
சாம்பார் சாதம் - 5 ரூ


மீண்டும் தீபாவளி வாழ்துக்கள் .
***********************************************************************************************
பைனல் கிக்:

  • இரவு அரட்டையால் சஹாராவையே ஈரமாக்கியதால் இன்று முதல் நீ, வெட் சாட் வேந்தன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய். 
  • பப்புவுக்கு சோறிட, குப்பி கொடுக்கும் வள்ளலே, இன்று முதல் நீ,குப்பி கொடுத்த குலசேகரன் என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்.
  • கேரட்டின் மகத்துவத்தை பாமினிக்கு உணர்த்தியதால், இன்று முதல் நீ, கேடு கெட்ட கேவலன் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படுவாய்
***********************************************************************************************

Monday 28 October 2013

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம் ? - சாரு டைம்ஸ் (29/10/13)

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம்: 

நாமக்கல் நண்பர்கள் யாரவது இங்கே இருகின்றீர்களா ?... ரெண்டு நாளாக என் வீட்டு கோழி முட்டை போடவில்லை. யாரவது ஒரு டஜன் முட்டையை என் வீட்டுக்கு அனுப்ப முடியுமா ?

ஒரு ஏழை எழுத்தாளனுக்கு முட்டை கூட தராத சமூகத்தில் வாழ்வது எவ்வளவு பெரிய அவலம் ??

விமர்சகர் வட்டத்தில் சிலர் எனக்கு அழுகிய முட்டையை அன்பாக அனுப்பி உள்ளனர் .

இந்நேரம் இது சீலேவாக இருந்தால் ஒரு ஏழை எழுத்தாளனுக்கு அவிச்ச முட்டையை அனுப்பி இருப்பார்கள். பாப்லோ நெருடா ஒருமுறை காண்டாமிருகம் முட்டை மற்றும் ஒட்டகச்சிவிங்கி முட்டை சாப்டதாக கூறினார் . ஆனால் நான் இன்றளவும் கோழி முட்டை , ஆமை முட்டை மட்டும் சாப்பிடுவது இந்த சமூகம் தந்த சாபம். 1 +1 = 180 என்று சின்ன வயதில் தப்பாக கணக்கு பண்ணியபோது ( டீச்சரை அல்ல ) எனக்கு முட்டை கிடைத்தது. அப்புறம் மார்கழி மாசமானால் கொசு முட்டை எடுத்து Colombian Pepper போட்டு பொடிமாஸ் செய்து சாப்பிடுவேன். இதன் செய்முறை கொஞ்சம் மரியாதையாய் கேட்டால் சொல்லுவேன்.

கிளி முட்டையை ஒருமுறை நண்பர் ராகவன் நாகேஸ்வர ராவ் பூங்காவின் பொந்தில் இருந்து எடுதுக்குடுத்தார் . அதை பக்குவமாக உடைத்து " ஆபிஸின்த்தே " என்னும் உயரக மது ஊற்றி , ஆலிவ் காய்கள் சேர்த்து வறுக்க வேண்டும். இதை சாபிட்டால் செத்தக்கிளி எழுந்து நிற்கும். 

ஆனால் இதெல்லாம் இவர்களுக்கு எங்கே புரிகிறது ?.. கோழிகள் முட்டையிடாமல் போனதால் என் வீட்டு சேவலை நான் சிவராஜ் சித்த வைத்தியரிடம் கூட்டி செல்ல முடிவெடுத்துள்ளேன். Shall I bring my cock there ? என்று போன் செய்து கேட்ட போது " அடி செருப்பால " என்று கூறி அந்த ரிசப்ஷனிஸ்ட் காரி துப்பினாள் .

என்ன மாதிரியான சேலத்தில் நாம் வாழ்கிறோம் ஐயா ?

யாரவது என் சேவலை சிவராஜிடம் கூடி செல்ல முடியுமா ?. யார் முன் வருகிறீர்கள் ?

முடியாதவர்கள் சேவலுக்கு ரெண்டு ஷக்கீலா CD அனுப்புங்கள். தினமும் சேவலை இரவு 11 மணிக்கு தலையணை மந்திரம் நிகழ்ச்சி பார்க்க வைக்க நான் கண்விழித்து இருக்க வேண்டி இருக்கிறது.

அதில் வரும் கில்மா டிப்ஸ் கேட்டும் என் சேவல் , கோழியை நெருங்க மறுக்கிறது.

வெறுத்துப்போய் என் சேவலே வாரமலர் அன்புடன் அந்தரங்கம் பகுதிக்கு " அன்புள்ள அம்மா " என்று கடிதம் எழுதுகிறது .

என்ன ஒரு அயர்ச்சியான, ஆயாசமான சூழல் இது.?

எழுத்தாளன் தான் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் சேவலும் அல்லவா பிச்சை எடுக்கிறது ?

இந்த சேவல் மட்டும் இல்லாவிட்டால் என் நாவலில் " கொக்கரக்கோ " என்ற கதாபாத்திரமே வந்திருக்காது.

Me , Myself and my cock என்ற புத்தகம் எழுதுவதில் பிசியாய் இருக்கிறேன். எனவே எனக்கு முட்டை அனுப்புங்கள்..என் சேவலுக்கு சேலம் டிக்கெட் எடுத்து தாருங்கள்.

என் சேவலின் அக்கவுண்ட் நம்பர் :

49050439584308099739342
கொக்கரக்கோ பேங்க்

***********************************************************************************************
எங்கள் விமர்சகர் வட்டத்தின் மீது அட...த்தூ மாமா கம்ப்ளைன்ட் குடுக்க போவதாக காமெடி பண்ணிகிட்டு இருக்கு. மண்டை கஷ்டம் வைக்க வேண்டாம் என்று நாங்களே கம்ப்ளைன்ட் ரெடி பண்ணி விட்டோம்.


உயர் திரு சென்னை கமிசனர் அவர்களுக்கு , 

எழுத்தாளர் சாறு நிவேதிதா எழுதி கொள்வது , ஐயா நான் இன்டர்நெட்டின் பிராட் செய்து என் பிழைப்பை ஓட்டி கொண்டு உள்ளேன் . சில நேரங்களில் பெண்களிடம் வெட் சாட் செய்வது பிடிக்கும் , நான் வாசகர் வட்டம் என்று ஆரபித்து நன்றாக இதை வியாபித்து என் பிழைப்பை ஓட்டி வருகிறேன் . தளபதி அனாமத்து ,பணகாரன் , டபுள் ரா , கில்வா மற்றும் சிலர் எனக்கு உதவி வருகின்றனர் . அனாமத்து தான் ஆள் பிடித்து தருவார் , இப்போது கணேஷ் சொம்பு என்பவர் சின்ன மாமாவாக உள்ளார் , அவர் பெண்கள் லிஸ்ட் எடுத்து அனுப்புவது அவர் வேலை . ஆனால் விமர்சகர் வட்டம் என்று ஒன்று ஆரம்பித்து சிலர் அதை தடுத்து வருகிறார்கள் . நேற்று என் வட்டத்தில் சேர வந்த ஒரு பெண்ணுக்கு 10 க்கும் மேற்பட்ட மெயில் அனுப்பி சேர விடாமல் தடுக்க முயற்சிக்கும் நயவஞ்சகர்களை கைது செய்து சிறையில் அடையுங்கள் . 

இப்படிக்கு சாரு நிவேதிதா .
மைலாபூர் 
பேங்க் அக்கௌன்ட் பெயர் : icici 
அக்கௌன்ட் நம்பர் :2345-345-4565

(குறிப்பு : FIR போட்ட பின்னர் ,உங்கள்ளால் முடிந்த தொகையை என் அக்கௌண்டில் செலுத்தி விடவும் )

***********************************************************************************************
காமகொடூரன் சாருநிவேதிதா வாசகர் வட்டத்தில் இணைவது எப்படி: 

புதியவர்கள் வட்டத்தில் இணைவது தொடர்பாக:

  • Request அனுப்பும் போது, தயவுசெய்து உங்களின் இ-மெயில் முகவரி மற்றும் மொபைல் எண் கீழே உள்ள இ-மெயிலுக்கு அனுப்பவும். 
  • டலிவரின் Chat வாசித்திருக்கிறீர்களா? ஆம் எனில் என்னன்ன chat ?
  • உங்களுக்கு எத்தனை நிமிடம் கழித்து Wet ஆகும் ?
  • உங்களுடைய Blood test report இருக்கிறதா ? ஆம் எனில் HIV Positiveவா ? negative வா ?
  • ஓசி சரக்கு வாங்கி தர முடியுமா ? ஆம் எனில் ரெமி மார்டின் , VSOP, Chivas regal, Bag piper, Marco pola, Kalyaani, MGM முதலியவற்றின் ரேட் தெரியுமா ?
  • வானத்தை பார்த்து "வெள்ளை காக்கா பறக்குது " என்று சொன்னால் " ஆமா ஆமா ஜோரா பறக்குது " ன்னு சொல்ல தெரியுமா ?..." முட்டையும் சேர்ந்து பறக்கிறது" என்று சொன்னால் உள்வட்டத்தில் சேரலாம் 
  • புத்தகத்திற்கு பீர் பூஜை பண்ண தெரியுமா ?? 
  • womenizer என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியுமா ?..(தெரிஞ்சா ப்ளீஸ் கெட் அவுட் )
  • 180 நிமிடங்கள் இயங்குவீர்களா ??
  • கமல் , ஜெயமோகன் , மனுஷ்யபுத்திரன் இவங்களை எல்லாம் திட்ட தெரியுமா ?¨
  • என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் என்று பொங்க தெரியுமா??
  • தலீவா யு ஆர் கிரேட் என்று எல்லாம் கமெண்ட் போட தெரியுமா ?
  • ஊரான் காச ஆடாய போட்டு ஜாக்கெட்டில் கரெக்டாக சொருக தெரியுமா ?
  • குதம் , புட்டம் , சுய மைதுனம் , ஸ்கலிதம் இந்த மாதிரி வார்த்தைகளை சம்பந்தமே இல்லாமல் அடிகடி பேச தெரியுமா ??
  • டலிவர் ரசிகர் வட்டத்தில் இணைய விரும்புவத்தின் காரணம் குறித்து சிறு விளக்கம் தரவும்.

E-Mail to ஒலக நடிகண்டாசாமி@gmail.com
***********************************************************************************************
கேரட் பாமினி:

என்னுடைய தூரத்து சொந்தக்கரார் ஒருவர் அரசாங்க மருத்துவமனையில் வாட்ச்மேனாக இருக்கிறார் , அவர் காக்கி யூனிபார்மில் இருந்த போது அவரை போலீஸ் கமிஷ்னர் என்று நினைத்து பாமினி என்கிற  பெண்ணிடமிருந்து வந்த புகார் கடிதத்தை வேட்டிக்குள் மறைத்து வைத்திருந்தார் , அதை ஒரு சந்தர்ப்பத்தில் பார்த்து விட்டு என்ன என்று விசாரித்தேன் , இந்த செய்தியை இங்கே பகிரக்கூடாது தான் , நீங்கள் யாரும் மேலாதிகாரிக்கு அவரை பற்றி ரிப்போர்ட் செய்ய மாட்டீர் என்ற நம்பிக்கையில் , அந்த புகாரை அப்படியே வெளியிடுகிறேன். பாமினியின் புகார் கடிதம் இதோ:

அன்புள்ள போலீஸ் மேஜர் ஐயா அவர்களுக்கு நலம் நலமறிய ஆவல் ,
என்னுடைய பெயர் கேரட் பாமினி , நான் எப்போது நகை வாங்கினாலும் கேரட் மீட்டரில் வைத்து அதன் தரத்தை சோதித்த பின்பே நகை வாங்குவேன் , அதுவே என் பெயருக்கு அடை மொழியாக மாறி கேரட் பாமினி என்றாகிவிட்டது .எனக்கு காமெடிகள் மிகவும் பிடிக்கும் , அதுவும் சீரியசாக முகத்தை வைத்துக்கொண்டு கைப்புள்ளை வடிவேலு ஸ்டைலில் எழுத்தாளர் என்று சொல்லி ஒருவர் காமெடி செய்வதாக கேள்விப்பட்டு அவருக்கு முகனூல் நட்பு கோரிக்கை அனுப்பியிருந்தேன் , ஆனால் சிலர் எழுத்தாளர் மிகவும் பின்நவீனத்துவவாதி என்றும் , கைதேர்ந்த 180 நிமிட உழைப்பாளர் என்றும் இன்பாக்ஸில் செய்தி அனுப்பியுள்ளனர் எனவே நீங்கள் தான் விஜயகாந்தைப் போல அந்த தீவிரவாதிகளை புடிக்க வேண்டும் , புடுச்சு ஜெயிலில் போட வேண்டும் , தேவைப்பட்டால் ராணுவ உதவியையும் உபயோகித்து அவர்களை புடிக்க வேண்டும் , புடுச்சு ஜெயிலில் போட வேண்டும் .

அதுவும் எழுத்தாளர் என்று தன்னை கூறிக் கொல்பவர் , 40,000 ரு கண்ணாடி , வெளிநாட்டு ஜட்டி , புட்டியுடன் அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியில்லை என்று இணையத்தில் பிச்சை எடுப்பார் , youtubeல் கடவுளைக்காட்டும் திறமைசாலி , நித்யானந்தரையே நடுங்க வைத்தவர் , தன் தாயை பழித்தாலும் விட்டு விடுவார் , ஆனால் நாயை பழித்தால் அதுவும் தெரு நாயை பழித்தால் பிடித்து புரண்டி வைத்து விடுவார் , அவ்வளவு இனப்பற்றுடையவர் , மாதத்தில் எந்த தேதிகளில் தன் அடிமைகளிடம் பணம் இருக்கும் என்று சரியாக கணக்கிட்டு சந்திப்பு நடத்தும் கணித மேதை, நான் ஒரு எழுத்தாளன் , நான் உன் ஆட்டோவில் வரவேண்டும் என்றால் நீ தான் எனக்கு காசு தர வேண்டும் என்று ஆட்டோகாரர்களுக்கே கிலி கிளப்பியவர் , இவருடன் நட்பு கொள்ள வேண்டாம் என்று எனக்கு தனி செய்தி அனுப்பியவர்களை பிடித்து இ.பி.கோ ..... தங்களுக்கு தெரியாத சட்டமொன்றுமில்லை , அவர்களுக்கு அதிக பட்ச தண்டனை வழங்கும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் யுவர் ஆனர் ,
தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

இப்படிக்கு
கேரட் பாமினி
***********************************************************************************************
பைனல் கிக்:

ராணுவ ஒழுங்குடன் சரக்கு அடிக்கும் மண்டையின் நிரந்தர அடிமைகளின் இராணுவ சிந்தனை:


***********************************************************************************************