Wednesday 24 April 2013

மேட்டர் ரைட்டரின் அமெரிக்க விசா அனுபவங்கள் - சாரு டைம்ஸ் (25/04/13)


மேட்டர் ரைட்டர் சாரு அவர்களில் அமெரிக்க விசா ரீஜெச்ட் செய்ய பட்டு உள்ளது. அதருக்கு எங்கள் விமர்சகர் வட்டத்தின் ரியாக்ஷன்.

அமெரிக்க விசா இன்டர்வியூ:

மண்டைக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்துட்டாங்களாம்.. விசா இன்டர்வியூல என்ன உரையாடல் நடந்திருக்கும்னு பார்க்கலாம்

Officer : May i know the purpose of your visit to United States .
மண்டை : பர்ஸ் எல்லாம் இல்லீங்க..

Officer : No Man....(man ஐ ஆடு மேன்னு கத்துமே அதுமாதிரி உச்சரித்தார்) i mean why do you want to go to united states of America ?
மண்டை : மீன் வாங்க ஒரு தம்பி இருக்காருங்க...சனி ஞாயிறு ஆனா கொண்டுவந்திடுவாரு...

Officer: what the fcuk ???
மண்டை : 180 நிமிட்ஸ்

Officer: where are you going to stay in US
மண்டை : me want to stay with sunny leone.

Officer: Which state are you going in USA?? Arizona, California, kansas,Maryland or something 
மண்டை: வேற எந்த ஸ்டேட் போகபோறேன் ??? எல்லாம் நம்ம Schizoid State தான்

Officer : no..no..no.. okay forget it.. Do you have any hotel reservation
மண்டை : yes yes... ராயர் காபே...டேபிள் நம்பர் 3

Officer  : how long you want to stay in United States
மண்டை : 6 feet

Officer: Have you made specific travel plans?
மண்டை: Yes, i go by aeroplane

Officer: how are you related to your sponsor?
மண்ட: he is my குஞ்சு in OfficerAmrica.

Officer: what is your arrival city in the US
மண்டை: yes, i am அறிக்கி but i don't do cheating!

Officer: which location do you plan to visit in the US
மண்டை: No, I don't have loose motion

Officer  : Do you have any bank balance ?
மண்டை : no.. me have account in all bank.. but no balance.

Officer  : get the hell out of here.
மண்டை : ஆட்டோ சார்ஜ் ஃபிஃடி ருபீஸ் இருக்குமா... me settle this after my vasagar vattam

Officer : what is vasagar vattam.
மண்டை : வட்டம் means round .. all my fans sit round and drink சர்க்கு.. மீ ஒன்லி ரெமி மார்டிங்

Officer: Secuirty !!!!! please send this guy out.
மண்டை: பீ கேர்ஃபுல் இதை பத்தி நான் சாரு ஆன்லைன்ல எழுதுவேன்.

Officer  :*&^%$^%$^%%^%$#%$#%$#%#%

 Next day மண்டை சாரு ஆன்லைன்ல் :

நேற்று அமெரிக்க தூதரகத்திற்கு சென்றிருந்தேன்...அவர்கள் நான் வந்திருப்பதை உடனே வெள்ளை மாளிகைக்கு தெரிவித்திருந்தார் போல.. வெளியுறவு செயலாளாரே லைனில் வந்தார். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வருவதால் எங்கள் நாட்டுக்கே பெருமை என்றார். மேலும் என்னுடைய ஆங்கில உச்சரிப்பு அப்படியே அமெரிக்கனின் உச்சரிப்பை போலவே இருக்கிறதே என்று வியந்தார். அடியேனுக்கு உலக மொழி நானூறு தெரியும் என்று கூறினேன். உங்களை போன்ற உன்னதமான எழுத்தாளர் ஒருவர் கூட எங்கள் நாட்டில் இல்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார். பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவருக்கு என்னுடைய அருமை தெரிகிறது ஆனால் எனக்கோ அங்கிருந்து திரும்ப மைலாப்பூர் வர ஆட்டோ சார்ஜ் இல்லை.. நான் கேட்டிருந்தால் ஓபாமா எனக்காக ஹெலிகாப்டரே அனுப்பி இருப்பார்.. ஆனால் அது எனக்கு தேவை இல்லை.. எனக்கு பணம் என் எழுத்தில் முலமாக தான் வர வேண்டும்.. பணம் அனுப்ப..

Account holder’s Name: அறிக்கி என்கிற அறிவழகன்
 Axis Bank Account Number: 999999999
 Branch: மயிலாப்பூர் முத்திர சந்து
***********************************************************************************************
இந்த அமெரிக்காவே இப்படி தான்...!!

தென்னமெரிக்க நாடுகளை என்னைக்குமே அமெரிக்காவிற்கு பிடித்தது இல்லை...பிடல் காஸ்ட்ரோ , ச்சே குவேரா போன்ற போராளி தலைவர்களை கொல்ல அமேரிக்கா தனி உளவு பிரிவையே வைத்துள்ளது.பனி போரின் இறுதி காலத்தில் இருந்தே அமெரிக்கா லத்தின் அமெரிக்க நாடுகளை எதிர்க்கும் போக்குடனே செயல்பட்டு வருகிறது.
நான் ஒரு சீலே நாட்டு சிங்கம், லத்தின் மொழியில் லங்கர் கட்டை உருட்டுபவன் என்று தெரிந்ததால் தான் என்னவோ அமெரிக்க அரசாங்கம் என்னுடைய ஜீரோ டிகிரி நாவலை பார்த்ததும் பயந்து விசாவை மறுத்து விட்டது.சே குவேராவிற்க்கு அடுத்து போராளி என்றால் அது நான் தான்... ஒரு கலக்ககாரனை இந்த அமெரிக்க அரசு எதிர்கொள்ள அஞ்சுகிறது.
என் அமெரிக்க நண்பர்கள் கெஞ்சினார்கள் .." தலிவா அமேரிக்கா வராவிட்டாலும் பரவா இல்லை ...அட்லீஸ்ட் .U.S.A ஆச்சும் வாருங்கள் என்று".நான் மறுத்து விட்டேன்.விசா வாங்குவதற்கு நான் என்னுடைய சக எழுத்தாளர்களை போல் அமெரிக்க Embassy மீண்டும் செல்ல முடியாது.

நான் சீலே , மடகாஸ்கர், எத்தியோபியா போன்ற நாட்டின் Embassy தான் செல்வேன்....அங்கே USA விசா கிடைக்காவிடில் தவறு என்னிடம் இல்லை..இது ஒரு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூர ஆபாசம்..அவளவு தான்.நான் இதற்க்கு எல்லாம் அஞ்ச போவது இல்லை.... 

இதை தான் நான் கூறுகிறேன் எழுத்தாளனாய் இருப்பது செம்ம சாலெஞ்ச் என்று.நான் புக்கர் பரிசோ , அல்லது ஆஸ்கார் அவார்டு வாங்குபோது இவர்களே என் வீட்டுக்கு வந்து விசா தருவார்கள்..அதில் ஐயமில்லை...

ஜென் ஞானி இப்ன் ஜில்பான்சி கூறுகிறார்...

" கொக்கு பற பற ..கோழி பற பற,,, Lufthansa கிடைச்சா ஓசில நீ பற "
எதுவுமே கிடைகாட்டா ஜிப்பை நீ தொற 
கீழ இருக்கு தர 
அதுல இருக்கும் பாரு நுர ..."

இதை தான் வலியுறுத்துகிறேன்.....

அமெரிக்கர்களை பழி வாங்க நான் அவர்கள் பக்கத்துக்குநாடான U.S.Aக்கு போக வேண்டும் ..அதற்க்கு விசா எடுக்க வேண்டும் 

அதற்க்கு டாலரில் செலவு ஆகும் ..
போன முறை மாதிரி ஐயப்பன் டாலர் , முருகர் படம் பொறித்த டாலர் அனுப்ப வேண்டாம்.காசு கொடுங்கள் 

Name : Thalivvvvvvvvvarrrrrrrrrr
Number :8957605745
Swiss Bank of Mylapore
***********************************************************************************************
சத்தியமான நம்ம மண்டை எழுதினது இல்லீங்க. விமர்சகர் வட்டத்து நண்பர் "இலக்கிய வாசகன்" பின்நவீனத்துவம் பற்றி எழுதின பதிவு.

இதுதான் அது – பின்நவீனத்துவம்!

தலைய சுத்தி மூக்கைத் தொடுங்க என்பது போல இருக்கும் இதன் விளக்கங்கள்! தயிர்சாத எழுத்தாளர்களின் விளக்கங்களோ பாமரன் பர்லாங்கு தூரம் போய் பார்க்க வேண்டியதாய் இருக்கும், புலிசாத எழுத்தாளர்(களி)ன் விளக்கமோ ‘எவ்வளவு தைரியமிருந்தா என்னுடைய எந்த புத்தகத்தையுமே படிக்காம என்கிட்டே இந்த கேள்விய கேப்பிங்க..?. எழுத்தாளர்கள் என்றால் இளிச்சவாயர்களா…?.’ என்பது போல டெரராக இருக்கும். அத்தகைய குதர்க்கமான தலைப்பு பற்றி ஏதோ எனக்கு எட்டியது.

ம்ம்ம்..ம்ம.ம்.. விஷயத்திற்கு வருவோம் PostModernism என்பதே பின்நவீனத்துவம் என்பதின் ஆங்கில பதமாகும் இதுவொரு கால அளவைகளுடனான பழக்க வழக்கங்களின் கூட்டுத் தொகுப்பு. பரிணாம வளர்ச்சியின் கத்தை கத்தையான தொகுப்புகளில் ஒன்று எனவும் சொல்லலாம். அந்தவகையில் நம்முடைய சமகாலத்து கத்தை தான் பின்நவீனத்துவம்.
முதலில் மனிதன் நிர்வாணமான காட்டுமிராண்டி, அப்றம் உணவு, நெருப்பு, ஆடை, உறவுகள்.. .. .. வட்டம், வானியல், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம். இந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் மனிதன் சில நூற்றாண்டுகளை எடுத்துக்கொண்டான் அந்தந்த நூற்றாண்டுகளில் அவனுக்கென சில மாறுபட்ட கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் இருந்தன. அப்படி படிப்படியாக மாறிய மனிதன் 19-ம் நூற்றாண்டின்ல் நவீனத்துவம் என்ற நிலைக்கு வந்தான்.

இந்த காலக்கட்டத்தில் ( இப்போதும் ) மனிதன் தன்னை போக்குவரத்து, பள்ளி, ஊடகம், வங்கி முக்கியமாக தொழில்நுட்பம் போன்ற சமாச்சாரங்களால் ஒரு வேலியில்லா சுழற்சி அமைப்பிற்குள் தன்னை வலுக்கட்டாயமாக அடைத்துக் கொண்டான் அது தான் நவீனத்துவம் (Modernism). இதுவொரு பொது மைய இயங்கியலை ஏற்படுத்தியத்தை தவிர பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை.

இவ்வாறு 19-ம் நூற்றாண்டில் மனிதன் தனக்குத்தானே அமைத்துக்கொண்ட சமூக அமைப்பின்மீது படிப்படியாக நம்பிக்கை இழந்தான்! இழந்தும் வருகிறான் (உங்களை நீங்களே கேட்டுக்கோங்க இந்த சமூக அமைப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?) இந்த நம்பிக்கையின்மை படிப்படியாக அதிகரித்து மனிதன் தனது வித்தியாசமான சிந்தனை மூலம் வேறொரு சமூக தகவமைப்பை கட்டமைக்க முயல்கின்றான் அதன் சிந்தனை வடிவமே பின்நவீனத்துவம். அதாவது ஆதியின் ஆடை, உணவு, நெருப்பு போன்றே மனிதன் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறான்.

நவீனத்துவம் தர்க்கம் மூலம் உண்மையை அறிவது, பின்நவீனத்துவம் சிந்தனை மூலம் உண்மையை அறிவது. பின்நவீனத்துவம் தர்க்கத்தை, வாதத்தை விரும்புவதில்லை ஏனெனில் வாதங்கள் அதிகாரங்களை மையப்படுத்துகின்றன! நவீனத்தின் தவறுகளை ஆராயும் பின்நவீனத்துவம் முன்னிறுத்தும் மிகப்பெரிய தவறே அதிகார மையம்தான். அதிகார மையமேன்றால் ஏதோ பணக்காரர், ஆட்சியாளர்கள் அல்ல நவீனத்தின் ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒரு அதிகார மையமாக நினைக்கிறார் அதாவது யாராவது தனக்கு கீழே இருக்கணும்னு நாம நினைக்கிறோம் இது மட்டுமே நவீனத்தின் சாதனை. இந்த வழக்கம் பின்நவீனத்தில் இருக்காது என்று சொல்ல முடியாது ஆனால் அவதானிக்கலாம். நவீனத்துவம் மக்களை சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை அல்லது வீடு விட்டா ஆபிஸ்-ஆபிஸ் விட்டா வீடு என்பதே உங்களின் சுதந்திரம் என்கிறது.

நூலின் நுனியில் கட்டிய சின்ன கன உருண்டையை பக்கவாட்டில் சுற்றினால் ஒரு வட்ட இயங்குதளம் கிடைக்கும். இதில் இயக்கும் சக்தியான கையையே பெரிதாக பேசி, விளிம்பில் இயங்கும் சின்ன கன உருண்டையைப் பற்றி பேசாததே நவீனத்தின் மிகப்பெரிய தவறாகும். ஒரு சமூகம் தனது அனைத்து பிரிவினைரையும் கவனிக்கணும் (உங்களை நீங்களே கேட்டுக்கோங்க நாம நம்முடைய சமூகத்தின் அனைத்து பகுதியையும் கவனிக்கிறோமா..?.)

ஆம் மேற் கூறியது நவீனத்தின் நிதர்சனமான உண்மை. அது சமூக விளிம்புகளை கண்டுகொள்ளவில்லை. திருநம்பிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ச்சேரி மக்கள் இப்படி பல பிரிவினர்களை நவீனத்துவம் மையத்தில் இருந்து பிரித்தது பிரிக்கிறது. ஆனால் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதித்த பின்நவீனத்துவ சிந்தனைகளால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. இதன் சமீபத்திய உதாரணங்கள் கலாச்சார பாரம்பரியமிக்க இந்திய அரசின் நீதி சபை ஓரினச்சேர்க்கை தவறல்ல என்றது! திருநங்கைகள் தேர்தல் வேட்பாளர்கள் ஆனார்கள் இப்படி நிறைய நிறைய. .. ஆம் நமக்குத் தெரியாமலேயே பின்நவீனத்துவம் நம்மை வேகமாக நெருங்குகிறது.

மேலும் பின்நவீனத்துவம் ஒரு செயலின் முடிவுகளை மட்டுமல்ல அதன் விளிம்பு விளைவுகளையும் ஆராய்கிறது. உதாரணத்திற்கு புகழ்பெற்ற ஐன்ஸ்டினின் சார்பியல் பற்றி மேற்கத்திய பின்நவீனத்துவ சிந்தனையாளர் இரிகேரி இப்படியொரு கேள்வியை எழுப்புகிறார் “சக்திவாய்ந்த அணுவாயுத தொழிற்சாலைகளை ஸ்தாபித்தது மற்றும் எமக்கு அவசியமான வாழ்க்கைச் சூழலுக்கு தேவையான உடல்ரீதியான எம் உயிரை கேள்விக்குட்படுத்தியதைத் தவிர்த்து, மாபெரும் சார்பியல்கோட்பாடு எமக்கு என்ன செய்தது?” e=mc2 exactly wt itZ done………..?. ஆமாம் எண்ண செய்தது..?.?. கேள்விகளை எழுப்புவதே பின்நவீனத்துவத்தின் பிரதான மூலதனம்.

இதை ஒரு அமைப்பென்ற வகையில் சொல்ல இயலாது. இதுவொரு நடைமுறை வழக்கங்களின் பிரத்தியேக மாற்றம் அவ்வளவுதான் இது மனிதருக்கு மனிதர் மாறுபடும். இதன் சுவாரசியமே இதுதான் பின்நவினத்துவம் என்று சொல்ல முடியாததுதான்!

1970களில் பிரெஞ்சு பகுதிகளில் இந்த சிந்தனை துவங்கினாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் மூலம் உலகமெங்கும் பரவியதாக அவதானிப்பு. பெரும்பாலும் பின்நவீனத்துவ சிந்தனைகள் படைப்பாளிகள் மூலம் அவர்களின் படைப்புகளில் இருந்து சமூகத்தில் விதைக்கப்படுகிறது. ஆர்க்கிடெக், ஓவியம், இலக்கிய துறைகளிலிருந்தே இந்த சிந்தனைகள் துவங்குகிறதாம். படைப்பாளிகளின் மூலமே சமூக மாற்றம் நிகழும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். மேலும் சமீபத்திய தமிழ் படைப்பாளிகள் பின்நவீனத்துவத்தை ஒரு அடைப்பிற்குள் அடைக்க முயல்வதாக ஒரு பொது குற்றச்சாட்டு உண்டு ஆனால் அது முடியாதது.

சமீபகாலங்களில் தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்ட்டிட்யுட் டெஸ்ட், ஸ்ட்ரெஸ் இன்டர்வியூக்களை அதிகம் நடத்துவதையும் அதற்கென பெற்றோர் குழந்தைகளை சின்னத்தில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளச் செய்வதும் பின்நவீனத்துவத்தின் ஆரம்பநிலை மாற்றத்திற்கான கண்முன் நிகழும் சான்றுகள்.

இதன் இன்னொரு சர்ச்சைக்குரிய விஷயம் செக்ஸ்! பின்நவீனத்துவத்தில் செக்ஸ் ரொம்ப ரொம்ப வெளிப்பாடு கிட்டத்தட்ட மனிதன் நிர்வாண நிலைக்கு செல்வான் என்பது போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இது பின்நவீனத்துவத்தின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயலும் வாதம். பின்நவீனத்துவம் என்பது மிக மிக சுதந்திரமான அமைப்பு எல்லா விஷயங்களிலும் அதில் செக்ஸும் ஒன்று அவ்வளவே- என்கின்றனர் பின்நவீனத்துவ வாதிகள்! ஆனால் ''சில அதி பின்நவீனத்துவ வியாதிகள்'' செக்ஸ் ஐ மட்டும் எடுத்துக்கொண்டு ஏனைய சமூகம் சார் எதிர்காலம் சார் பிரக்ஞைகளை குப்பையில் போட்டு விட்டு தாமும் பின்நவீனத்துவ வாதிகள் என்று குதிக்கின்றனர்! உண்மையில் இவர்கள் ''செக்ஸ் வாதிகள்'' மட்டுமே! இவர்களால் அதிலிருந்து வெளியே வர முடியாது! 

இந்த பின்நவீனத்துவ சிந்தனைகள் குறித்து உலகம் முழுக்க பரவலான வாதங்கள் நடந்து வருகின்றன என்றாலும் பெரும்பாலான விவாத போக்குகள் பின்நவீனத்துவத்தை குற்றம் சொல்லியே வருகின்றன. ஏனெனில் நவீனத்துவவாதிகள் மாற்றத்தை மறுக்கிறார்கள், அவர்களின் அதிகார பகிர்வை சுதந்திர அமைப்பிற்கு தர தயங்குகிறார்கள் தனிமனிதனின் வித்தியாச சிந்தனைகளை முடக்க நினைக்கிறார்கள். (நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இந்த மாற்றம் நிகழும் ஏனெனில் இந்த சமூக அமைப்பு அப்படி). என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்துவம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதுவொரு புரட்சிகர சிந்தனை வழிந்தோடல்.

கம்யுனிச சித்தாந்தங்கள் இருந்த இடத்தை (அவற்றின்மீதான நம்பிக்கையின்மையால்) கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கிறது பின்நவீனத்துவ சிந்தனைகள். இருப்பினும் இது தனக்கென தனி நேம் பிளேட்டை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா “இது ஏன் இப்படி இருக்கு..?. ஏன் இப்படி இருக்கக்கூடாது..?.ன்னு யோச்சிங்கன்னா நீங்களும் பின்நவீனத்துவவாதி தான். பெரும்பாலானவர்களுக்கு நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியாமலிருக்க, அவர்கள் அதை நுகராமல் இருக்கும் இந்த சூழலில் பின்நவீனத்துவம் நம்மை வேகமாய் நெருங்குவது விந்தை.
இதுதான் விஷயம் என்று சொல்ல முடியாத விஷயத்தைப்பற்றிய என்னுடைய விளக்கம்
 ***********************************************************************************************
கோவளம் சந்திப்பில் எடுத்த புகைப்படம்:


 ***********************************************************************************************

Thursday 18 April 2013

உனக்கு அங்க "வெட்" ஆகுதா. ?? - பெரியவர் சாட் சாரு - சாரு டைம்ஸ் (19/04/13)

சாருவின் அல்டிமேட் காமெடி பதிவுகள் தொடர்கிறது,படித்து மகிழுங்கள்..

ஜப்பான்ல ஜாக்கிசான்  கூப்புட்டாகோ.... !!!

பொதுவாக 420 என்று தொடங்கும் எந்த அழைப்பையும் நான் எடுப்பதில்லை.வெள்ளி கிரகத்தில் இருந்து ஏதாவது ஒரு "கால் " சென்டரில் இருந்து ஒரு பெண் " ஆர் யு மிஸ்டர் அ ..ல்..டி ..மே..ட் ..ரை ..ட் ..ட ர் ...?? "என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன். சீலே காரர்களுக்கு அல்டிமேட் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும். அதனால்தான் நான் சீலேவில் உண்டியல் குலுக்கியபோது போது என் பெயரை குப்பர்சிங் என்று வைத்துக் கொண்டேன்.

நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு போன் அழைப்பு. எடுக்கவில்லை. ( எடுத்தா கடனை திருப்பி கேப்பானுங்க ) பிறகு ஒரு கைத்தொலைபேசியிலிருந்து. தெரியாத எண். எடுத்தேன். ஒரு பெண் குரல். நீண்ட நாள் பழகியது போல் பேசி விட்டு ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் உங்களோடு பேச விரும்புகிறார் என்றார். அதிர்ச்சியில் ஒருக்கணம் உறைந்து போனேன். அண்டார்டிக்காவின் போக்கையே மாற்றிய 50 பேரில் ஒருவராகப் பேசப் படும் ஒழுத்தாளர் அவர். அண்டார்டிகாவில் மேயும் பென்குவின் என்ற பறவைகளிடம் உளவியல் ரீதியான ஆராய்ச்சி செய்தவர்.அந்த பறவைகளிடம் சென்று " எனக்கு கள்வெறி கொள்ளவைகிறாய்யடி பென்குவின் என்று காதல் வசனம் பேசியவர்.. ஆட்டோபிக்ஷன் முறையில் அந்த பென் குவினிடம் " நேற்று இரவு கனவில் உன் யோனி பருப்பை சுவைத்தேன் " என்று காதல் வசனம் பேசியவர்...அந்த பறவை பதில் ஏதும் தராததால் 
"ஏய்ய்ய் பென் குவின் ,,உனக்கு அங்கே WET ஆகுதா ? " என்று கேட்டு குனிந்து குனிந்து பென்குவினை பார்த்தவர் அந்த ஒழுதாளர் ... அதற்க்கு அந்த பறவை " டேய் மூதேவி !! ஒட்டுமொத்த அண்டார்டிகாவும் WET ஆ தான் டா இருக்கு" என்று காறி துப்பியதும் .. என்னை மாயவளியில் வீழ்த்த அந்த பென்குவின் செய்த சதி என்று ஜகா வாங்கியவர்....
ஓரிரு முறை சர்வதேச பாங்காக் பன்னாடைகள் கருத்தரங்குகளின் மாலைவேளையில் நடக்கும் காக்டெய்ல் பார்ட்டிகளில் சந்தித்திருக்கிறேன். அவ்வளவு தான்.
அவர் சொன்ன விஷயம் இன்னும் ஆச்சரியம். 90 டிகிரி படித்தேன். இந்தியாவில் இப்படி ஒரு நாவலைப் படித்ததில்லை; most astounding book. இன்னும் பலது சொன்னார். நான் அண்டார்டிகாவில் பென்குவினிடம் செய்த ஆராய்சியை நீங்கள் ஒரு பெண்ணிடம் சாட் மூலம் செய்துள்ளீர்கள்...வாவ் !! என்றார்.

கடைசியாக, “தில்லி வாருங்கள்; ஒருநாள் மாலைப்பொழுதில் சாவகாசமாக விஸ்கி அருந்தியபடி உரையாடலாம்” என்றார். மை காட், என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்த மாதம் தில்லி கிளம்பலாம் என்று இருக்கிறேன். ( வாசகர் வட்டம் மைண்ட் வாய்ஸ் :: எங்களாலையும் தான் நம்ப முடில தலிவா !! டெல்லி போறதுக்கு இப்படி ஒரு பிட்டா ??.வர வர ரீல் வண்டி வண்டியா ஓடுது " )

என் எழுத்து ஆங்கிலத்தில் சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு மிகவும் உறுதியாகத் தெரிந்த விஷயம். 90 டிகிரி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். white tiger புக்கர் பரிசு பெற்ற நாவல். அந்த நாவலை சமீபத்தில் நான் குஜராத் சென்றிருந்த போது ((இது எப்போயா நடந்தது ?? ஒரிசானு தானே நெனச்சோம்... ஒருவேள ஈரோடு பக்கம் , இல்ல தூத்துக்குடி பக்கம் இருக்கா ?? ) இரண்டே நாளில் படித்து முடித்தேன். காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் பத்து மணி வரை படிப்பேன். இந்த அளவுக்கு வெறித்தனமாகப் படிக்க வைத்த புத்தகம் இந்தியாவில் இல்லை. வெளிநாட்டில் mario vargas llosa. நான் சொல்ல வந்த விஷயம், ஒய்ட் டைகரை விட நூறு மடங்கு அதிகமாக 90 டிகிரி  யில் நான் சாதித்திருக்கிறேன். 90 டிகிரி வோடு ஒப்பிட்டால் ஒய்ட் டைகர் ஒரு ஜுஜுபி. ஒய்ட் டைகருக்கு புக்கர் பரிசு. 90 டிகிரி கிணற்றில் கிடக்கிறது. காரணம், அது இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. விரைவில் நடக்கும் என்று விரும்புகிறேன்…...

***********************************************************************************************

த்ரிஷா இல்லன்னா திவ்யா !!

இதையே நான் எத்தனை முறை கூறிக்கொண்டு இருக்க முடியும் என்று தெரியவில்லை..சினிமா டிக்கெட் வேண்டும் என்று பதிவு போட்டால் கண்டுகொள்ளாத என் வட்டம் ஒரு நடிகையை பற்றிய கிசு கிசு க்கு 4 லைக் போட்டிருப்பது மிகவும் ஆயாசமாய் இருக்கிறது...இதை தான் நான் தமிழ் எஹுதாலனாய் இருப்பது கஷ்டம் என்று கூறினேன்...அதிலும் இந்த சமந்தா என்பவர் யார் ?? என் முன்னாள் காதலி...!! ஆம்..என்ன எஹுதை படித்து கிறங்கி என் பின்னே அலைந்தவள்....ஆனால் எழுத்தில் எனக்கு இருக்கும் ஒருவித வெறி...அதாவது Blind Obsession.. அதாவது infatuation ...அதாவது obsessive compulsive writer disorder.. அதாவது ( அட போதும் சாமி ) ஒரு உன்மத்த நிலை கண்டு என்னை பிரிந்து சென்றவள் சமந்தா...இன்று அவள் திருமணத்தையே செய்தியை என் வட்டத்தில் வெளியிடுவது தான் ஆபாசம்..நீங்கள் அனைவரும் வெந்த புண்ணில் வெடி வைகிறீர்கள்....சரி விடுங்கள்....அட்லீஸ்ட் இதை கண்டித்து ஒரு கம்மென்ட் யாரவது போட்டீர்களா ??..இல்லை....

ஆனால் நான் இதற்கெல்லாம் கவலை பட போவது இல்லை ...லத்தின் அமெரிக்க எழுத்தாளர் ஒனவகோ தச்லேண்டின் சொன்ன ஒரு தத்துவத்தை பின்பற்றி வாஹ்வைதால் சமந்தா என்னை விட்டு போனது எனக்கு வருத்தம் இல்லை...80 களில் , 90 களில் கவர்ச்சியில் ஒரு கலக்கு கலக்கிய Samantha Fox என்னை காதலித்து கைவிட்டபோதே நன் கலங்கவில்லை..இதற்கெல்லாம் நான் கலங்கி விடுவேனா ??

அந்த இலத்தீன் எஹுதாளர் கூறிய தத்துவம் 

"சமந்தா இல்லன்னா சொனாக்ஷி சின்ஹா "" ( த்ரிஷா இல்லன்னா திவ்யா )

***********************************************************************************************
வாசகர் கடிதம் :

Dear aitel customer. You have not paid your bill for the months of january, february, march, april, Please pay the bill immediately. Or else your services will be disconnected. Thank you

அன்புகுறிய வாசகர் airtel அவர்களுக்கு நன்றி,january, february, march, april மாதங்களுக்கு உங்கள் வீட்டில் தங்குவதர்க்காக அழைத்திருக்கிறீர்கள்,ஆனால் என்னால் உங்களுடைய ஊர் Please க்கு வர முடியாது,ஒரு ஏழை எழுத்தாளனால் அவ்வளவு பணம் செலவு செய்து பயணம் செய்ய முடியாது,

இனி மேல் எனக்கு கடிதம் தமிழில் மட்டும் எழுதவும்,ஆங்கிலத்தில் வரும் கடிதம் படிக்க மொழிபெயர்ப்பாளரை தேடுவது சலிப்பாக இருக்கிறது,

உங்களுக்கு பதில் எழுத தாமதம் ஆனதுக்கு கூட காரணம் என்னுடைய மொர் பாத பூசாரி கடுமையான வேலை பளுவுக்கு இடையில் மாட்டிக்கொன்டது தான். ஆங்கிலத்தில் எழுதிய உங்கள் கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார்,உங்களுடைய மொழிநடை அப்படி,

உங்கள் அன்புக்கு நன்றி

***********************************************************************************************
அணுவிஞ்ஞானிகளின் மாநாடு:

இந்தியாவின் பாடத்திட்டத்தை மாற்ற அணுவிஞ்ஞானிகள் சிலர் ஒன்னு கூடி பேசிக்கிறாய்ங்க.... பிரதான விஞ்ஞானிக்கு மட்டும் மூளை வளர்ரதுக்காக "சோம பானம் " தருகிறார்கள். சைடிஷ்சாக ஆலிவ் காய்களை நசுக்கி ஊறுகாய் பாக்கெட்டில் வைத்து தருகிறார்கள். இதோ சில ஹைலைட்ஸ்....

 *4:38 நிமிடத்தில் ஒரு விஞ்ஞானி தன்னோட கோவத்த காட்டுறாரு பாருங்க யப்பா...

 *நெஞ்சில் நின்ற சில டயலாக்குகள்.

 "பாடத்திட்டம் தப்புங்க"

 "திட்டம் போட்டு பண்ணின பாடம் திட்டம் தானே " ( நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா...)

 * 4:52 வது நிமிடத்தில் இன்னுமோர் விஞ்ஞானி தியான நிலையில் இருந்து கடுமையாக சிந்திக்கிறார். அவர் விழிக்கும் போது " டேயி மொண்ண நாயே.. இன்னும் முடிக்கலையா நீயி " அப்டீன்னு பிரதான விஞ்ஞானியை பாத்து கேட்டுப்புட்டு "இவன் சரிப்பட மாட்டான்னு " மறுபடி தியான நெலைக்கு போயிடுறாரு.

 * 5:12 நிமிடத்தில் அனைவரும் கண்களை இறுக பொத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.

 * இங்கு யாருக்கும் மலையேறவும் , மரமேறவும் தெரியவில்லை என்று மூத்த விஞ்ஞானி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ( கொரங்கே.. கொரங்கே.... ஒன்னய மாதிரி கொரங்கா நாங்க? உனக்கும் தான் எழுத்தே வரல.. ஏதுனாச்சும் கேட்டோமா நாங்க? )

 * 6:08வது நிமிடத்தில் அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முகமாக தலீவர் தனது "நடுவிரலை" உயர்த்தி தனது எதிர்ப்பை காட்டுகிறார்.

 * 6:30இல் தான் 12 ஆன்டுகளாக ஆங்கிலம் படித்ததாக தலீவர் கூறுகிறார். ( ஓ ! படிச்சியா நீயி ?)

 * 6:35இல் "ஆனாலும் தன்னால் தனது தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆங்கிலம் வராது என்கிறார். ( இந்த லட்சணத்தில இந்த மொண்ண நாயி அருந்ததி ராய் ஆங்கிலத்தை குப்பைங்குமாம். )

 * 7:14வது நிமிடத்தில் ஆறே மாசத்தில் "மை ஹவுஸ், மை ஃபிரண்ஸ், மை டவுன்" அப்டீன்னு ஃபிரஞ்சில் ஒலக எலக்கியம் எழுதிவிட முடியும்னு தலீவர் சிதம்பர ரகசியத்தை கட்டவிழ்த்து விடுகிறார்.

 * 8:04ம் நிமிடத்தில் டாக்டர் ஜோன்சை தான் ரொம்பவும் மிஸ் பண்ணியதாக தலீவர் வருந்தினார்.

 * 8:35 "மெடிக்கல் ஷாப்பு எங்கேயாவது இருக்கு " ( பின்ன.. ஜேர்மன் போறேன்னு உதார் விட்டுட்டு போயி முதுமலை காட்ல நீயி நின்னுட்டு வந்தா , அங்க என்ன மெடிகல் ஷாப்பு , சூப்பர் மார்கெட்டு , மஸாஜ் சென்டரா இருக்கும்?)

 * 9:22 ஒரு உப அணு விஞ்ஞானி சந்தேகம் கேட்கிறார். "இஞ்சி சாப்பிட்டா நெஞ்சி எரியிற மாதிரி இருக்கே" ( டேய் மானம் கெட்டவனே .. இது உனக்கே ஓவரா தெரியலயா? இஞ்சி சாப்பிட்டா நெஞ்சி எரியாம பின்ன என்ன கு.... சா எரியும்?)

 * 9:30 ற்கு பின்பு மாநாடு "ஒலக சொகாதாரம்" பத்தி ஆரம்பிக்குது.

மாநாட்டின் அதிசிறந்த ஜால்ரா விஞ்ஞானிகளாக அந்த கறுப்பில் வெள்ளை கோடு போட்ட டீசேர்ட் அணிந்த விஞ்ஞானியும் , பின்னணியில் தனது முகம் காட்டாமல் "வெரிகுட் , சூப்பர், இந்தியாவை கண்டிக்கிறேன், மானே , தேனே, பொன்மானே " போன்ற அளப்பெரிய விஞ்ஞான சொற்பதங்களை உலகுக்கு அறிமுகம் செய்த அந்த விஞ்ஞானியும் தேர்வாகிறார்கள்.

 # கும்பலா சேர்ந்து குடிக்குது, ஒன்னு சிகரட் பத்துது, நாலைஞ்சி சேந்து அரட்டை அடிக்குது, இன்னொன்னு தூங்குது, சிலதுங்க என்ன நடக்குதுன்னு தெரியாமலே உக்காந்துக்கிட்டு இருக்குதுங்க.. கேட்டா எலக்கிய சந்திப்பாம்.

***********************************************************************************************
சாரு வாசகர் வட்ட சந்திப்பு!

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்