Monday, 17 June 2013

சிங்கத்திடம் இருந்து தப்பித்த சீலே சிங்கம் - சாரு டைம்ஸ் (18/06/13)

சிங்கத்திடம் இருந்து தப்பித்த சீலே சிங்கம் :

கோடு போட்ட டவுசர் சாரி டிசர்ட்: சார் உங்க வாழ்க்கையில நடந்த அதாவது வசமா மாட்டிகிட்டு தப்பிச்ச நிகழ்ச்சிய சொல்லுங்க சார்.

சாரு: ம்ம்ம்... ஒரு சம்பவம் ஞாபகத்திற்கு வருது...உங்கள்ள யாருக்காச்சும் சிங்கத்துகிட்ட மாட்டி தப்பிச்ச அனுபவம் இருக்கா...

எல்லா சொம்பும்: (பரணில் இருந்து ஒரே நேரத்தில் நழுவியது போல்) இல்ல சார். அந்த அளவுக்கு தைரியம் யாருக்கும் இல்ல. 

கோடு போட்ட : சார்! சிங்கத்துகிட்ட இருந்தா... நீங்க தைரியமானவர்னு உங்க எழுத்தில இருந்து படிச்சு புரிஞ்சிருக்கோம்.. ஆனா இவ்வளவு தைரியமானவர்னு எங்களுக்கு தெரியாது...சாரு சொல்லுங்க சார்.

அராத்து : சாரு! இத நீங்க எங்கேயும் எழுதலன்னு நினைக்கிறேன். அப்படி இருந்துச்சுன்னா நாங்க இப்ப நீங்க சொல்றத இணையம் பூராவும் பரப்பி கலக்கிருவோம் சாரு! சொல்லுங்க இண்ட்ரஸ்டா இருக்கு....

சாரு : ம்ம்ம்... சரி சொல்றேன் (பயபுள்ளய்ங்க எத சொன்னாலும் நம்ப தயாரா இருக்குதுங்க... ஹூம்) ஆனா இப்ப சொல்றத நெட்டுல போட்ற கூடாது. சத்தியம் பண்ணுங்க.

எல்லா சொம்பும் : (ஒருவரை ஒருவர் புரியாமல் பார்த்துக்கொண்டு) சரிங்க சாரு நீங்க சொல்றமாதிரியே செய்யுறோம். மொதல்ல அந்த நிகழ்ச்சிய சொல்லுங்க.

சாரு : நான் டெல்லியில இருக்கும்போது. என் பிளாட்டுல பக்கத்து வீட்டுல ஒரு மிலிட்டரி பஞ்சாபி பேமிலி இருந்துச்சு. அவங்களுக்கு ஒரு பொண்ணு. சும்மா கும்முன்னு இருப்பா. வீட்டுல ஒரு நாய்வேற வளத்தாங்க. இப்ப நான் வளக்கிற பப்பு சோரோ எல்லாம் அது பக்கத்துல சுள்ளாங்க. அது கிட்டதட்ட சிங்கம்தான். 
அது அவங்க சொன்னபேச்ச எல்லாம் கேக்கும். சூ...கடின்னு அவங்க சொன்னா போதும் ஒரே கடியில ஒரு கிலோ கறிய கவ்வி எடுத்துறும்.ஆனா அந்த பொண்ணு அழகா இருந்துச்சு.சும்மா ஹாய் சொல்றது பேசுறதுன்னு இருந்துச்சு.
ஒரு நாள் சும்மா நூல் விட்டு பாப்போம்னு.. அந்த பொண்ணுகிட்டே கொஞ்சம் ஜாலியா பேசிகிட்டு இருக்கும் போது “இப்ப உனக்கு கீழே வெட்டாகுதான்னு” கேட்டு தொலச்சுட்டேன். உடனே அந்த பொண்ணு அவங்கப்பன்கிட்ட போயி சொல்லிருச்சு.. அவங்கப்பன் சும்மா ஆறடிக்கு மேலே இருப்பான் மிலிட்டரி ஒடம்பு. அவன் ஒடனே “சாலே மதராசி” அப்படின்னு கோவமா கத்திகிட்டு நாய ஏவி விட்டுட்டான். அந்த நாய் எசமான் சொன்னத கேட்டு அடுத்த செகண்டு தொரச்சு பாருங்க என் கொல நடுங்கிருச்சு. அவ்வளவுதான் நான் எடுத்தேன் ஓட்டம்.. 
ஒரு பயலும் அப்படி ஓடியிருக்க மாட்டாங்க. சரியான ஓட்டம். நாயும் விடாம வெராண்டா முழுக்க தொரத்தி வருது. ரெண்டு அடி கேப்புல நெருங்கிருச்சு. அடுத்த செகண்ட் எம்மேலே பாஞ்சிருக்கும். நல்ல வேள நாய் வழுக்கி விழுந்துருச்சு. அந்த கேப்புல நான் இன்னும் வேகமா ஓடுறேன், அப்புறமும் எந்திருச்சு தொரத்துது. நானும் கீழே இறங்கி ரோட்டுக்கு வந்துட்டே ஓடுறேன். பின்னாடி திரும்பி பாத்தா பக்கத்துல வந்துருச்சு. எனக்கு பயம்.அடுத்த செகண்ட் ஒருகிலோ கறிய இழந்திருப்பேன்.
ஆனா பாருங்க நாய் திரும்ப வழுக்கி விழுந்துருச்சு. இப்படியே பக்கத்துல வர வழுக்கி விழுகன்னு நாலு தடவ நடந்துருச்சு. அந்த சமயம் பாத்து வந்த பஸ்ஸுல நான் ஏறுனவந்தான் சென்னையில வந்துதான் இறங்கினேன். அந்த நாய் இல்ல சிங்கத்துகிட்ட இருந்து தப்பிச்சுட்டேன். அப்புறம் அந்த டெல்லிபக்கமே தல வச்சு படுக்கிறது இல்ல. 

சொம்புகள் : (கேட்டு முடித்தவுடன் சிறிது நேரம் யாரும் எதுவும் பேசவில்லை. ஒரே அமைதி)

கோடு போட்ட..: (அருகில் கிளாசில் இருந்த சரக்கை ஒரே கல்பில் முழுங்கி கிளாசை கீழே வைத்து) சார்... கிரேட் சார்... அவ்வளவு பெரிய நாய் தொரத்தியும் நீங்க தப்பிச்சீட்டீங்க சாரு. அப்ப நீங்க நல்ல அதலெட் பாடின்னு நினைக்கிறேன். 

அராத்து: சாரு நானா இருந்தா பேண்டு ஒலப்பிருப்பேன்....

சாரு : அராத்து சரியா சொன்ன. அப்ப அந்த நாய் எதுக்கு வழுக்கி வழுக்கி கீழே விழுந்துச்சுன்னு நீங்க எல்லாரும் நினைக்கிறீங்க..
***********************************************************************************************

மறுக்கப்படும் கூலி :

To:
Daehsan Trading India Pvt Ltd
f. No.1-A &B, First Floor, B Block, 114, T. Nagar, Chennai 17.
From
Arikki aka arivazhkan aka charu
writter
universe literature (உலக இலக்கியம் தாண்டி, பிரபஞ்ச இலக்கியம் படைக்கும் பிதாமகனே என்று பிரான்சில் எனக்கு வைக்க பட்ட போஸ்ட்டரின் புகைப்படம் இன்றும் கைவசம் உள்ளது)
Chille 

Subject: Charges for advertisement

sir,
me the international Booker prize waiting list writer writing letter to you to charge for advertisement. yesterday my inbox come one mail. i open mail. there a letter ask how i keep young. i think think think n write about your company paste. that letter also i put in my blog. my blog daily world full 400000 ppl read family family. (குடும்பம் குடும்பமா). this family family buy your paste today. my writing so powerful. olympic committee give me nobel peace prize but i say no. me only Booker. one day night i sleep my nose make sound. sound so big my wife no sleep. so my wife put me into fridge n locked. inside fridge very cooling.. i sit night in fridge. that night i think think n write a book zero degree. that book tamil book. if that book english book i get booker. so me world famous writer america japan china chile orissa all world read my blog so all world buy your tooth paste. i am reason your tooth paste sells. so you sell one tooth paste give me one hundred rupees commission. so you sell 2 tooth paste u give me two hundred rupees and you sell 3 tooth paste u give me (உங்களுக்கு தெரியாத சட்டம் எதுவும் இல்லை மை லார்ட்... )

மேலே நீங்கள் காணும் கடிதம் 2012ல் நான் எழுதியது. எனது வலைதளத்தில் அந்த பற்பசை பற்றி எழுதியதும் அதன் விற்பனை 2000 மடங்கு உயர்ந்து உள்ளது. அதற்கு அடியேனின் எழுத்து தான் காரணம் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த லாபத்தில் எனக்கு ஒரு பங்கு வேண்டும் என கேட்பது தவறா?? தொடர்ந்து அவருக்கு மெயில் செய்து இப்பொழுது தினம் இரண்டு எஸ்.எம்.எஸ் அனுப்பி வருகிறேன். காலை அனுப்பி விட்டேண். மதியம் அனுப்ப வேண்டும். 

(இந்த எஸ் எம் எஸ் அனுப்ப 3,567ரூபாய்க்கு ரீசார்ஜ் வேறு செய்ய வேண்டி உள்ளது. ஆன்லைனில் ரீசார்ஜ் செய்வது எப்படி என தெரியவில்லை... கோயில் வாசலில் இருந்து எழுந்து கடைக்கு சென்று ரீசார்ஜ் செய்தால் என் இடத்தில் வேறு எவராவது அமர்ந்து கொள்கிறார்கள் பிறகு பஸ்டாண்ட் பஸ் ஸ்டாண்டாக நடந்து பிச்சை எடுக்க வேண்டி இருக்கிறது. அந்த பற்பசை அதிபர் மட்டும் எனது பங்கை அளித்து இருந்தால் இந்த நிலமை ஏற்படுமா எனக்கு? அவந்திக்கா வேறு சொல்லி கொண்டே இருக்கிறாள் நீங்கள் பெரிய ஏமாளி என்று. எனவே யாராவது என் எண்ணுக்கு ரீசார்ஜ் செய்து விடவும்.)

இன்னும் ஒரு வாரத்தில் பணம் எனக்கு வரவில்லை எனில் ஒரு லத்தீன் நாளிதழில் இது பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை. சிவப்பு காளான் ஓனருக்கே எழுதலாம் என்று பார்த்தால் அவருடைய மெயில் ஐடி தெரியவில்லை. கடிதம் போட்டால் அவர் கைக்குப் போகுமா என்றும் தெரியவில்லை. அதனால் லத்தீன் நாளிதழில் எழுதினால்தான் சரி. அவர் நிச்சயம் படிப்பார்.

கூலி மறுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால்தான் மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன். எவ்வளவு குறைந்த பணமாகவும் இருக்கலாம். விபரம்:

Account holder’s Name: K. அறிவுகொழுந்து

Account number: 0987654321

Branch: கபாலீஸ்வரர் கோவில் வாசல் Mylapore
***********************************************************************************************

சாரு: அண்ணாதுரையை படிப்பவன் சொரணை இல்லாதவன்.

கும்மாங்கோ: தல, சொரனைனா என்னான்னு நம்ம புது விளக்கம் குடுப்போம். வெக்கமே இல்லாம திட்டி லெட்டெர் போடுறவன் கிட்டயே பதில் எழுதிட்டு கடைசியில அக்கௌன்ட் நம்பர் குடுகிறது.
மனுஷ்யபுத்திரனை கழுவி கழுவி ஊத்திட்டு அப்புறமா உங்களை மிஸ் செய்தேன் ன்னு பிட்டு போடுறது.
சரக்கு அடிகிறதுக்கு மிஸ்கின் கிட்ட ஹார்மோனியம் வாசிச்சது.
"நித்தி"ய பாண்டிசேரி கார்ல போறப்போ தெய்வீக தரிசனம் கண்டேன் ன்னு சொன்னது, அப்புறமா அந்த ஆசிரமத்தில் அக்கிரமம் நடக்கிறது எனக்கு முன்னமே தெரியும்ம்னு பம்முனது
நீதானே என் புண் வசந்தம்ன்னு எழுதிட்டு, அப்புறம் கவுதம் கிட்ட வாய்ப்பு கேக்குறதுக்கு அந்த பதிவ தூக்கினது
womenizer னா பெண்களை பதிப்பவன்னு நெனசிட்டேன்னு அந்தர் பல்ட்டி அடிப்பது ஆனா eminem Michael Jackson, Dick Cunt போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரிஞ்சி வச்சிருகிறது...
காசு கறந்து கட்டிங் அடிக்கிறது.
சொந்த வீடு வச்சிகிட்டே வாடகை குடுக்கிறேன்னு சொல்லுறது .
மஹந்தா, வெள்ளி கிரக புத்தகம் ன்னு ரீல் சுத்துறது.
ரெமி மார்டின் பிச்சை எடுக்கிறது.
அந்த ஆட்சில கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் கூட நடப்பு பாராட்டிட்டு ஆட்சி மாறுனதும் ஆட்சியாளர்களை ஜால்ரா அடிக்க அணுவுலை பத்தி தினமலர் ல எழுதினது....நடுநிலையாம்..... ரெண்டு கட்சியும் அண்ணா பேரு, கொள்கை வச்சி தானே அரசியல் பண்ணுது....சொரணை இருக்குற மானஸ்தன் என்ன வெண்ணைக்கு அந்த ரெண்டு அகற்சி ஆளுங்களுக்கும் ஜால்ரா அடிக்கணும் ?? பேசாம திண்டிவனம் ராமமூர்த்தி கட்சிக்கு ஜால்ரா அடிக்க வேண்டியது தானே ...... அண்ணா பேர சொல்லலுற ஆட்களுக்கு சொரணை இல்லன அவங்களுக்கு ஜால்ரா அடிக்கிற ஆளுக்கு இருக்கிறது பேரு என்ன ??

மக்களே நல்லா பாத்துக்கோங்க.......இதுக்கு பேரு தான் சொரணை.
***********************************************************************************************

Wednesday, 12 June 2013

சாரு-ஜெமோ-மனுஷ் என்கிற 3 இலக்கியவியாதிகளுக்கு ஒரு திறந்த கேள்வி

இந்த பதிவின் வாயிலாக எழுத்தாள சிங்கங்களுக்கு (ஜெமோ, சாரு , மனுஷ் ..etc) சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

பதிவிருக்கு போகும் முன் ஜெமோவின் பாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும் படித்து விடவும். 

முதலில் நம் ஆட்கள் எழுத்தாளர்களிடம் காட்டும் அதிமேதாவித்தனம் மற்றும் எல்லாம் தெரிந்த மனோபாவம் இதற்க்கு காரணம் பெரியதாக ஒண்ணுமில்லை . எழுத்தாளர் என்றால் ஒரு படி தம்மைவிட உயர்ந்தவர், தனக்கு தெரிந்ததை விட கொஞ்சம் அதிகம் தெரிந்தவர் என்று ஆழ்மனதில் உள்ள ஒரு எண்ணமாகவே இருக்கும். அவரை கவர்ந்துவிடவோ, அல்லது பாரட்டுவாங்கவோ இல்லை உன்னை வென்றுவிட்டேன் என்று காட்டிவிட துணியும் ஒரு செயலாகவே இருக்கிறது.ஒரு எழுத்தாளரோ, கவிஞர் சிக்கிவிட்டால் அவரிடம் வாதம் செய்வது ஒன்றும் புதிதாக தெரியவில்லை. முதலில் நம்மவர்களிடம் எழுத்தாளன், கவிஞன் என்றால் எத்தகைய பிம்பம் இருக்கிறது ??. சங்க காலம் தொட்டே கவிஞர்கள் ஊர் ஊராக போய் வாதம் செய்து வென்றார்கள் என்று எல்லாம் படிக்கும்போது ஒரு சாமானியனுக்கு என்ன தோணும் ? கவிங்கனோ எழுத்தாளன் என்ற ஒருவனோ வாதம் செய்வதில் வல்லவர்கள் என்ற எண்ணமே மிகும்.அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் இன்றைய எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள் .....?

இன்று மனுஷ் அவர்கள் விவாதம் செய்யாத சானல் ஒன்று உண்டென்றால் அது கார்டூன் மற்றும் டிஸ்கவ்ரி சானலாக தான் இருக்கும். 
சாருவின் அரசியல் கட்டுரைகள் குறித்து சொல்ல வேண்டியது இல்லை.இப்படி ஒவ்வொருவரை பற்றியும் சொல்லிகொண்டே போகலாம்..கூறவருவது என்னவென்றால் எழுத்தாளன் என்றாலே இன்று விவாதம் என்ற நிலை ஆகிவிட்டது. இன்று சமூக பிரச்சனை என்ற ஒன்றை பற்றி விவதிகாத இலக்கிய ஆளுமைகளே இல்லை என்ற அளவில் டிவி, இணையம், பத்திரிக்கை எல்லாவற்றிலும் விவாதம் தான்.

இதை பார்க்கும் ஒரு சாமான்யனுக்கு என்ன தோன்றும் ?..அட...நம்ம எழுத்தாளர் அண்ணாச்சி வந்துடாரு...வாதம் பண்ணுவோம்...விவாதிப்போம் என்று தான் தோணும். அன்னைக்கு டிவி ல அப்படி பேசுனாப்ள நாமும் பேசி பாப்போம்என்று தான் தோன்றும்.
இலக்கியம் பற்றி பேச தோன்றும் என்று எண்ணுகிறீர்களா ??. ஜெமோ விடம் வாதம் செய்த அந்த பெரியவரை ஆதாரித்து பேசவில்லை. ஆனால் அவர் அங்ஙனம் பேசியமைக்கு இன்று நம் இலக்கிய ஆளுமைகள் நடந்துகொள்ளும் விதமும் ஒரு காரணமாய் இருக்க கூடும் என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.
மேலும் எல்லா எழுத்தாளர்களும் ஏன் சொல்லி வைத்தபடி இந்த புத்தகத்தை படித்திருகிறாயா என்று கேக்கிறார்கள் என்று புரியவில்லை.. சரி அதை விடுங்கள் ..எழுத்தாளனிடம் பேச என்ன தகுதி எதிர்பாகிரார்கள் ?? 
படிப்பு மேதமையா ?
நம் ஊரில் இன்னும் அது முழுதாய் சாத்தியமாகவில்லை.பதினென்கீழ் கணக்கு நூல்கள் எவை என்று இங்குள்ளவர்கள் அறிகிலர். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் வரலாறு கூட தெரியாத ஒரு சமூக சூழல் இருக்கிறது.அவர்களிடம் சென்று ஒலக இலக்கியம், ஓரான் பாமுக் லிடியா டேவிஸ் என்றால் அவனுக்கு என்ன தான் புரிந்துவிட முடியும் ?
3 இடியட்ஸ்
சொல்லிவைததாற்போல் இன்று ஜெமோ ஆதரவாளர்களும் சாரு ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து ஜெமோ அவர்களின் இந்த பதிவை வக்காலத்து வாங்குவது வியப்பை தருகிறது.. அந்த எழுபது வயது பெரியவர் ஏதோ படித்ததை கொஞ்சம் நஞ்சம் தெரிந்ததை வைத்து பேச முயற்சித்திருக்கிறார். அதை ஜெமோ தன்னுடைய மேதமையை காட்டி ஒரு அதட்டு அதட்டி வாயடைத்து விட்டார். ஆனால் திரும்ப திரும்ப தமிழ் சூழல் குறித்து ஒரு வித காழ்புணர்ச்சியுடன் பேசி வருவதில் சாருவை போல் தனக்கும் பிரியம் என்றும் நிருபித்துவிட்டார்.
நெஜமாகவே அப்படி என்னதான் தகுதி வேண்டும் எழுத்தாளரிடம் பேச ?
எழுத்து , எழுத்தாளுமை என்பது என்ன ?
மா ஞானமா ?
பிரபஞ்ச ரகசியமா ?
அது ஏதோ தமக்கு மட்டுமே வாய்திருப்பதை போல் ஒவ்வொரு எழுத்தாளரும் பேசுவது எரிச்சலை தான் தருகிறது. 

ஒரு குயவனுக்கு பானை மட்டுமே செய்ய தெரிந்திருக்கலாம்..ஆனால் உனக்கு பானை செய்ய தெரிந்தால் தான் நான் உன்னுடன் பேசுவேன் என்று எந்த குயவன் கூறியும் கேட்டதில்லை. ஆனால் நமது எழுத்து ஏலியன்கள் கூறுவது என்ன ? அவர்களுடன் விவாதிக்க பல புத்தகத்தை படித்திருக்க வேண்டும். அவர்களிடம் எதையாவது கேட்டு கடிதம் எழுதினால் என்னுடைய புத்தகங்களில் நீ எதையும் படிதிருப்பதாய்'தெரியவில்லை எனவே பதில் கூற இயலாது என்று ஒரு பதிவு வருகிறது. இப்படி தம்முடன் பேசுவதற்கே, வாதம் செய்வதற்கே ஒரு தனிப்பட்ட தகுதி வேண்டும் என்று என்னும் எழுத்தாளர்களின் மமதையை ஏன் யாரும் கண்டிக்க மறுக்கிறோம் ?

//எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்//
//நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது//
//உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது//
//நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?//
-இது ஜெமோ 

//காரட்டை வைத்து சுயமைதுனம் செய்துகொள்ளுங்கள் //
இது சாரு.

இப்படி ஓவொரு எழுத்தாளரும் சக மனிதரை வார்த்தைகளால் கூறு போட்டுவிட்டு அன்பு அறம் என்று பேசுவது தான் வேடிக்கை. சாரு ஒரு படி மேல சென்று தான் ஒரு ஜென் குரு என்கிறார்.ஒரு பேச்சுக்கு கேக்கிறேன். இந்த எழுத்தாளர்களை சீன்டியவர்களை திட்டுவது அவர்கள் வரையில் நியாயமாய் இருக்கலாம்..ஆனால் எதற்க்காக அந்த நிகழ்வை எல்லாம் ஒரு பதிவாய் எழுத வேண்டும் ?. உங்கள் அறிவை திட்டி காட்சிபடுத்தியாகிற்று. ஆனால் அந்த பெரியவர் இணையம் பயன்படுத்தும் நபராய் இருப்பின் அவருடைய நிலையை நினைத்து பாருங்கள் ?..அந்த பெரியவர் மட்டுமல்ல சாரு கழுவி கழுவி ஊற்றிய பாமினி ஏனையோரும் இதில் அடக்கம்.

அவர்கள் மனதில் ஊரே தான் அசிங்கபட்டதை பற்றி தான் பேசுகிறது என்ற எண்ணம் எவளவு கொடூரமாய் காயப்படுத்தும் ?? அதற்க்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் இந்த எழுத்தாள சிங்கங்கள் ? ஒரே ஒருமுறை தன்னுடைய மேதமையை காட்ட முயன்ற அந்த பெரியவர் மற்றும் பாமினிக்கு இந்த எழுத்தாள சிங்கங்கள் ஒரு பதிவின் மூலம் நித்தம் நித்தம் கூறு போடுவது தர்மமா ??. இன்று பாமினி என்றாலே சாரு திட்டிய பெண்..பாண்டிச்சேரி பெரியவர் என்றாலே ஜெமோ திட்டிய பெரியவர் என்று யுவக்ரிஷ்ணா, அதிஷா, அராத்து, கருந்தேள் கண்ணாயிரம் விஜயபாஸ்கர் விஜய் முதலிய எல்லாம் இணைய பிரபலங்களும் பேசியபின் அந்த அந்த பெரியவர் நிச்சயம் எவரிடமும் சென்று இலக்கியமோ, அல்லது தன்னுடைய எழுத்து மேன்மையை காட்ட போவதில்லை...ஆனால் இதை எண்ணி ஒரு எழுத்தாளன் பெருமைப்படுகொள்ள இயலுமா ?? அவர்கள் ஒருமுறை செய்த விஷயத்திற்காக ஒரு பெரிய பதிவு எழுதி நான் இவனை இப்படி அடக்கி ரிவீட்டு அடித்துவிட்டேன் என்று கூறிகொள்வதில்' என்ன பெருமை வந்துவிட போகிறது தெரியவில்லை..ஒரு வகையில் பார்த்தால் அவர்களை விடவும், தன்னுடைய மேதமையை காட்ட அவர்களது சிறு தவறை ஒரு பெரிய பதிவு எழுத ஒரு கருப்பொருளாய் எடுத்துகொள்ளும் இந்த எழுத்தாளர்கள் செய்வது ஒன்னும் பெரிய வித்தியாசமானதாக இல்லை..தராசில் வைத்து பார்த்தால் அந்த முகம் தெரியாத மனிதர்களை நாறடித்த எழுத்தாளர்கள் பக்கம் முள் சாய்ந்து இருக்கபோவது இல்லை.

எழுத்தாளன் என்றால் எதாவது கேள்விகேட்டு இப்படி இணையத்தில் கூறு போட்டு அசிங்கபடுதுவான் என்றால் ஒரு பாமரனுக்கு எப்படி இலக்கியம் என்றால் ஆர்வம் வரும் .? இலக்கியவாதி என்றாலே இப்படி தான் என்று எண்ண தோன்றுவதில் ஒரு பாமரனுக்கான நியாயவாதங்களை குடுத்தது இந்த எழுத்தாளர்களின் செய்கை தானே... இலக்கியம் ஒன்ற ஒன்றில் இருக்கும் தங்கள் மேதமை மூலமே அனைவரைவிடவும் தான் உயர்ந்தவன் என்ற மனப்பாங்கு இருக்கும் வரை எந்த வாசகனும் எழுத்தாளனை நெருங்க போவது இல்லை..இத்தகைய செய்கைகளின் மூலம் எழுத்துக்கும் வாசகனுக்கும் இருக்கும் இடைவெளியை அதிகபடுதியத்தை தவிர வேறு எண்ண நடந்து இப்போது.
சாதி பற்றி பேசியதால் கொந்தளிக்கும் எழுத்தாளர்களை வரவேற்கிறேன்....ஆனால் தான் வானத்தில் இருந்து குதித்து வந்தாதாய் நினைத்து இலக்கியம் அறிந்த அறிவாளி, இலக்கியம் அறியா பாமரன் என்ற மிகப்பெரிய பாகுபாடை உருவாக்கிய குற்றம் இவர்களையே சாரும்...சாதி பாகுபாட்டை காட்டிலும் அறிவு வைத்து பாகுபாடு பார்க்கும் இந்த எழுத்துலக பிரம்மாக்கள் செய்வது தமிழ் சேவையா ??..இது தான் தாங்கள் இலக்கிய அண்ணைக்கு செய்யும் கொடையா...மெல்லிய மனித உணர்வுகளை காயப்படுத்திவிட்டு எவளவு கடவுளை பற்றி கூறினாலும் அது பிரோஜனம் இல்லாத ஒன்றாகவே தெரியும் மக்களுக்கு .அப்படி ஒன்றும் சுயமரியாதையை இழந்து ஞானம் பெற்றுக்கொள்ள எவரும் இங்கு கியு கட்டி நிற்கவில்லை..போய் ஓரமாய் பிதற்றுங்கள் என்று கூறவே தோன்றுகிறது..

புத்தர் வாழ்வில் ஒரு சம்பவம்.
தன் மாணவனை அழைகிறார் புத்தர் . அருகில் உள்ள ஊருக்கு சென்று ஞானம் தேட சொல்கிறார் . 
அவன் ஒப்புக்கொள்கிறான்.
அங்கே மக்கள் உன்னை தூற்றினால் என்ன செய்வாய் ?
" என் மமதை அழிய அவர் வழிவகுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன்." என்கிறான் அந்த இளைய பிட்சு
புத்தர் மேலும் கேட்கிறார் 
" உன் உடமைகளை அவர்கள் பறித்து கொண்டால் என்ன செய்வாய் ? " என்று ..
அவன் கூறினான் " என் பொருட் பற்றை அவர்கள் கலைக்கிறார்கள் என்று தெளிவடைவேன் "
அவர்கள் உன்னை கொன்றுவிட்டால் என்ன செய்வாய் ?
" நான் அடைய விழையும் முழு விடுதலையை அவர்களே எனக்கு வழங்கிவிட்டார்கள் " என்று எண்ணி ஆனந்தம் அடைவேன் என்றான்.

நீ இப்போதே ஞானம் அடைந்துவிட்டாய் !! நீயே ஞானத்தை போதிக்க தகுதியானவன் ..அந்த ஊருக்கு சென்று ஞானம் போதி என்று அனுப்பி வைக்கிறார்.

இது ஒரு புனைவு கதையாய் கூட இருக்கட்டும்..ஆனால் இது கூறும் உண்மை இதுவே..கீழிருப்பவர் நிலைக்கு இறங்கும் பக்குவம் இருப்பவர்கள் மட்டுமே ஞானம் போதிக்க தகுதி உள்ளவர்கலாய் இருக்க முடிகிறது..சிலுவையில் அறைந்தும் அனைவரையும் நேசிக்க விழந்த இயேசு பற்றி படம் எடுக்கும்முன், எந்த நிலையிலும் எவரையும் மனதளவில் காழ்புணர்வு காட்டாத ஜென் ஞானிகள் பற்றி எழுதும் முன்னரும் இந்த எழுத்தாளர்கள் தாங்கள் அவ்வாறு இருக்கிறோமா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் நலம்...இவர்களாலே அப்படி இருக்க முடியவில்லை என்னும்போது எப்படி எழுத்து என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்கள் பக்குவமாய் அல்லது நீங்கள் சொல்வதுபோல் எழுத்தாளனுடன் "பேச தெரிந்த அளவுக்கு ஞானத்துடன் " இருந்துவிட முடியும் ??..இன்ற இவர்கள் உமிழும் எச்சில் இவர்கள் முகத்தில் இவர்களே உமிழ்வது போல் தாம்.

கீழ்ஜாதி என்று ஒடுக்கப்பட்ட மனிதர்களை கூப்பிட்டு பூணுல் மாட்டி ஆனந்த கூத்தாடிய என் தலைவன் பாரதி எங்கே !
எழுத்தாளர்களை தெரியவில்லை , உலக இலக்கியம் தெரியவில்லை என்று தமிழ் சமூகத்தை சாடும் நீங்கள் தான் எங்கே ??

இன்று நிலவுவதை விட எம்மான் பாரதி காலத்தில் , என் உயிர் பாரதிதாசன் காலத்தில் உலக இலக்கியஞானம் இருந்துவிடவில்லை...ஆனால் எந்த ஒரு கணப்பொழுதிலும் பாரதி தமிழ் சூழல் குறித்து சாடியதில்லை....மாற்றவே முனைந்தார்கள்....

நீங்கள் அவர்கள் அளவிற்கு எழுதிவிடவும் இல்லை.அவர்கள் அளவுக்கு தமிழை நேசித்துவிடவும் இல்லை... தமிழ்நாட்டில் பாரதி போல் எவனும் வறுமையில் செத்து'விட மாட்டான்...ஆனால் அவர் ஒருபோது தமிழை சாடியது இல்லை.-
ஆனால் நீங்கள் ஒரு இலக்கிய உலகின் விடிவிள்ளியாய் மாறிவிட்டோம் என்ற நீர்க்குமிழி எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள்..

முகம் தெரியாத அந்த பெரியவரின் மனதிற்கு, பாமினி போன்ற ஏச்சுகளை வாங்கிய அந்த அத்மாகளிடம் மானசீகமாகவது மன்னிப்பு கோருங்கள். அவர்கள் இனி சந்திக்க போகும் அந்த கேலி பேச்சுகளின் வலியை உங்கள் எந்த பெரிய இலக்கியமும் , படைப்பும் துடைக்கபோவது இல்லை.

மாங்காய் பத்தையை மிளகாய்பொடி தடவி விற்கும் ஒரு கிழவி, ராட்டினம் சுத்தும் பொக்கைவாய் கிழவன், எச்சில் பண்டத்தை பகிர்ந்துகொள்ள நம்மிடம் நீட்டும் சளி ஒழுகும் சிறுவன்முதலிய ஜீவன்கள் காட்டும் அன்புஎதுவும் அறிந்தில்லை உங்கள் பின், முன், சைடு நவீனத்துவங்களை.... மனிதரை மனிதராய் அறிவுக்கு அப்பால் இதயம் வாயிலாக பார்க்கும் வித்தையை மட்டுமே வாழ்க்கை அவர்களிடமிருந்து நமக்கு கற்றுத்தருகிறது...எமக்கு அது போதும்,,

இறுதியாய் ஒன்று.
பல உருமாற்றம் அடைந்து, பல படையெடுப்புகள் கடந்து , களப்பிரர் காலத்தையும் கடந்து வாழும் எம்மொழியை நீங்கள் வந்து தான் வாழவைக்க வேண்டியது இல்லை.தமிழை தமிழே பார்த்துக்கொள்ளும்..அதை காப்பதாய், சேவை செய்வதை நினைத்து பாமரரை கடித்து குதறுவதை மாட்டும் நீங்கள் நிருத்திகொண்டால் நலம். 

உங்களை சுடுபவர்கள் அனைவரும் கோட்சே க்களாக இருக்கலாம்...ஆனால் நீங்கள் மகாத்மா இல்லை என்பதை உணருங்கள்.
நாளை காலை கழிக்க போகும் மலம் பாமரருக்கும் , எல்லா இலக்கியத்தை கரைத்து குடித்த எழுத்தாளனுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும் 

- பாம்பாட்டி சித்தன்
***********************************************************************************************

Sunday, 12 May 2013

மண்டையின் எக்சைல் பார்ட் 2 லீக்டு பேஜ்ஸ் - சாரு டைம்ஸ் (12/05/13)

எங்கே இருகின்றீர்கள் கொக்கி ?????

புலம்பல் கட்டுரைகள் எழுதுவதை நான் நிறுத்திவிடலாம் என்று நேற்று ரெண்டு பெக் ரெமி மார்டின் அடிக்கையில் முடிவெடுத்தேன்..ஆனால் இந்த எழவெடுத்த தமிழ் சமூகம் என்னை விட்டால் தானே..நண்பர் கொக்கி குமார் போன் செய்தார் ...

 " சாமான் வாங்க வேண்டி இருக்கிறது ..சூப்பர் மார்க்கெட் போகலாமா ? "

 ...சாமானை வாங்க ஏன் அங்கு போக வேண்டும் ?....என்னிடம் 180 நிமிடம் இயங்க கூடிய ஒரு அற்புத சாமான் இருக்கிறதே ?? 

அட தலிவா !! நான் வீட்டுக்கு மளிகை சாமானை சொல்லுகிறேன்...

சரி கொக்கி.. ஒரு 4 மணிக்கு என்னைய பிக் அப் பண்ணிகோங்க !

மகாமுத்ராவில் ஒரு காபி அடித்துவிட்டு நாங்கள் இறங்கிய இடம் Reliance Fresh. அங்கே தான் அந்த ஆபாசம் நடந்தது..

கொக்கி பாட்டுக்கு ஏதோ ஏதோ பொருட்களை எடுத்து போட்டு கொண்டு இருந்தார்...அது சரி..அவரும் ஒரு காமன் மேன் தானே...பொருட்களை வாங்கி தானே ஆக வேண்டும்...என்னை போன்ற எக்கிச்ச்டுகள் வீட்டில் தானே பொருட்கள் வந்து கொட்டும் 
( கொக்கரக்கோ : ஆமா ஆமா , எவன்கிட்டயாசும் ரெண்டு பிட்டு போட்டா அவன் வந்து வாங்கி குடுத்துட்டு போவான் )

அங்கே இருந்த brittania பிஸ்கட் பாக்கெட்டிடம் பேச்சு குடுத்தேன்...
 (கொக்கரக்கோ : யோவ் ! பாக்கெட் எங்கயாச்சும் பேசுமா?? பேசுமா ?? பேசுமா ??)

 (கும்மாங்கோ : பின் நவீனத்துவத்தில் உயிருள்ளவை , உயிரற்றவை என்ற பேதம் இல்லை ..அதுவும் இது கிரக முன் , பின், சைடு நவீனத்துவம் )

பதில் ஏதும் வரவே இல்லை...அது மட்டுமல்ல நூடில்ஸ் பாக்கெட் , டீ பாக்கெட் என்று எதுவுமே பேசவில்லை...

சரியாக அந்த நேரம் பார்த்து கொக்கி வந்தார்..

என் தல பண்ணுறீங்க ??

சும்மா பேச்சு குடுத்தேன் கொக்கி....நீங்க வேற போய்டீங்க..டைம் பாஸ் ஆகல...அதான் 

 அது எப்படி தல பேசும் ??

பின் நவீனத்துவத்தில் உயிருள்ளவை , உயிரற்றவை என்ற பேதம் இல்லை ..அதுவும் இது கிரக முன் , பின், சைடு நவீனத்துவம் ...ஆனால் ஒரு தமிழ் எழுத்தாளனை ஒரு ரொட்டி பாக்கெட் கூட மதிப்பதில்லை.. என்ன மாதிரியான சமூகம் இது கொக்கி ? அதிலும் அதில் "available online " குறியீடான green லைட்டு எரிகிறது பாருங்கள் !...அப்பாவும் என்ன தயக்கம் ??

 " யோவ் !,.அது vegetarian logo யா !!"
என்று கடுப்படித்தார் ..

எவளவு ஒரு ஆபாசம் ??..இதை மற்ற தான் நான் பகிரத பிரயத்தனம் செய்து கொண்டு இருக்கிறேன்... பின் நவீனத்துவத்தின் விளக்கம் இன்னும் பிஸ்கட் கம்பெனிகளை கூட சென்று அடையாத ஒரு அவல தேசம் . இதில் நான் எங்கே எழுதுவது ?? 
இதனால் தான் நான் நான் தமிழ் சூழலில் வாழ்வது ஒரு சாபம் என்று கூறுகிறேன்...
என்னைப்போலவே பாதிக்க பட்டு இந்த தமிழ் சமூகத்தை தினம் தினம் நினைத்து இரவு 11 மணிக்கு புலம்பும் சேலம் சிவராஜ் , நான் , முதலிய சமூகத்தை " தூக்கி நிறுத்தும் " சீர் திருத்தவாதிகளை புறக்கணித்தது இந்த தமிழ் சமூகம் செய்த அவலம் !! 

எல்லாம் முடித்துவிட்டு காரில் சென்று கொண்டு இருந்தோம் ...பெட்ரோல் இல்லை தல..இனி கார் ஒரு அடி கூட முன்னே நகராது என்றார் கொக்கி 

 முன்னே நகரா விட்டால் என்ன ?.. ரிவர்ஸ் கியர் போட்டு பின்னே எடுங்கள் என்றேன்..

 " யோவ் உன் பின் நவீனத்துவ அடாவடிக்கு அளவே இல்லையா ? " என்று அலறிக்கொண்டே எறங்கி ஓடினார் கொக்கி...

எங்கே இருகின்றீர்கள் கொக்கி ??...அட்லீஸ்ட் என் TV Remoteடுக்கு ஆவது Missed கால் குடுங்கள்.

***********************************************************************************************
எக்சைல் பார்ட் 2 லீக்டு பேஜ்ஸ்:

என் தலிவன் புதியதாய் எழுத போகும் எக்சைல் பார்ட் 2 , புத்தகத்திற்கு 50 பக்கங்கள் கூடுதலாய் சேர்க்கவேண்டி இருந்தது.....இதிலும் Harry Potter, விட்டலாச்சாரியா முதலியவர்கள் வியக்க கூடிய வகையில் அரிய மந்திர தகடு , வசிய எந்திரம் , காட்டேரி வசியம் முதலிய சுய முன்னேற்ற விஷயங்கள் இருக்கின்றன...அவற்றை நான் பூட்டன் நாட்டிற்கு சென்று அங்கே உள்ள Schizoid State ஞானிகளுடன் ஆலோசித்து தொகுக்க வேண்டி இருந்தது ....இவற்றை பற்றி கூடிய விரைவில் என் தலிவரே கூறுவார்.....அதற்க்கு முன் "சர்வ குஜிலி வசியம் " என்ற ஒரு மஹா மந்திர , யந்திர , முந்திர , சந்திர தகடு பற்றி ஒரு படம் இதோ....


இந்த எந்திரத்தை முகர்ந்து பார்த்தல் கூட போதும்...அப்புறம் நீங்கள் ஒரு குதிரை இயங்கும் அளவுக்கு இயங்க முடியும்... இதை பற்றி நான் " குதிரை , குதம் , குப்பி " என்ற நாவலில் எழுத உள்ளேன்...
குதிரை சக்தி பற்றி உங்களுக்கு தெரியாது....குதித்து குதித்து இயங்கும்....எனவே தான் இன்னும் இன்ஜின்களுக்கு Horse Power என்ற அளவீடு உள்ளது.
இந்த நாவல் வெளிவந்ததும் முஸ்லி பவர் எக்ஸ்ட்ரா , மதன்மித்ரா , கிளைமாக்ஸ் ஸ்ப்ரே , தாது புஷ்டி லேகியம் இவற்றின் விற்பனை எல்லாம் தடுமாறும் பாருங்கள்.....இந்த எந்திரம் ஒன்றே போதும்.... உங்கள் காதலி " வாவ் ! வாட் எ கருவாட் !! " என்று வியக்கும் வண்ணம் இயங்கலாம்..

***********************************************************************************************
சாரு: ஆனால் நிஜமாகவே தன் உயிரையும் மதிக்காமல் நாள் கணக்கில் உண்ணாவிரதம் இருக்கிறார் ஒருவர். பெயர் சசி பெருமாள். அவர் கோருவது பூரண மது விலக்கு. உண்ணாவிரதம் எவ்வளவு கேலிக் கூத்தாகி விட்டது என்பதற்கு இது ஒரு உதாரணம். ஒருவர் தற்கொலை செய்து கொள்வது சட்டப்படி குற்றம் என்றால் சசி பெருஉண்ணாவிரதப் போராட்டமும் தற்கொலை முயற்சிதான்; சட்டப்படி குற்றம்தான். டாஸ்மாக்கில் குடித்து விட்டு எல்லோரும் டூவீலரில் போகிறார்கள். இதற்கு டாஸ்மாக் வாசலில் நிற்கும் நூற்றுக் கணக்கான டூவீலர்களே சாட்சி. குடித்து விட்டு வாகனங்களை ஓட்டக் கூடாது என்று ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தைத் தீவிரமாக அமுல்படுத்து என்று கோரி நான் ஒரு உண்ணாவிரதம் இருக்கவா? இதெல்லாம் அரசாங்கத்தை ப்ளாக் மெயில் செய்யும் உத்திகள். இப்படி அரசாங்கத்தை ப்ளாக் மெயில் செய்வதற்காக ஒருத்தர் உயிரை மாய்த்துக் கொள்ளத் தயாராக இருப்பது நிச்சயமாக அறவழிப் போராட்டம் அல்ல.


புரட்சி வீரன் "மண்டை சாரு", செய்த சில புரட்சிகள் மற்றும் அறபோராடங்கள் உங்கள் பார்வைக்கு:

1. பட்டாயா போயி ஜாக்கெட்டில் காசு சொருவனும் ( அடுத்தவன் காசு என்பது மிக முக்கியம் )
2. சாட் பண்ணி WET ஆகுதா ன்னு கேட்டு போராடுதல் 
3. நூலகம் வைக்கபோறேன்னு சொல்லி பைசா புடுங்குதல் 
4. ஜவுளி கடை பொம்மையை கூட விடாமல் குறு குறு என்று பார்த்தல் 
5. spam Mail லவ் லெட்டர்களை நினைத்து உருகுதல் 
6. குப்பி குடுத்தல் ( ஜோன்ஸ் என்ற பெயரில் வந்தால் சிறப்பு தள்ளுபடி )
7. ஆடுகளின் கோவணம் அடிகடி உருவுதல் 

இப்படி தான் லே போரடோனு !! அதா விட்டுட்டு உண்ணாவிரதம் எல்லாம் இருந்துகிட்டு ...

சிலபல நெறிமுறைகளை இந்த வகை புரட்சி செய்யும்போது பின்பற்றவேண்டும் 

1. போராடும்போது 6 நிமிடங்களுக்கு ஒருமுறை " டங் டங் டங் டங் " என்று உச்சஸ்தாயி யில் கத்த வேண்டும் 
2. இப்படி போராடும்போடும் உங்களை அறியாமல் நீங்களே WET ஆகிவிட கூடும்...எனவே அனைவரும் Huggies அணிந்து வருதல் நலம் 
3. ரோட்டுல எவனாச்சும் கொட்டாவி விட்டா கூட " என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ? " என்று பொங்க வேண்டும் 
4. தாய் நாடு எது என்று கேட்டால் " சீலே " என்று சொல்ல வேண்டும் 
5. எவனாச்சும் எதாச்சும் கேட்டா " சீக்கு பிடித்த *************** நக்குடா " என்று கூக்குரலிட வேண்டும் 

இறுதியாக 

கவர்மெண்டை எதிர்த்து போராடியதற்கு கவெர்மேண்டிடமே " சந்தைக்கு போகணும் ஆதா வையும் காசு குடு " என்ற சப்பாணி ஸ்லாங்கில் காசு கேட்ட வேண்டும் 

இப்படிக்கு 
தலிவனின் தடாலடி தாலிபான்கள்
***********************************************************************************************
மண்டை: பப்புக்குப் போவதில் இன்னொரு பிரச்சினை என்னவென்றால், வீட்டுக்குத் திரும்புவது. கையிலும் கழுத்திலும் தமிழ் சினிமா வில்லன்களைப் போல் நகை அணிந்திருப்பதால் போதையில் வீடு திரும்புவதில்லை. கவரிங் நகைகள்தான் என்றாலும் திருடன் அதைத் தங்கம் என்று நினைத்து விட்டால் என்ன செய்வது?

இதை பற்றி குஜாராஜேந்திரன் கூறும் போது :-
கவரிங் நகை அனிவோர்கள் என்று ஒரு சங்கத்தை உருவாக்கிவிடவேண்டும். இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களை மட்டுமே பப்புக்கு அனுமதித்திட வேண்டும்.அணியும் நகை எவ்வளவு என்று நிர்ணயித்த பின்பு போக வர கார், அல்லது பயணப்படி, வெளியூர் என்றால் தங்க நல்ல ஹோட்டல் அல்லது தங்கும் செலவு, தரமான உணவு அல்லது உணவுப்படி, என்றெல்லாம் விதிகளை வகுத்து விட வேண்டும். இதைத் தர தயங்கும் பப்பில் யாரும் போய் குடிக்ககூடாது. மீறி போகின்றவர்களைகளை 'தங்க நகை' எனக் கருதி இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டில் போட்டுக் கொடுத்துவிட வேண்டும். எல்லோரும் மனதுக்குள் வைத்து புழுங்கிக் கொண்டிருப்பதை நீங்கள் எப்போதும் பட்டவர்த்தனமாய்ப் பேசி அவர்களுக்கு நல்லதுதான் செய்கிறீர்கள், ஆனால் உங்களை குறை கூறி, அவர்களோ பயனை அனுபவிக்கிறார்கள். என் ஆலோசனகளை சீரியஸாக பின்பற்றலாம்.

Wednesday, 24 April 2013

மேட்டர் ரைட்டரின் அமெரிக்க விசா அனுபவங்கள் - சாரு டைம்ஸ் (25/04/13)


மேட்டர் ரைட்டர் சாரு அவர்களில் அமெரிக்க விசா ரீஜெச்ட் செய்ய பட்டு உள்ளது. அதருக்கு எங்கள் விமர்சகர் வட்டத்தின் ரியாக்ஷன்.

அமெரிக்க விசா இன்டர்வியூ:

மண்டைக்கு அமெரிக்கா விசா கொடுக்க மறுத்துட்டாங்களாம்.. விசா இன்டர்வியூல என்ன உரையாடல் நடந்திருக்கும்னு பார்க்கலாம்

Officer : May i know the purpose of your visit to United States .
மண்டை : பர்ஸ் எல்லாம் இல்லீங்க..

Officer : No Man....(man ஐ ஆடு மேன்னு கத்துமே அதுமாதிரி உச்சரித்தார்) i mean why do you want to go to united states of America ?
மண்டை : மீன் வாங்க ஒரு தம்பி இருக்காருங்க...சனி ஞாயிறு ஆனா கொண்டுவந்திடுவாரு...

Officer: what the fcuk ???
மண்டை : 180 நிமிட்ஸ்

Officer: where are you going to stay in US
மண்டை : me want to stay with sunny leone.

Officer: Which state are you going in USA?? Arizona, California, kansas,Maryland or something 
மண்டை: வேற எந்த ஸ்டேட் போகபோறேன் ??? எல்லாம் நம்ம Schizoid State தான்

Officer : no..no..no.. okay forget it.. Do you have any hotel reservation
மண்டை : yes yes... ராயர் காபே...டேபிள் நம்பர் 3

Officer  : how long you want to stay in United States
மண்டை : 6 feet

Officer: Have you made specific travel plans?
மண்டை: Yes, i go by aeroplane

Officer: how are you related to your sponsor?
மண்ட: he is my குஞ்சு in OfficerAmrica.

Officer: what is your arrival city in the US
மண்டை: yes, i am அறிக்கி but i don't do cheating!

Officer: which location do you plan to visit in the US
மண்டை: No, I don't have loose motion

Officer  : Do you have any bank balance ?
மண்டை : no.. me have account in all bank.. but no balance.

Officer  : get the hell out of here.
மண்டை : ஆட்டோ சார்ஜ் ஃபிஃடி ருபீஸ் இருக்குமா... me settle this after my vasagar vattam

Officer : what is vasagar vattam.
மண்டை : வட்டம் means round .. all my fans sit round and drink சர்க்கு.. மீ ஒன்லி ரெமி மார்டிங்

Officer: Secuirty !!!!! please send this guy out.
மண்டை: பீ கேர்ஃபுல் இதை பத்தி நான் சாரு ஆன்லைன்ல எழுதுவேன்.

Officer  :*&^%$^%$^%%^%$#%$#%$#%#%

 Next day மண்டை சாரு ஆன்லைன்ல் :

நேற்று அமெரிக்க தூதரகத்திற்கு சென்றிருந்தேன்...அவர்கள் நான் வந்திருப்பதை உடனே வெள்ளை மாளிகைக்கு தெரிவித்திருந்தார் போல.. வெளியுறவு செயலாளாரே லைனில் வந்தார். நீங்கள் எங்கள் நாட்டிற்கு வருவதால் எங்கள் நாட்டுக்கே பெருமை என்றார். மேலும் என்னுடைய ஆங்கில உச்சரிப்பு அப்படியே அமெரிக்கனின் உச்சரிப்பை போலவே இருக்கிறதே என்று வியந்தார். அடியேனுக்கு உலக மொழி நானூறு தெரியும் என்று கூறினேன். உங்களை போன்ற உன்னதமான எழுத்தாளர் ஒருவர் கூட எங்கள் நாட்டில் இல்லையே என்று மிகவும் வருத்தப்பட்டார். பத்தாயிரம் மைல்களுக்கு அப்பால் இருப்பவருக்கு என்னுடைய அருமை தெரிகிறது ஆனால் எனக்கோ அங்கிருந்து திரும்ப மைலாப்பூர் வர ஆட்டோ சார்ஜ் இல்லை.. நான் கேட்டிருந்தால் ஓபாமா எனக்காக ஹெலிகாப்டரே அனுப்பி இருப்பார்.. ஆனால் அது எனக்கு தேவை இல்லை.. எனக்கு பணம் என் எழுத்தில் முலமாக தான் வர வேண்டும்.. பணம் அனுப்ப..

Account holder’s Name: அறிக்கி என்கிற அறிவழகன்
 Axis Bank Account Number: 999999999
 Branch: மயிலாப்பூர் முத்திர சந்து
***********************************************************************************************
இந்த அமெரிக்காவே இப்படி தான்...!!

தென்னமெரிக்க நாடுகளை என்னைக்குமே அமெரிக்காவிற்கு பிடித்தது இல்லை...பிடல் காஸ்ட்ரோ , ச்சே குவேரா போன்ற போராளி தலைவர்களை கொல்ல அமேரிக்கா தனி உளவு பிரிவையே வைத்துள்ளது.பனி போரின் இறுதி காலத்தில் இருந்தே அமெரிக்கா லத்தின் அமெரிக்க நாடுகளை எதிர்க்கும் போக்குடனே செயல்பட்டு வருகிறது.
நான் ஒரு சீலே நாட்டு சிங்கம், லத்தின் மொழியில் லங்கர் கட்டை உருட்டுபவன் என்று தெரிந்ததால் தான் என்னவோ அமெரிக்க அரசாங்கம் என்னுடைய ஜீரோ டிகிரி நாவலை பார்த்ததும் பயந்து விசாவை மறுத்து விட்டது.சே குவேராவிற்க்கு அடுத்து போராளி என்றால் அது நான் தான்... ஒரு கலக்ககாரனை இந்த அமெரிக்க அரசு எதிர்கொள்ள அஞ்சுகிறது.
என் அமெரிக்க நண்பர்கள் கெஞ்சினார்கள் .." தலிவா அமேரிக்கா வராவிட்டாலும் பரவா இல்லை ...அட்லீஸ்ட் .U.S.A ஆச்சும் வாருங்கள் என்று".நான் மறுத்து விட்டேன்.விசா வாங்குவதற்கு நான் என்னுடைய சக எழுத்தாளர்களை போல் அமெரிக்க Embassy மீண்டும் செல்ல முடியாது.

நான் சீலே , மடகாஸ்கர், எத்தியோபியா போன்ற நாட்டின் Embassy தான் செல்வேன்....அங்கே USA விசா கிடைக்காவிடில் தவறு என்னிடம் இல்லை..இது ஒரு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொடூர ஆபாசம்..அவளவு தான்.நான் இதற்க்கு எல்லாம் அஞ்ச போவது இல்லை.... 

இதை தான் நான் கூறுகிறேன் எழுத்தாளனாய் இருப்பது செம்ம சாலெஞ்ச் என்று.நான் புக்கர் பரிசோ , அல்லது ஆஸ்கார் அவார்டு வாங்குபோது இவர்களே என் வீட்டுக்கு வந்து விசா தருவார்கள்..அதில் ஐயமில்லை...

ஜென் ஞானி இப்ன் ஜில்பான்சி கூறுகிறார்...

" கொக்கு பற பற ..கோழி பற பற,,, Lufthansa கிடைச்சா ஓசில நீ பற "
எதுவுமே கிடைகாட்டா ஜிப்பை நீ தொற 
கீழ இருக்கு தர 
அதுல இருக்கும் பாரு நுர ..."

இதை தான் வலியுறுத்துகிறேன்.....

அமெரிக்கர்களை பழி வாங்க நான் அவர்கள் பக்கத்துக்குநாடான U.S.Aக்கு போக வேண்டும் ..அதற்க்கு விசா எடுக்க வேண்டும் 

அதற்க்கு டாலரில் செலவு ஆகும் ..
போன முறை மாதிரி ஐயப்பன் டாலர் , முருகர் படம் பொறித்த டாலர் அனுப்ப வேண்டாம்.காசு கொடுங்கள் 

Name : Thalivvvvvvvvvarrrrrrrrrr
Number :8957605745
Swiss Bank of Mylapore
***********************************************************************************************
சத்தியமான நம்ம மண்டை எழுதினது இல்லீங்க. விமர்சகர் வட்டத்து நண்பர் "இலக்கிய வாசகன்" பின்நவீனத்துவம் பற்றி எழுதின பதிவு.

இதுதான் அது – பின்நவீனத்துவம்!

தலைய சுத்தி மூக்கைத் தொடுங்க என்பது போல இருக்கும் இதன் விளக்கங்கள்! தயிர்சாத எழுத்தாளர்களின் விளக்கங்களோ பாமரன் பர்லாங்கு தூரம் போய் பார்க்க வேண்டியதாய் இருக்கும், புலிசாத எழுத்தாளர்(களி)ன் விளக்கமோ ‘எவ்வளவு தைரியமிருந்தா என்னுடைய எந்த புத்தகத்தையுமே படிக்காம என்கிட்டே இந்த கேள்விய கேப்பிங்க..?. எழுத்தாளர்கள் என்றால் இளிச்சவாயர்களா…?.’ என்பது போல டெரராக இருக்கும். அத்தகைய குதர்க்கமான தலைப்பு பற்றி ஏதோ எனக்கு எட்டியது.

ம்ம்ம்..ம்ம.ம்.. விஷயத்திற்கு வருவோம் PostModernism என்பதே பின்நவீனத்துவம் என்பதின் ஆங்கில பதமாகும் இதுவொரு கால அளவைகளுடனான பழக்க வழக்கங்களின் கூட்டுத் தொகுப்பு. பரிணாம வளர்ச்சியின் கத்தை கத்தையான தொகுப்புகளில் ஒன்று எனவும் சொல்லலாம். அந்தவகையில் நம்முடைய சமகாலத்து கத்தை தான் பின்நவீனத்துவம்.
முதலில் மனிதன் நிர்வாணமான காட்டுமிராண்டி, அப்றம் உணவு, நெருப்பு, ஆடை, உறவுகள்.. .. .. வட்டம், வானியல், அறிவியல் கண்டுபிடிப்புகள் எல்லாம். இந்த ஒவ்வொரு மாற்றத்திற்கும் மனிதன் சில நூற்றாண்டுகளை எடுத்துக்கொண்டான் அந்தந்த நூற்றாண்டுகளில் அவனுக்கென சில மாறுபட்ட கலாச்சாரங்களும், பழக்கவழக்கங்களும் இருந்தன. அப்படி படிப்படியாக மாறிய மனிதன் 19-ம் நூற்றாண்டின்ல் நவீனத்துவம் என்ற நிலைக்கு வந்தான்.

இந்த காலக்கட்டத்தில் ( இப்போதும் ) மனிதன் தன்னை போக்குவரத்து, பள்ளி, ஊடகம், வங்கி முக்கியமாக தொழில்நுட்பம் போன்ற சமாச்சாரங்களால் ஒரு வேலியில்லா சுழற்சி அமைப்பிற்குள் தன்னை வலுக்கட்டாயமாக அடைத்துக் கொண்டான் அது தான் நவீனத்துவம் (Modernism). இதுவொரு பொது மைய இயங்கியலை ஏற்படுத்தியத்தை தவிர பெரிதாக ஒன்றும் சாதித்துவிடவில்லை.

இவ்வாறு 19-ம் நூற்றாண்டில் மனிதன் தனக்குத்தானே அமைத்துக்கொண்ட சமூக அமைப்பின்மீது படிப்படியாக நம்பிக்கை இழந்தான்! இழந்தும் வருகிறான் (உங்களை நீங்களே கேட்டுக்கோங்க இந்த சமூக அமைப்பின் மீது உங்களுக்கு நம்பிக்கை உள்ளதா?) இந்த நம்பிக்கையின்மை படிப்படியாக அதிகரித்து மனிதன் தனது வித்தியாசமான சிந்தனை மூலம் வேறொரு சமூக தகவமைப்பை கட்டமைக்க முயல்கின்றான் அதன் சிந்தனை வடிவமே பின்நவீனத்துவம். அதாவது ஆதியின் ஆடை, உணவு, நெருப்பு போன்றே மனிதன் தன்னை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறான்.

நவீனத்துவம் தர்க்கம் மூலம் உண்மையை அறிவது, பின்நவீனத்துவம் சிந்தனை மூலம் உண்மையை அறிவது. பின்நவீனத்துவம் தர்க்கத்தை, வாதத்தை விரும்புவதில்லை ஏனெனில் வாதங்கள் அதிகாரங்களை மையப்படுத்துகின்றன! நவீனத்தின் தவறுகளை ஆராயும் பின்நவீனத்துவம் முன்னிறுத்தும் மிகப்பெரிய தவறே அதிகார மையம்தான். அதிகார மையமேன்றால் ஏதோ பணக்காரர், ஆட்சியாளர்கள் அல்ல நவீனத்தின் ஒவ்வொரு மனிதரும் தன்னை ஒரு அதிகார மையமாக நினைக்கிறார் அதாவது யாராவது தனக்கு கீழே இருக்கணும்னு நாம நினைக்கிறோம் இது மட்டுமே நவீனத்தின் சாதனை. இந்த வழக்கம் பின்நவீனத்தில் இருக்காது என்று சொல்ல முடியாது ஆனால் அவதானிக்கலாம். நவீனத்துவம் மக்களை சுதந்திரமாக செயல்படவிடுவதில்லை அல்லது வீடு விட்டா ஆபிஸ்-ஆபிஸ் விட்டா வீடு என்பதே உங்களின் சுதந்திரம் என்கிறது.

நூலின் நுனியில் கட்டிய சின்ன கன உருண்டையை பக்கவாட்டில் சுற்றினால் ஒரு வட்ட இயங்குதளம் கிடைக்கும். இதில் இயக்கும் சக்தியான கையையே பெரிதாக பேசி, விளிம்பில் இயங்கும் சின்ன கன உருண்டையைப் பற்றி பேசாததே நவீனத்தின் மிகப்பெரிய தவறாகும். ஒரு சமூகம் தனது அனைத்து பிரிவினைரையும் கவனிக்கணும் (உங்களை நீங்களே கேட்டுக்கோங்க நாம நம்முடைய சமூகத்தின் அனைத்து பகுதியையும் கவனிக்கிறோமா..?.)

ஆம் மேற் கூறியது நவீனத்தின் நிதர்சனமான உண்மை. அது சமூக விளிம்புகளை கண்டுகொள்ளவில்லை. திருநம்பிகள், ஓரினச்சேர்க்கையாளர்கள், ச்சேரி மக்கள் இப்படி பல பிரிவினர்களை நவீனத்துவம் மையத்தில் இருந்து பிரித்தது பிரிக்கிறது. ஆனால் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் உதித்த பின்நவீனத்துவ சிந்தனைகளால் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறுகிறது. இதன் சமீபத்திய உதாரணங்கள் கலாச்சார பாரம்பரியமிக்க இந்திய அரசின் நீதி சபை ஓரினச்சேர்க்கை தவறல்ல என்றது! திருநங்கைகள் தேர்தல் வேட்பாளர்கள் ஆனார்கள் இப்படி நிறைய நிறைய. .. ஆம் நமக்குத் தெரியாமலேயே பின்நவீனத்துவம் நம்மை வேகமாக நெருங்குகிறது.

மேலும் பின்நவீனத்துவம் ஒரு செயலின் முடிவுகளை மட்டுமல்ல அதன் விளிம்பு விளைவுகளையும் ஆராய்கிறது. உதாரணத்திற்கு புகழ்பெற்ற ஐன்ஸ்டினின் சார்பியல் பற்றி மேற்கத்திய பின்நவீனத்துவ சிந்தனையாளர் இரிகேரி இப்படியொரு கேள்வியை எழுப்புகிறார் “சக்திவாய்ந்த அணுவாயுத தொழிற்சாலைகளை ஸ்தாபித்தது மற்றும் எமக்கு அவசியமான வாழ்க்கைச் சூழலுக்கு தேவையான உடல்ரீதியான எம் உயிரை கேள்விக்குட்படுத்தியதைத் தவிர்த்து, மாபெரும் சார்பியல்கோட்பாடு எமக்கு என்ன செய்தது?” e=mc2 exactly wt itZ done………..?. ஆமாம் எண்ண செய்தது..?.?. கேள்விகளை எழுப்புவதே பின்நவீனத்துவத்தின் பிரதான மூலதனம்.

இதை ஒரு அமைப்பென்ற வகையில் சொல்ல இயலாது. இதுவொரு நடைமுறை வழக்கங்களின் பிரத்தியேக மாற்றம் அவ்வளவுதான் இது மனிதருக்கு மனிதர் மாறுபடும். இதன் சுவாரசியமே இதுதான் பின்நவினத்துவம் என்று சொல்ல முடியாததுதான்!

1970களில் பிரெஞ்சு பகுதிகளில் இந்த சிந்தனை துவங்கினாலும் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் மூலம் உலகமெங்கும் பரவியதாக அவதானிப்பு. பெரும்பாலும் பின்நவீனத்துவ சிந்தனைகள் படைப்பாளிகள் மூலம் அவர்களின் படைப்புகளில் இருந்து சமூகத்தில் விதைக்கப்படுகிறது. ஆர்க்கிடெக், ஓவியம், இலக்கிய துறைகளிலிருந்தே இந்த சிந்தனைகள் துவங்குகிறதாம். படைப்பாளிகளின் மூலமே சமூக மாற்றம் நிகழும் என்பதற்கு இது மிகச்சிறந்த உதாரணம். மேலும் சமீபத்திய தமிழ் படைப்பாளிகள் பின்நவீனத்துவத்தை ஒரு அடைப்பிற்குள் அடைக்க முயல்வதாக ஒரு பொது குற்றச்சாட்டு உண்டு ஆனால் அது முடியாதது.

சமீபகாலங்களில் தொழில்நுட்ப நிறுவனங்கள் எப்ட்டிட்யுட் டெஸ்ட், ஸ்ட்ரெஸ் இன்டர்வியூக்களை அதிகம் நடத்துவதையும் அதற்கென பெற்றோர் குழந்தைகளை சின்னத்தில் இருந்தே பயிற்சி மேற்கொள்ளச் செய்வதும் பின்நவீனத்துவத்தின் ஆரம்பநிலை மாற்றத்திற்கான கண்முன் நிகழும் சான்றுகள்.

இதன் இன்னொரு சர்ச்சைக்குரிய விஷயம் செக்ஸ்! பின்நவீனத்துவத்தில் செக்ஸ் ரொம்ப ரொம்ப வெளிப்பாடு கிட்டத்தட்ட மனிதன் நிர்வாண நிலைக்கு செல்வான் என்பது போன்ற பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இது பின்நவீனத்துவத்தின் மீது தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்த முயலும் வாதம். பின்நவீனத்துவம் என்பது மிக மிக சுதந்திரமான அமைப்பு எல்லா விஷயங்களிலும் அதில் செக்ஸும் ஒன்று அவ்வளவே- என்கின்றனர் பின்நவீனத்துவ வாதிகள்! ஆனால் ''சில அதி பின்நவீனத்துவ வியாதிகள்'' செக்ஸ் ஐ மட்டும் எடுத்துக்கொண்டு ஏனைய சமூகம் சார் எதிர்காலம் சார் பிரக்ஞைகளை குப்பையில் போட்டு விட்டு தாமும் பின்நவீனத்துவ வாதிகள் என்று குதிக்கின்றனர்! உண்மையில் இவர்கள் ''செக்ஸ் வாதிகள்'' மட்டுமே! இவர்களால் அதிலிருந்து வெளியே வர முடியாது! 

இந்த பின்நவீனத்துவ சிந்தனைகள் குறித்து உலகம் முழுக்க பரவலான வாதங்கள் நடந்து வருகின்றன என்றாலும் பெரும்பாலான விவாத போக்குகள் பின்நவீனத்துவத்தை குற்றம் சொல்லியே வருகின்றன. ஏனெனில் நவீனத்துவவாதிகள் மாற்றத்தை மறுக்கிறார்கள், அவர்களின் அதிகார பகிர்வை சுதந்திர அமைப்பிற்கு தர தயங்குகிறார்கள் தனிமனிதனின் வித்தியாச சிந்தனைகளை முடக்க நினைக்கிறார்கள். (நீங்க சொன்னாலும் சொல்லாட்டியும் இந்த மாற்றம் நிகழும் ஏனெனில் இந்த சமூக அமைப்பு அப்படி). என்னைப் பொறுத்தவரை பின்நவீனத்துவம் வரவேற்கப்பட வேண்டிய விஷயம். இதுவொரு புரட்சிகர சிந்தனை வழிந்தோடல்.

கம்யுனிச சித்தாந்தங்கள் இருந்த இடத்தை (அவற்றின்மீதான நம்பிக்கையின்மையால்) கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கிறது பின்நவீனத்துவ சிந்தனைகள். இருப்பினும் இது தனக்கென தனி நேம் பிளேட்டை ஏற்படுத்திக் கொள்வதில்லை.

ரொம்ப சுருக்கமா சொல்லனும்னா “இது ஏன் இப்படி இருக்கு..?. ஏன் இப்படி இருக்கக்கூடாது..?.ன்னு யோச்சிங்கன்னா நீங்களும் பின்நவீனத்துவவாதி தான். பெரும்பாலானவர்களுக்கு நவீனத்துவம் என்றால் என்ன என்று தெரியாமலிருக்க, அவர்கள் அதை நுகராமல் இருக்கும் இந்த சூழலில் பின்நவீனத்துவம் நம்மை வேகமாய் நெருங்குவது விந்தை.
இதுதான் விஷயம் என்று சொல்ல முடியாத விஷயத்தைப்பற்றிய என்னுடைய விளக்கம்
 ***********************************************************************************************
கோவளம் சந்திப்பில் எடுத்த புகைப்படம்:


 ***********************************************************************************************

Thursday, 18 April 2013

உனக்கு அங்க "வெட்" ஆகுதா. ?? - பெரியவர் சாட் சாரு - சாரு டைம்ஸ் (19/04/13)

சாருவின் அல்டிமேட் காமெடி பதிவுகள் தொடர்கிறது,படித்து மகிழுங்கள்..

ஜப்பான்ல ஜாக்கிசான்  கூப்புட்டாகோ.... !!!

பொதுவாக 420 என்று தொடங்கும் எந்த அழைப்பையும் நான் எடுப்பதில்லை.வெள்ளி கிரகத்தில் இருந்து ஏதாவது ஒரு "கால் " சென்டரில் இருந்து ஒரு பெண் " ஆர் யு மிஸ்டர் அ ..ல்..டி ..மே..ட் ..ரை ..ட் ..ட ர் ...?? "என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன். சீலே காரர்களுக்கு அல்டிமேட் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும். அதனால்தான் நான் சீலேவில் உண்டியல் குலுக்கியபோது போது என் பெயரை குப்பர்சிங் என்று வைத்துக் கொண்டேன்.

நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு போன் அழைப்பு. எடுக்கவில்லை. ( எடுத்தா கடனை திருப்பி கேப்பானுங்க ) பிறகு ஒரு கைத்தொலைபேசியிலிருந்து. தெரியாத எண். எடுத்தேன். ஒரு பெண் குரல். நீண்ட நாள் பழகியது போல் பேசி விட்டு ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் உங்களோடு பேச விரும்புகிறார் என்றார். அதிர்ச்சியில் ஒருக்கணம் உறைந்து போனேன். அண்டார்டிக்காவின் போக்கையே மாற்றிய 50 பேரில் ஒருவராகப் பேசப் படும் ஒழுத்தாளர் அவர். அண்டார்டிகாவில் மேயும் பென்குவின் என்ற பறவைகளிடம் உளவியல் ரீதியான ஆராய்ச்சி செய்தவர்.அந்த பறவைகளிடம் சென்று " எனக்கு கள்வெறி கொள்ளவைகிறாய்யடி பென்குவின் என்று காதல் வசனம் பேசியவர்.. ஆட்டோபிக்ஷன் முறையில் அந்த பென் குவினிடம் " நேற்று இரவு கனவில் உன் யோனி பருப்பை சுவைத்தேன் " என்று காதல் வசனம் பேசியவர்...அந்த பறவை பதில் ஏதும் தராததால் 
"ஏய்ய்ய் பென் குவின் ,,உனக்கு அங்கே WET ஆகுதா ? " என்று கேட்டு குனிந்து குனிந்து பென்குவினை பார்த்தவர் அந்த ஒழுதாளர் ... அதற்க்கு அந்த பறவை " டேய் மூதேவி !! ஒட்டுமொத்த அண்டார்டிகாவும் WET ஆ தான் டா இருக்கு" என்று காறி துப்பியதும் .. என்னை மாயவளியில் வீழ்த்த அந்த பென்குவின் செய்த சதி என்று ஜகா வாங்கியவர்....
ஓரிரு முறை சர்வதேச பாங்காக் பன்னாடைகள் கருத்தரங்குகளின் மாலைவேளையில் நடக்கும் காக்டெய்ல் பார்ட்டிகளில் சந்தித்திருக்கிறேன். அவ்வளவு தான்.
அவர் சொன்ன விஷயம் இன்னும் ஆச்சரியம். 90 டிகிரி படித்தேன். இந்தியாவில் இப்படி ஒரு நாவலைப் படித்ததில்லை; most astounding book. இன்னும் பலது சொன்னார். நான் அண்டார்டிகாவில் பென்குவினிடம் செய்த ஆராய்சியை நீங்கள் ஒரு பெண்ணிடம் சாட் மூலம் செய்துள்ளீர்கள்...வாவ் !! என்றார்.

கடைசியாக, “தில்லி வாருங்கள்; ஒருநாள் மாலைப்பொழுதில் சாவகாசமாக விஸ்கி அருந்தியபடி உரையாடலாம்” என்றார். மை காட், என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்த மாதம் தில்லி கிளம்பலாம் என்று இருக்கிறேன். ( வாசகர் வட்டம் மைண்ட் வாய்ஸ் :: எங்களாலையும் தான் நம்ப முடில தலிவா !! டெல்லி போறதுக்கு இப்படி ஒரு பிட்டா ??.வர வர ரீல் வண்டி வண்டியா ஓடுது " )

என் எழுத்து ஆங்கிலத்தில் சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு மிகவும் உறுதியாகத் தெரிந்த விஷயம். 90 டிகிரி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். white tiger புக்கர் பரிசு பெற்ற நாவல். அந்த நாவலை சமீபத்தில் நான் குஜராத் சென்றிருந்த போது ((இது எப்போயா நடந்தது ?? ஒரிசானு தானே நெனச்சோம்... ஒருவேள ஈரோடு பக்கம் , இல்ல தூத்துக்குடி பக்கம் இருக்கா ?? ) இரண்டே நாளில் படித்து முடித்தேன். காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் பத்து மணி வரை படிப்பேன். இந்த அளவுக்கு வெறித்தனமாகப் படிக்க வைத்த புத்தகம் இந்தியாவில் இல்லை. வெளிநாட்டில் mario vargas llosa. நான் சொல்ல வந்த விஷயம், ஒய்ட் டைகரை விட நூறு மடங்கு அதிகமாக 90 டிகிரி  யில் நான் சாதித்திருக்கிறேன். 90 டிகிரி வோடு ஒப்பிட்டால் ஒய்ட் டைகர் ஒரு ஜுஜுபி. ஒய்ட் டைகருக்கு புக்கர் பரிசு. 90 டிகிரி கிணற்றில் கிடக்கிறது. காரணம், அது இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. விரைவில் நடக்கும் என்று விரும்புகிறேன்…...

***********************************************************************************************

த்ரிஷா இல்லன்னா திவ்யா !!

இதையே நான் எத்தனை முறை கூறிக்கொண்டு இருக்க முடியும் என்று தெரியவில்லை..சினிமா டிக்கெட் வேண்டும் என்று பதிவு போட்டால் கண்டுகொள்ளாத என் வட்டம் ஒரு நடிகையை பற்றிய கிசு கிசு க்கு 4 லைக் போட்டிருப்பது மிகவும் ஆயாசமாய் இருக்கிறது...இதை தான் நான் தமிழ் எஹுதாலனாய் இருப்பது கஷ்டம் என்று கூறினேன்...அதிலும் இந்த சமந்தா என்பவர் யார் ?? என் முன்னாள் காதலி...!! ஆம்..என்ன எஹுதை படித்து கிறங்கி என் பின்னே அலைந்தவள்....ஆனால் எழுத்தில் எனக்கு இருக்கும் ஒருவித வெறி...அதாவது Blind Obsession.. அதாவது infatuation ...அதாவது obsessive compulsive writer disorder.. அதாவது ( அட போதும் சாமி ) ஒரு உன்மத்த நிலை கண்டு என்னை பிரிந்து சென்றவள் சமந்தா...இன்று அவள் திருமணத்தையே செய்தியை என் வட்டத்தில் வெளியிடுவது தான் ஆபாசம்..நீங்கள் அனைவரும் வெந்த புண்ணில் வெடி வைகிறீர்கள்....சரி விடுங்கள்....அட்லீஸ்ட் இதை கண்டித்து ஒரு கம்மென்ட் யாரவது போட்டீர்களா ??..இல்லை....

ஆனால் நான் இதற்கெல்லாம் கவலை பட போவது இல்லை ...லத்தின் அமெரிக்க எழுத்தாளர் ஒனவகோ தச்லேண்டின் சொன்ன ஒரு தத்துவத்தை பின்பற்றி வாஹ்வைதால் சமந்தா என்னை விட்டு போனது எனக்கு வருத்தம் இல்லை...80 களில் , 90 களில் கவர்ச்சியில் ஒரு கலக்கு கலக்கிய Samantha Fox என்னை காதலித்து கைவிட்டபோதே நன் கலங்கவில்லை..இதற்கெல்லாம் நான் கலங்கி விடுவேனா ??

அந்த இலத்தீன் எஹுதாளர் கூறிய தத்துவம் 

"சமந்தா இல்லன்னா சொனாக்ஷி சின்ஹா "" ( த்ரிஷா இல்லன்னா திவ்யா )

***********************************************************************************************
வாசகர் கடிதம் :

Dear aitel customer. You have not paid your bill for the months of january, february, march, april, Please pay the bill immediately. Or else your services will be disconnected. Thank you

அன்புகுறிய வாசகர் airtel அவர்களுக்கு நன்றி,january, february, march, april மாதங்களுக்கு உங்கள் வீட்டில் தங்குவதர்க்காக அழைத்திருக்கிறீர்கள்,ஆனால் என்னால் உங்களுடைய ஊர் Please க்கு வர முடியாது,ஒரு ஏழை எழுத்தாளனால் அவ்வளவு பணம் செலவு செய்து பயணம் செய்ய முடியாது,

இனி மேல் எனக்கு கடிதம் தமிழில் மட்டும் எழுதவும்,ஆங்கிலத்தில் வரும் கடிதம் படிக்க மொழிபெயர்ப்பாளரை தேடுவது சலிப்பாக இருக்கிறது,

உங்களுக்கு பதில் எழுத தாமதம் ஆனதுக்கு கூட காரணம் என்னுடைய மொர் பாத பூசாரி கடுமையான வேலை பளுவுக்கு இடையில் மாட்டிக்கொன்டது தான். ஆங்கிலத்தில் எழுதிய உங்கள் கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார்,உங்களுடைய மொழிநடை அப்படி,

உங்கள் அன்புக்கு நன்றி

***********************************************************************************************
அணுவிஞ்ஞானிகளின் மாநாடு:

இந்தியாவின் பாடத்திட்டத்தை மாற்ற அணுவிஞ்ஞானிகள் சிலர் ஒன்னு கூடி பேசிக்கிறாய்ங்க.... பிரதான விஞ்ஞானிக்கு மட்டும் மூளை வளர்ரதுக்காக "சோம பானம் " தருகிறார்கள். சைடிஷ்சாக ஆலிவ் காய்களை நசுக்கி ஊறுகாய் பாக்கெட்டில் வைத்து தருகிறார்கள். இதோ சில ஹைலைட்ஸ்....

 *4:38 நிமிடத்தில் ஒரு விஞ்ஞானி தன்னோட கோவத்த காட்டுறாரு பாருங்க யப்பா...

 *நெஞ்சில் நின்ற சில டயலாக்குகள்.

 "பாடத்திட்டம் தப்புங்க"

 "திட்டம் போட்டு பண்ணின பாடம் திட்டம் தானே " ( நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா...)

 * 4:52 வது நிமிடத்தில் இன்னுமோர் விஞ்ஞானி தியான நிலையில் இருந்து கடுமையாக சிந்திக்கிறார். அவர் விழிக்கும் போது " டேயி மொண்ண நாயே.. இன்னும் முடிக்கலையா நீயி " அப்டீன்னு பிரதான விஞ்ஞானியை பாத்து கேட்டுப்புட்டு "இவன் சரிப்பட மாட்டான்னு " மறுபடி தியான நெலைக்கு போயிடுறாரு.

 * 5:12 நிமிடத்தில் அனைவரும் கண்களை இறுக பொத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.

 * இங்கு யாருக்கும் மலையேறவும் , மரமேறவும் தெரியவில்லை என்று மூத்த விஞ்ஞானி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ( கொரங்கே.. கொரங்கே.... ஒன்னய மாதிரி கொரங்கா நாங்க? உனக்கும் தான் எழுத்தே வரல.. ஏதுனாச்சும் கேட்டோமா நாங்க? )

 * 6:08வது நிமிடத்தில் அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முகமாக தலீவர் தனது "நடுவிரலை" உயர்த்தி தனது எதிர்ப்பை காட்டுகிறார்.

 * 6:30இல் தான் 12 ஆன்டுகளாக ஆங்கிலம் படித்ததாக தலீவர் கூறுகிறார். ( ஓ ! படிச்சியா நீயி ?)

 * 6:35இல் "ஆனாலும் தன்னால் தனது தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆங்கிலம் வராது என்கிறார். ( இந்த லட்சணத்தில இந்த மொண்ண நாயி அருந்ததி ராய் ஆங்கிலத்தை குப்பைங்குமாம். )

 * 7:14வது நிமிடத்தில் ஆறே மாசத்தில் "மை ஹவுஸ், மை ஃபிரண்ஸ், மை டவுன்" அப்டீன்னு ஃபிரஞ்சில் ஒலக எலக்கியம் எழுதிவிட முடியும்னு தலீவர் சிதம்பர ரகசியத்தை கட்டவிழ்த்து விடுகிறார்.

 * 8:04ம் நிமிடத்தில் டாக்டர் ஜோன்சை தான் ரொம்பவும் மிஸ் பண்ணியதாக தலீவர் வருந்தினார்.

 * 8:35 "மெடிக்கல் ஷாப்பு எங்கேயாவது இருக்கு " ( பின்ன.. ஜேர்மன் போறேன்னு உதார் விட்டுட்டு போயி முதுமலை காட்ல நீயி நின்னுட்டு வந்தா , அங்க என்ன மெடிகல் ஷாப்பு , சூப்பர் மார்கெட்டு , மஸாஜ் சென்டரா இருக்கும்?)

 * 9:22 ஒரு உப அணு விஞ்ஞானி சந்தேகம் கேட்கிறார். "இஞ்சி சாப்பிட்டா நெஞ்சி எரியிற மாதிரி இருக்கே" ( டேய் மானம் கெட்டவனே .. இது உனக்கே ஓவரா தெரியலயா? இஞ்சி சாப்பிட்டா நெஞ்சி எரியாம பின்ன என்ன கு.... சா எரியும்?)

 * 9:30 ற்கு பின்பு மாநாடு "ஒலக சொகாதாரம்" பத்தி ஆரம்பிக்குது.

மாநாட்டின் அதிசிறந்த ஜால்ரா விஞ்ஞானிகளாக அந்த கறுப்பில் வெள்ளை கோடு போட்ட டீசேர்ட் அணிந்த விஞ்ஞானியும் , பின்னணியில் தனது முகம் காட்டாமல் "வெரிகுட் , சூப்பர், இந்தியாவை கண்டிக்கிறேன், மானே , தேனே, பொன்மானே " போன்ற அளப்பெரிய விஞ்ஞான சொற்பதங்களை உலகுக்கு அறிமுகம் செய்த அந்த விஞ்ஞானியும் தேர்வாகிறார்கள்.

 # கும்பலா சேர்ந்து குடிக்குது, ஒன்னு சிகரட் பத்துது, நாலைஞ்சி சேந்து அரட்டை அடிக்குது, இன்னொன்னு தூங்குது, சிலதுங்க என்ன நடக்குதுன்னு தெரியாமலே உக்காந்துக்கிட்டு இருக்குதுங்க.. கேட்டா எலக்கிய சந்திப்பாம்.

***********************************************************************************************
சாரு வாசகர் வட்ட சந்திப்பு!

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்