Tuesday, 11 February 2014

மோடி பாஜகாவா !!! ஒலக காமெடியன் சாருவின் ஒளறல் - சாரு டைம்ஸ் (12/02/14)

ஆப் கா காம் ஹே, மோடி ஜி! :

மிகப் பெரிய படிப்பாளியும், ஆய்வாளரும், கவிஞருமாகிய பஜன்லால் சேட் விமர்சகர் வட்டத்தில் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். அதாவது தருணின் தயவு இருந்தால் தான் என் புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க முடியுமாம். அடப் பதர்களே, நானே அதை ஒரு ஆங்கில நாவலில் இருந்து தமிழில் மொழிபெயர்த்தது தானே.. பாபாவின் அற்புதத்தால் நானூறு பக்கம் ஆங்கில நாவலை, நான் மொழிபெயர்த்த பொழுது அது நாலாயிரம் பக்கம் ஆனது. 

தமிழ்நாட்டில் அரசியல் கூட்டத்திற்கு ஆள் சேர்க்க தலைக்கு இருநூறு ருபாய் பணமும், ஒரு க்வட்டர் போத்தலும், பிரியாணியும் தருகிறார்கள். நானோ ஒரு ருபாய் கூட வாங்காமல், மோடியை புகழ்ந்து தினமும் நானூறு கட்டுரை எழுதி வருகிறேன். என்னுடைய ஒவ்வொரு கட்டுரையையும் குறைந்தது எட்டு கோடி தமிழர்களும், பத்து கோடி மலையாளிகளும் (அடியேன் தமிழ்நாட்டை விட கேரளாவில் பிரபலம் ) படித்து வருகிறார்கள். ப்ளடி காமன்மேனுக்கு பணம், பிரியாணி, போத்தல் கொடுக்கும் இவர்கள், என் போன்ற எழுத்தாளர்களை மட்டும் ஓசியில் வேலை வாங்குவது எந்த விதத்தில் நியாயம்?

சரி அட..த்தூவிடம் இதை பற்றி பேசுவோம்னு போனை போட்டேன். பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டவர் “போங்க சாரு, நீங்க ஒரு வெகுளி. ஒரு வாசகருக்கு ஒரு ருபாய் என்று கணக்கு போட்டாலும், அவர்கள் உங்களுக்கு குறைந்தது ஐநூறு கோடியாவது கொடுக்க வேண்டும், விடாதீர்கள், உடனே கடிதம் எழுதுங்கள்” என்று கூறினார். நானும் உடனே அவர்களுக்கு மின்னஞ்சல் எழுதினேன். இன்று வரை பதில் இல்லை.

அது போக, மோடி பாஜகவில் இருக்கிறார் என்று எனக்கு தெரியவே தெரியாது. அவர் காங்கிரஸ் கட்சின் பிரதமர் வேட்பாளர் என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். தருணை கைது செய்த்ததும் பாஜக அரசு என்பது எனக்கு இப்பொழுது தான் தெரிய வந்தது. இரண்டு கட்சிகளின் தலைமை அலுவலகமும் தில்லியில் இருப்பதால் வந்த குழப்பம் இது. இதுவரை நான் எழுதிய அரசியல் கட்டுரைகளை வாசிக்கும் வாசகர்கள் “மோடி” என்பதை “ராகுல் காந்தி” என்று மாற்றி வாசிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கும் மிகவும் பிடித்த யதார்த்த நடிகர்களில் விஜய்காந்தும் ஒருவர். அவர் நடித்த படங்களை நான் விரும்பிப் பார்பேன். இருபது வருடங்களுக்கு முன்பு நான் தில்லியில் இருந்த பொழுதே, அவர் நடித்த ‘கோவில் காளை” படத்தை பார்த்து பிரமித்துப் போய் Asian Ageல் விமர்சணம் எழுதியிருக்கிறேன். விஜய்காந்த் அடுத்த பிரதமர் ஆக வேண்டும் என்பதே என் விருப்பம். அது நிச்சயம் நடக்கும். என்னுடைய கணிப்பு இதுவரை பொய்த்ததில்லை. குறித்து வைத்துக்கொள்ளுங்கள் தேதிமுக 300 இடங்களை கைபற்றி ஆட்சியை கைப்பற்றும். இதை பற்றி விரிவாக இன்று இரவு பதினோரு மணிக்கு கேப்டன் டீவியில் ”சமையல் மந்திரம்” நிகழ்சியில் பேச இருக்கிறேன். முடிந்தால் பாருங்கள். யாராவது இதை பதிவு செய்ய முடிந்தால் உசிதம். நான் சமிபத்தில் ஆற்றிய உரைகளில் “உச்ச”கட்ட உரையாக இதை கருதுகிறேன்.

***********************************************************************************************
கடிதம் டு மண்டை -1 (நிஜமான வாசகர் ஒருவர் எழுதியது).
ஜெயமோகனும் நீங்களும் -II
வணக்கம் சாரு,
ஏற்கெனவே நான் அனுப்பிய கடிதத்திற்கு நீங்கள் மட்டுமல்லாது தமிழகம் முழுக்க பெருவாரியான மக்கள் திரண்டு ஆதரவளித்துள்ளனர்.எனவே இனி அடிக்கடி உங்களுக்கு கடிதம் எழுத உத்தேசம்.ஸ்போர்டிவாக எடுத்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.ஜெயமோகனும் நீங்களும் தொடர்கிறது.உங்கள் வாசகர் வட்டத்தில் ஜே/ஜெ என்று துவங்கும் பெயர்களில் உள்ளவர்களை தடா போட்டுவிட்டீர்கள் என்று கேள்விபட்டேன்.உங்கள் ஆற்றாமை புரிகிறது.ஆனால் ஜெயமோகன் இணையத்தில் எழுத துவங்கிய காலம் முதல் இன்றுவரை அவர் எழுதிய பதிவுகளை அவரது தளத்தில் படிக்கலாம்.அது குறித்து விவாதிக்கலாம்.ஆனால் உங்கள் தளத்தின் கதி என்ன?இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனைத்து பதிவுகளும் அழிக்கப்படும்.ஏன்?ஏனெனில் நீங்கள் ஒரு முறை எழுதுகிற கருத்தில் அடுத்த வாரம் வரை கூட நிலையாக நிற்பதில்லை.அந்த நிலையாமையை மறைக்க இரண்டு வருடத்துக்கு ஒருமுறை அனைத்து பதிவுகளையும் அழித்துவிட்டு யாரேனும் "நீங்கள் அன்று அப்படி சொன்னீர்களே?" என்று கேட்டால் "நா எங்க அப்படி சொன்னேன்?ஆதாரம் இருக்கா?" என்று கேட்க வசதியாக அழித்துவிடுகிரீர்கள்.ஜெமோவை விமர்சிப்பதற்கு முன் நீங்கள் உங்கள் பதிவுகளை அழிக்காமல் சொல்கிற கருத்தில் நிலையாக ஒரு வருடம் இருந்து காட்டுங்கள் பார்ப்போம் 

Vivek Viki

கடிதம் டு மண்டை -2 (நிஜமான வாசகர் ஒருவர் எழுதியது).

Title::: கோபிநாத்தும் நீங்களும்
வணக்கம் சாரு,
உங்கள் வேண்டுகோள் படி அடியேன் நாள் தவறாமல் கடிதம் அனுப்பி வருகிறேன்.அமோக மக்கள் ஆதரவு என்றுதான் சொல்ல வேண்டும்.தினம் எனக்கு மெயில்கள் வருகின்றன.நீங்கள்தான் அதை எழுதியதா? என்று கேட்டு!!!இப்போ இன்னிக்கான கேள்வி.கோபிநாத்.அதாவது நீயா நானா கோபிநாத்தைதான் சொல்கிறேன்.நீங்கள் ஏற்கெனவே நித்தி விவகாரம் விஸ்வரூபம் உத்தம வில்லன் அவதாரங்கள் எடுத்தப்போ நீங்கள் அதில் கலந்து கொண்டது நினைவில் இருக்கலாம்.(பயபுள்ள எல்லாத்தையும் நியாபகம் வச்சி எழுதுது-கொக்கரக்கோ).அதில் கோபிநாத் நித்தி என்ற தவறான போலி சாமியாரிடம் மக்களை கொண்டு சேர்க்க ராப்பகலாக நீங்கள் ஆற்றிய அரும்பணி(!!!??)க்கு மன்னிப்பு கேட்க சொன்னார்.நீங்கள் மறுத்தீர்கள்.கார்னர் செய்து மன்னிப்பு கேட்க வைத்தார்.அதன்பின்???ஐம்பது பதிவுகள் "மன்னிப்பு கேள்" என்ற தலைப்பில் எழுதி தள்ளினீர்கள்!!!(இப்போ அந்த பதிவெல்லாம் அழிச்சாச்சே!!என்ன பண்ணுவ??-கொக்கரக்கோ).கோபிநாத் சொந்தமா பேசுறதில்லை.அவரது சகோதரர் ஹெட்போன் மூலம் சொல்வதை கிளிப்பிள்ளை போல திரும்ப சொல்பவர் தான் கோபி என்பது வரை பல விஷயங்களை சொன்னீர்கள்.சரி மான ரோசம் உள்ள நாங்கள் சாருவை அவமானபடுத்திய அந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை என்று முட்டுக்காடு வாசகர் சந்திப்பில் ரெமி மார்டின் மீது சத்தியம் செய்தது நினைவிருக்கலாம் .ஆனால் கடந்த மாதம் மீண்டும் அதே நீயா நானாவில் நீங்கள்.நிகழ்ச்சியை பார்க்க சத்தியத்தை அதே ரெமி மார்டின் மீது கை வைத்து வாபஸ் வாங்க வைத்தார்கள்!முன்னுக்கு பின் முரண் என்பதில் முதலிடத்தில் இருப்பது நீங்கள்தான்.மறுக்கிறாயா? இல்லையா சொல்!!

Vivek Viki

***********************************************************************************************
ஆப் கா காம் ஹே, பண்டிட் ஜி!” என்ற மண்டையின் உளறலிருந்து கொட்டும் முத்துக்கள்...

மு.கு.. தருணின் இமேஜை தூக்கிவிடவும், அவரால் பாதிக்கப்பட்ட பெண்ணை அவதூறு செய்யவும், P.R. Agency நியமிக்கப்பட்டுள்ளது, அவருக்கு ஆதரவாக எழுத பணமும் தரப்படுகிறது. இதில் முதல் அடியாக அவரின் நட்பு வட்டத்தினர் அவருக்கு சாதகமாக எழுத தொடங்கியுள்ளனர். மண்டையும் செமத்தியாக பணம் வாங்கி கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறது.

1) அமெரிக்காவின் தயவில் வந்த ஓசிக் குடி ஹோட்டல் சந்திப்பிலிருந்து மண்டை துளிர்த்து எழுந்துவிட்டார். புது வசி பிச்சை டெக்னிக்காக இனி பிராமிண்களை போற்றி போற்றுதல்கள் வரும். 

2)தருண் குற்றவாளி இல்லை. எப்படி, அதான் மண்டையும், தருணின் மணைவியும் மகளும் சொல்கிறார்களே, இதை விட என்ன வேண்டும். நாட்டில் இருக்கும் அனைத்து குற்றாவளிகளின் உறுவினர்கள் அவர்களை அம்போ என விட்டுவிட்டதாகவும், தருணின் உறுவினர்கள் அவர்களை சந்திப்பதாகவும் அதனால் தருண் குற்றமற்றவர் என்பது மண்டையின் அறிய கண்டுப்பிடிப்பு.

3)தருணை ஆதரித்த இந்த பன்னி மண்டையை விமர்சக வட்டத்தினரை தவிர யாரும் கண்டுக்கலே. இப்படியிருக்க ஏன் ஆங்கில புத்தகத்துக்காக ஆதரிக்க வேண்டும்??? அது எப்படி வெளிவரும்??? Asian Age கட்டுரைக்கு வந்த ஹிட்ஸ் கமெண்டுகள் சுமார் ஒரு கோடி. மண்டையின் வாசகர் ரீச்ச லோகளவில் உள்ளது.

4)சீரோ டிகிரி ஆங்கிலத்தில் வந்தது எப்படி? அப்போது அறியாத வயசு குஞ்சுகளின் முயற்சியால்தான்.

5)Chandra Siddan சொல்வது புக்கர் விருது நோபல் விருது பெறுவதற்கு சமானம். அவர்தான் இந்தியாவின் இலக்கியத்திற்கு அத்தாரிட்டி.

6)தருணை மண்டைக்கு நேரடியாக தெரியாது. ஏன் தருணை யாரென்றே மண்டைக்கு எனக்கு தெரியாது.

7)Tehelka, Asian Ageல் எழுதுபவர்கள் எல்லாம் மண்டைப் போன்ற பெரிய பெரிய இலக்கியவாதிகள். ஏன் அதில் கமெண்ட் போடுவர்கள் கூட மண்டை மாதிரி பெரிய பெரிய இலக்கியவாதிகள்.

8) “சம்பவம் நடந்ததாகச் சொல்லப்படும் லிஃப்ட்டின் CCTV footage கிடைத்து விட்டது ” என்று யார் சொன்னது, மண்டையும் தருணின் குடும்பத்தினரும் அதனால் அது உண்மை.

9)தருணை ஆதரிப்பது, ஆங்கில புத்தகத்தை வெளியிட அல்ல. இனிமேல் மண்டைக்கு புக்கு எழுதவும் வராது எழுதினாலும் புக்கும் விற்காது. தருணை ஆதரிப்பதால் நல்ல பெயர் இருந்தா என்ன கெட்ட் பெயர் வந்தா என்ன. வாங்கின காசுக்கு ஆதரிக்கிறேன் இன்னும் மேலும் மேலும் பணம் வாங்க மண்டை ஆதரிக்கும்.

10)Asian Ageல் எழுதுகிறேன் என சொல்லி இனி இருபது வருடம் மண்டை ஓட்டி விடும். Asian Ageல் எழுதியதை பார்த்து பதிப்பாளர்கள் சூட்கேஸ் நிறைய கோடி கோடி பணத்துடன் தினம் தினம் மண்டையின் வீட்டின் முன் நின்று பப்புக்கு சாரோவுக்கும் பிஸ்கெட் போட்டு காத்துகொண்டிருக்கிறார்கள்.

11) எந்த பத்திரிக்கையில் கட்டுரை எழுதினாலும் அந்த கட்டுரையாளனின் குறிப்பும் எழுதப்படும் என்பதை மண்டையை தவிர மற்றவர்கள் அறியவில்லை. அந்த குறிப்பு கட்டுரையாளர் தரும் குறிப்பு என்பதை மண்டை சொல்லாமல் விட்டுவிட்டது. அந்த குறிப்பை பார்த்து சீரோ டிகிரியின் ஆங்கில பதிப்பு 10 கோடி பிரதிகள் விற்று தீர்ந்தாயிற்று.

12)அஷிஷ் நந்தியும் ஜாய் கோஸ்வாமியும் மண்டையை சந்தித்தது அவர்களுக்கே தெரியாது. அதனால் அவர்களை வைத்து என்னத்தான் மண்டை எடுத்து விட்டாலும் அவர்களுக்கு தெரியாவா போகுது, வி.வ. தினர் அவர்களுக்கு போன் போட்டா கேட்க போகிறார்கள்.

13) அன்னைக்கு ஓருத்தர் தான் மண்டைக்கு ஓசியில் வேலு வெயிண்ஸில் சரக்கு வாங்கி தந்திருக்கிறார். இப்போது மண்டை அதையும் தாண்டி வெகு தூரம் வந்து விட்டார். இப்போது ஓசி சரக்கு வாங்கி தர நிறைய குஞ்சுகள் இருக்கின்றார்கள், அதுவும் அமெரிக்க குஞ்சுகள். 

14)ஐந்து பக்க கட்டுரை ஒன்றாவது எழுதி எப்படி தருண் தேஜ்பால் -தாஸ்தயேவ்ஸ்கி, கஸான்ஸாகிஸ் ஆகியோருக்கு நிகரானவர் என்று மண்டைக்கு நிறுவ தெரியாது. ஏன் என்றால் மண்டைக்கு அந்தளவு புத்தியும், அறிவும், திறனும், ஆய்வு தகுதியும் கிடையாது. சோ, எஸ்கேப்பாக, ரெடி மேட் பதிலான, பலான புக்கான எச்சகலை -2 வில் மண்டை பிசி. 

15) valley of masksன் கிளைமேக்ஸ் சீன் சூப்பர்.

16) இனிமேல் மண்டை இருந்தாலும் இறந்தாலும் mdm ரெமிமார்டினுடன் தான் வரவேண்டும். அதுவரை மண்டை இந்த கோட்டை தாண்ட மாட்டார் mdmம் அந்த கோட்டை தாண்டக் கூடாது.
***********************************************************************************************
பைனல் கிக்:


***********************************************************************************************