Thursday, 20 December 2012

ஒலக எழுத்தாளரின் பிறந்த நாள் காமெடிகள்- Part-01 சாரு டைம்ஸ் (20/12/2012)

இணைய உலகின் அல்டிமேட் காமெடி கிங் "சாரு நிவேதிதா" என்கிற அறிவழகன்க்கு இந்த வாரம் பிறந்த நாள். சும்மாவே சாருவை புகழ்கிறேன் என்று சொல்லி எங்கள் வட்டத்திற்கு லீட் எடுத்து குடுத்து, எங்களை சிரிக்க வைக்கும் சாருவின் அடிப்பொடிகள், பிறந்த நாள் என்றால் சும்மாவா விடுவார்கள். காமெடி பதிவுகளால் எங்களை திக்கு முட்டாட செய்து விட்டார்கள்.
சாருவின்  பிறந்த நாள் களேபரங்கள் சிலவற்றை இங்கு பார்போம்.
***********************************************************************************************************
எப்படியாவது ஓசி குடிக்கு ஆள் சேர்க்க வேண்டும் என்று முதல் காமெடி அம்பை எய்தார் நம்ம மேட்டர் ரைட்டர் சாரு.

மேட்டர் ரைட்டர்: "வருகின்ற டிஸம்பர் 18 என் பிறந்த நாள். பொதுவாக எனக்கு எல்லா தினங்களுமே கொண்டாட்ட தினங்கள்தான் என்றாலும் டிஸம்பர் 18 அன்று நண்பர்களை சந்திக்கலாம் என்பதால் கூடுதல் சந்தோஷம். 60-ஆவது ஆண்டு பிறக்கிறது. நான் பிறந்த ஆண்டு 1953. கணக்கு சரிதானே? எங்கே, எந்த ஊரில் கொண்டாடலாம் என்று யோசனை. வெளியூர் என்றால் 17-ஆம் தேதியே சென்னை வாசகர்களைச் சந்தித்து இரவு உணவு அருந்தலாம் என்றும் யோசிக்கிறேன். என் மாமியார் வந்து இருக்காங்க, என் மனைவிக்குப் பல்லு வலி என்று சாக்கு போக்கு சொல்ல மாட்டீர்கள் என்று நம்புகிறேன்."

எந்த குஞ்சும் இந்த ஸ்டேடஸ்யை கண்டுகவில்லை. வழக்கம் போல் பீ த்தூ மட்டும் காது கிழியும் அளவுக்கு ஜால்ரா அடித்தார். அதில் இருந்து அல்டிமேட் காமெடி மட்டும்.

பீ த்தூ: தல ரொம்பயெல்லாம் பந்தா காட்டாம அவரோட பிறந்த நாளை அஞ்சலியை விட்டு விலகி (பத்தவெச்சிட்டோம்ல) நம்முடன் கொண்டாடவேண்டுமென்று ஆசைப் படுகிறார்.
கும்மாங்கோ: ஏண்டா மாமா, உன் அகராதில கெஞ்சுரததான் "பந்தா காட்றதா"? விளங்கிடும் !
கொக்கரக்கோ: எட்டனா இருந்தா எடூரு எம்பாட்டை கேட்கும்,. பத்தனா இருந்தா பத்தூரு எம்பாட்டை பாடும்.

பீ த்தூ: ஏற்காடு என்று யோசனை செய்யப்பட்ட சந்திப்பு உறுப்பினரகளின் கிலோமீட்டர் கீலோமீட்டர் மௌனத்தின் காரணத்தால் .....
கும்மாங்கோ: சந்திப்பு சந்திப்புனு சொல்லி அடிக்கடி கோவணத்த உருவுனா, குஞ்சுக பாவம் என்ன பண்ணுங்க?

பீ த்தூ: பெரும்பாலும் வரப்போகிறவர்கள் முன்பே வந்தவர்களாகத் தான் இருக்கும். புதிதாக வரப்போகிறவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியப்போவதில்லை.
கொக்கரக்கோ:  ஆளில்லாத டீக்கடையில யாருக்க மாமா இவ்வளவு சத்தமா டீ ஆத்துற?
கும்மாங்கோ: நாங்கதான் உங்க வண்டவாளத்த தினம் தினம் தண்டவாளத்தில ஏத்திகிட்டு இருக்கோமே, உங்களுக்கு எங்க புது குஞ்சுங்க கிடைக்க போகுதுங்க!

பீ த்தூ:வீட்டில் மீன் அல்லது இரால் செய்து கொண்டு வரமுடிந்தவர்கள் கொண்டுவரலாம். அதற்கான செல்வு ஷேர் செய்துக்கொள்ளலாம்.
கும்மாங்கோ: ஓஹோ இப்போ ஒருத்தன் தலையில மொத்தமா மிளகா அரைக்க முடியல, அதான் இந்த ஸ்பெஷல் offer "ஷேர் செய்துக்கொள்ளலாம்".
கொக்கரக்கோ: பசு பால் தரும் என்பதருக்காக 24 மணி நேரமும் கறந்தா ரத்தம் தண்டா வரும். கொஞ்சமாச்சு மனசாட்சியோட நடங்கடா.

***********************************************************************************************************
கும்மாங்கோ வாய்ஸ்:

சாரு : ஒருசில பத்திரிகையாளர்களுக்கு kindle book ஐ அனுப்ப வேண்டியுள்ளது. ஏற்கனவே கார்த்திக் மூலம் 3 பிரதிகளை அனுப்பி ஆயிற்று. வேறு யார் யார் இந்த வேலையைச் செய்ய முன்வருகிறீர்கள்? தொடர்பு கொள்ளவும். 
கொக்கரக்கோ: மண்டை, இது என்ன கம்பசூத்திரமா ? உன் கிரடிட் கார்டை கொடுத்தா குஞ்சுங்க அரைமணி நேரத்துல அனுப்ப போறாங்க. ஆனா மேட்டர் இப்போ என்னன்னா, காசு நீங்க கொடுப்பிங்களா இல்லை குஞ்சுகளை தலையில கட்டப் போறீங்களா ? அத சொன்னா தானே online ல இருக்குற குஞ்சுங்க சீக்கிரமா offline போக முடியும்..
கும்மாங்கோ: நீங்க எழுதுற கருமத்தை குஞ்சுங்க படிக்குறதே பெரிய தண்டனை இதுல மத்தவங்களுக்கு கைக்காசு போட்டு ஓசியில அனுப்பனுமா?? விளங்கிடும்.

சாரு: டிசம்பரில் வர இருக்கும் என்னுடைய ஏழெட்டு புத்தகங்களை ப்ரூஃப் பார்ப்பதற்காக நடுநிசி இரண்டு மணிக்கே எழுந்து அந்த வேலையைச் செய்து கொண்டிருக்கிறேன். இப்படி தினமும் இரண்டு மணிக்கே எழுந்து கொள்வதால் தூக்கம் பிய்த்துக் கொண்டு போகிறது. அதனால் மேஜையின் மீது தூங்கி விழுந்து விடாமல் இருக்க ஒரு துணியைக் கொண்டு என் தலையை நாற்காலியோடு சேர்த்து கட்டிக் கொள்கிறேன். தூக்கத்தில் தலை சாய்ந்தால் துணி இழுக்கும். உங்களால் நம்ப முடிகிறதோ இல்லையோ, இப்படித்தான் வேலை செய்கிறேன்.
கொக்கரக்கோ: அதுக்கு பதில், ஃபேனில் ஒரு கயிறை கட்டிட்டு இன்னொரு முனையை கழுத்தில் மாட்டிக்கொள்ளலாமே. பேஷா இருக்கும். பல குடும்பம் பொழைக்கும்.

சாரு: I am addicted to sex and writing.
கும்மாங்கோ: கூரை ஏறி கோழி பிடிக்கமுடியாதவன், வானம் ஏறி வைகுந்தம் போனானாம், போயா போய் வேலைய பாரு!
கொக்கரக்கோ: I think he talking பிரிட்டிஷ் இங்கிலீஷ்.

சாரு: college students complain that they face a fine if they read me. Female students write to me that they read my novels clandestinely.
கொக்கரக்கோ: யாருப்பா அந்த 4 பிமேல், நல்லா பாரு அது ஷிமேல் ஆ இருக்க போகுது ? அப்புறம் எந்த காலேஜ்ல மேட்டர் புத்தகத்த வெளிய வச்சு படிக்க விடுவாங்க?

பிச்சை: ஒரு சாமியார் , சாருவை அவதூறு செய்தார் . இன்று அவர் நிலை என்ன ? மனுஷ் இதை பார்த்தும் திருந்தவில்லையே.
கொக்கரக்கோ: அடப்பாவி நீங்க எல்லாம் திருந்தவே மாட்டீங்களா..... //ஒரு சாமியார, மண்ட தலைல தூக்கி வெச்சு ஆடுச்சு. இன்று அவர் நிலை என்ன ?// இப்படி சொல்லுப்பா.. ஏன்னா, மண்டய அவதூறு செய்ய ஆரம்பிச்சது நித்தி நெலமை மோசமானதுக்கு அப்புறம் தான்.
கும்மாங்கோ: ஒரு ஒலக எழுத்தாளர் சாமியாரையை தலையில தூக்கி வச்சு ஆடினார். இன்று அந்த எழுத்தாளர்  நிலை ? அஞ்சுக்கும் பத்துக்கும் அலையுது. அதையும் சொல்லுங்க.

சாரு : உங்களை மாதிரி இளைஞர்கள் தான் தமிழ் இலக்கியத்திற்கு தேவை. 
கொக்கரக்கோ: நீங்க நல்லா வருவீங்க தம்பி.....நல்லா வருவீங்க. அப்படியே கண்ணா, போற வழியில மாமி மெஸ்ல  நாலே நாலு இட்லி, கொஞ்சம் கெட்டி சட்னி, ஒரு வடை. சில்றையை கொடுத்திட்டு போயிடு ராஜா.

சாரு: இந்த இசையைக் கேட்டு உங்கள் கண்கள் கலங்கினால் உங்களுக்கு இறைவனோடு பேசும் மொழி கை வந்து விட்டது என்று பொருள்.
கும்மாங்கோ: இந்த மாதிரி அள்ளிவிடரத படிச்சுட்டுதான் சில சமயம் கோவணம் உருவப்படுறது தெரியாம விடல குஞ்சுக சுஸ்த்தாயிடுதுங்க! 
கொக்கரக்கோ: இசைஎங்கிருந்து வருது தெரியுமா ? இசை இயற்கையில் இருந்து வருது. இசை கொத்துற கல்லுல இருக்கு, கத்துற குழந்தை கிட்ட இருக்கு, குத்துற கொலைகாரன் கிட்ட கூட இருக்கும். இசை எங்கும் நிறைஞ்சு இருக்கு. 

சாரு: அடுத்த ஆண்டு பெல்ஜியத்தில் இவரது நிகழ்ச்சி நடந்தால் நாம் ஒன்றாகப் போகலாமா இளங்கோ? எனது அடுத்த ஆண்டுக்கான பயணத் திட்டத்தில் பெல்ஜியமும் உண்டு.
கும்மாங்கோ: குஞ்சுகளா, உண்டியல் எடுக்கிற சத்தம் கேட்குதா? எல்லாம் ஓடி போய் ஒளிஞ்சுகாங்க.
கொக்கரக்கோ: முதல பஸ் டிக்கெட்க்கு காசு இருக்கான்னு சொல்லுங்க தல. அப்புறம் அடுத்த வருஷத்துக்கான பயண திட்டத்தை போடுவோம்.

சாரு : நேற்று ஒரு கட்டுரையைப் படித்துக் கொண்டிருந்தேன். அடடா, இப்படி ஒரு கட்டுரையை எழுதியவனின் காலில் விழுந்து வணங்கலாம் போலிருக்கிறதே என்று வியந்து கொண்டேயிருந்தேன். ஆனால் அப்படிச் செய்ய முடியாது. ஏனென்றால், அதை எழுதியது அடியேன். தெருவோரக் குடிகாரனும் மங்களூர் கணேஷ் பீடிகளும் என்ற கட்டுரையே அது. தப்புத் தாளங்கள் என்ற தொகுப்பில் வெளிவந்துள்ளது.
கும்மாங்கோ: என்னத்த சொல்ல..கை வலிக்குது...யாராச்சும் கண்டின்யூ பண்ணுங்கப்பா !!!!
கொக்கரக்கோ: யப்பா சாமீ, போதும்டா ஒட்டுனது, நீ ஓட்டுன ஒட்டுல் ரீல் அந்து போச்சு.

நீ.எ.பொ படத்தை பற்றி சாரு :
கிழ இயக்குநர்கள் எல்லாம் ,காதலைப்பற்றி தெரியாமல் , காதல் படம் எடுத்து நம்மை சாகடிக்கிறார்கள்.
கொக்கரக்கோ: 60 வயதை தாண்டிய கிழம், கிட்டை, ரயில்ல அப்பர் பெர்த் கூட ஏறமுடியிலன்னு முக்குற கிழவனுங்க எல்லாம் 16 வயது பெண்ணிடம் 180 நிமிசம் இயங்குறதை பத்தி எழுதும் போது, 40 வயது கௌதம் காதலை பற்றி படம் எடுக்க கூடாதா? என்னாங்கடா உங்க நியாயம்.

***********************************************************************************************************
ஆல் இன் ஆல் அழகு ராஜா:

சாரு : கோணல் பக்கங்கள் தொகுதி 1, 2 மற்றும் 3 ஆகியவற்றை பிழை திருத்தம் செய்து முடித்தேன். மொத்தம் 1000 பக்கங்கள். இதில் கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதியை ஒரு உலக சாதனை என்றே சொல்வேன். படித்துப் பார்த்து விட்டு சொல்லுங்கள். இதை ஒரு மனிதனா எழுதினான் என்று ஒவ்வொரு பக்கத்திலும் வியந்தேன். என்னை நானே பாராட்டிக் கொள்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் தவறு. அந்த நூலை நான் ஒரு வாசகனாகப் படித்த போது எழுத்தாளன் வேறு எங்கோ நிற்கிறான். அற்புதம் அற்புதம் என்று வியந்து வியந்தே படித்தேன். கோணல் பக்கங்கள் இரண்டாம் தொகுதி. மூன்றாம் தொகுதி ஒரு நாவலைப் போல் இருந்தது.

கொக்கரக்கோ: சேச்சே. அது எப்புடி நெனப்போம்.. ஸ்பாம் மெயில உண்மைன்னு நெனச்ச ஆள் சொன்னா சரியாத்தான் இருக்கும்.

இதை படிக்கும் போது உங்களுக்கு கவுண்டரின் இந்த வீடியோ ஞாபகம் வர வில்லை என்றால் நீங்கள் தாராளமாக சாருவுக்கு அடிமையாய் வேலை செய்யலாம். 
***********************************************************************************************************
கொஞ்சம் செண்டிமெண்ட்:

நாங்கள் ஏன் எங்கள் நேரத்தை விரயம் செய்து இது போன்ற பதிவுகளை போடுகிறோம் என்பதற்கு ஒரு செண்டிமெண்ட் விளக்கம்:

குடும்பத்துக்கு பணம் செலவவு செய்யாது மண்டைக்கு ரெமிமாட்டினும்,அவர் வீட்டு செலவையும் கவனிக்கும் ஏதோ ஒரே ஒரு ஆடு மனம் திருந்தி குடும்பத்தை கவனித்தால் அதுவே நமது வட்டத்து வெற்றி..!

அப்படி பார்க்கும்போது நமது குழு மாபெரும் வெற்றி என்றே சொல்லனும். சாருவின் பிறந்த நாளுக்கு தொடர்ந்து பணம் அனுப்பிய ஒரு முன்னால் ஆடு (அவர் பெயர் வேண்டாம், அவரை ஆடு என்று அழைப்பது எங்களுக்கு வருத்தம் தான்..) எங்கள் வட்டத்து நண்பர்களுக்கு தனிப்பட்ட மெயில் ஒன்றை அனுப்பினார். அதில் அவர் தன் இரண்டு பெண் பிள்ளைகளை பாரீசில் உள்ள டிஸ்னி லேண்டுக்கு அழைத்து சென்ற படம். அந்த படத்தின் கீழ் இந்த சந்தோஷத்தை கடந்த இரண்டு வருடங்களாக இழந்திருந்தேன்ன்னு எழுதியிருந்தார்.(கடந்த இரண்டு வருடங்களாக இவர் மண்டைக்கு பணம் அனுப்பியிருக்கிறார்.. நண்பர் லண்டனில் வசிக்கிறார்..!)

இந்த பிச்சைக்காரன் பிச்சை எடுத்து பல குடும்பங்களை சீரலிப்பதில் இருந்து காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் இந்த வட்டத்திற்கு உண்டு என்பதை மறந்து விடவேண்டாம் நண்பர்களே..! இதை படித்த ஏதாவது ஒரு பலி ஆடு திருந்தினாலும் அது எங்கள் குழுவின் வெற்றி. தெரிந்தே மண்டைக்கு காசு குடுக்கும் ஆடுகளை பற்றி எங்களுக்கு கவலை இல்லை. 22~30 வயதில் இருக்கும் இளம் ஐடி ஆடுகளை காப்பதே எங்கள் நோக்கம்.

***********************************************************************************************************
இன்னும் பிறந்த நாள் காமெடிகள் பாக்கி இருக்கிறது நண்பர்களே. அடுத்த டைம்ஸில் சந்திப்போம்

இவன்- சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் 

2 comments:

காட்டான் said...

சுஜாத்தாவுக்கு பின் நான்தான் சொல்லிகிறார்..! சுஜாத்தா இவரை போலவா வாழ்ந்தார்? எழுத்தை வைச்சு விபச்சாரிகள் செய்வதை விட கேவலமாக செய்கிறார்.

Dosha Nivarthi said...

அதானே,சுஜாதாவும் இவரும் ஒண்ணா?இது தெரிஞ்சா சுஜாதா திரும்பவும் செத்துப் போய்டுவார்