Wednesday, 12 June 2013

சாரு-ஜெமோ-மனுஷ் என்கிற 3 இலக்கியவியாதிகளுக்கு ஒரு திறந்த கேள்வி

இந்த பதிவின் வாயிலாக எழுத்தாள சிங்கங்களுக்கு (ஜெமோ, சாரு , மனுஷ் ..etc) சில கேள்விகளை முன் வைக்கிறோம்.

பதிவிருக்கு போகும் முன் ஜெமோவின் பாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும் படித்து விடவும். 

முதலில் நம் ஆட்கள் எழுத்தாளர்களிடம் காட்டும் அதிமேதாவித்தனம் மற்றும் எல்லாம் தெரிந்த மனோபாவம் இதற்க்கு காரணம் பெரியதாக ஒண்ணுமில்லை . எழுத்தாளர் என்றால் ஒரு படி தம்மைவிட உயர்ந்தவர், தனக்கு தெரிந்ததை விட கொஞ்சம் அதிகம் தெரிந்தவர் என்று ஆழ்மனதில் உள்ள ஒரு எண்ணமாகவே இருக்கும். அவரை கவர்ந்துவிடவோ, அல்லது பாரட்டுவாங்கவோ இல்லை உன்னை வென்றுவிட்டேன் என்று காட்டிவிட துணியும் ஒரு செயலாகவே இருக்கிறது.ஒரு எழுத்தாளரோ, கவிஞர் சிக்கிவிட்டால் அவரிடம் வாதம் செய்வது ஒன்றும் புதிதாக தெரியவில்லை. முதலில் நம்மவர்களிடம் எழுத்தாளன், கவிஞன் என்றால் எத்தகைய பிம்பம் இருக்கிறது ??. சங்க காலம் தொட்டே கவிஞர்கள் ஊர் ஊராக போய் வாதம் செய்து வென்றார்கள் என்று எல்லாம் படிக்கும்போது ஒரு சாமானியனுக்கு என்ன தோணும் ? கவிங்கனோ எழுத்தாளன் என்ற ஒருவனோ வாதம் செய்வதில் வல்லவர்கள் என்ற எண்ணமே மிகும்.அந்த எண்ணத்தை வலுப்படுத்தும் வகையில் இன்றைய எழுத்தாளர்கள் என்ன செய்கிறார்கள் .....?

இன்று மனுஷ் அவர்கள் விவாதம் செய்யாத சானல் ஒன்று உண்டென்றால் அது கார்டூன் மற்றும் டிஸ்கவ்ரி சானலாக தான் இருக்கும். 
சாருவின் அரசியல் கட்டுரைகள் குறித்து சொல்ல வேண்டியது இல்லை.இப்படி ஒவ்வொருவரை பற்றியும் சொல்லிகொண்டே போகலாம்..கூறவருவது என்னவென்றால் எழுத்தாளன் என்றாலே இன்று விவாதம் என்ற நிலை ஆகிவிட்டது. இன்று சமூக பிரச்சனை என்ற ஒன்றை பற்றி விவதிகாத இலக்கிய ஆளுமைகளே இல்லை என்ற அளவில் டிவி, இணையம், பத்திரிக்கை எல்லாவற்றிலும் விவாதம் தான்.

இதை பார்க்கும் ஒரு சாமான்யனுக்கு என்ன தோன்றும் ?..அட...நம்ம எழுத்தாளர் அண்ணாச்சி வந்துடாரு...வாதம் பண்ணுவோம்...விவாதிப்போம் என்று தான் தோணும். அன்னைக்கு டிவி ல அப்படி பேசுனாப்ள நாமும் பேசி பாப்போம்என்று தான் தோன்றும்.
இலக்கியம் பற்றி பேச தோன்றும் என்று எண்ணுகிறீர்களா ??. ஜெமோ விடம் வாதம் செய்த அந்த பெரியவரை ஆதாரித்து பேசவில்லை. ஆனால் அவர் அங்ஙனம் பேசியமைக்கு இன்று நம் இலக்கிய ஆளுமைகள் நடந்துகொள்ளும் விதமும் ஒரு காரணமாய் இருக்க கூடும் என்பதையும் யோசிக்க வேண்டி உள்ளது.
மேலும் எல்லா எழுத்தாளர்களும் ஏன் சொல்லி வைத்தபடி இந்த புத்தகத்தை படித்திருகிறாயா என்று கேக்கிறார்கள் என்று புரியவில்லை.. சரி அதை விடுங்கள் ..எழுத்தாளனிடம் பேச என்ன தகுதி எதிர்பாகிரார்கள் ?? 
படிப்பு மேதமையா ?
நம் ஊரில் இன்னும் அது முழுதாய் சாத்தியமாகவில்லை.பதினென்கீழ் கணக்கு நூல்கள் எவை என்று இங்குள்ளவர்கள் அறிகிலர். ஐம்பது ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் வரலாறு கூட தெரியாத ஒரு சமூக சூழல் இருக்கிறது.அவர்களிடம் சென்று ஒலக இலக்கியம், ஓரான் பாமுக் லிடியா டேவிஸ் என்றால் அவனுக்கு என்ன தான் புரிந்துவிட முடியும் ?
3 இடியட்ஸ்
சொல்லிவைததாற்போல் இன்று ஜெமோ ஆதரவாளர்களும் சாரு ஆதரவாளர்களும் ஒன்று சேர்ந்து ஜெமோ அவர்களின் இந்த பதிவை வக்காலத்து வாங்குவது வியப்பை தருகிறது.. அந்த எழுபது வயது பெரியவர் ஏதோ படித்ததை கொஞ்சம் நஞ்சம் தெரிந்ததை வைத்து பேச முயற்சித்திருக்கிறார். அதை ஜெமோ தன்னுடைய மேதமையை காட்டி ஒரு அதட்டு அதட்டி வாயடைத்து விட்டார். ஆனால் திரும்ப திரும்ப தமிழ் சூழல் குறித்து ஒரு வித காழ்புணர்ச்சியுடன் பேசி வருவதில் சாருவை போல் தனக்கும் பிரியம் என்றும் நிருபித்துவிட்டார்.
நெஜமாகவே அப்படி என்னதான் தகுதி வேண்டும் எழுத்தாளரிடம் பேச ?
எழுத்து , எழுத்தாளுமை என்பது என்ன ?
மா ஞானமா ?
பிரபஞ்ச ரகசியமா ?
அது ஏதோ தமக்கு மட்டுமே வாய்திருப்பதை போல் ஒவ்வொரு எழுத்தாளரும் பேசுவது எரிச்சலை தான் தருகிறது. 

ஒரு குயவனுக்கு பானை மட்டுமே செய்ய தெரிந்திருக்கலாம்..ஆனால் உனக்கு பானை செய்ய தெரிந்தால் தான் நான் உன்னுடன் பேசுவேன் என்று எந்த குயவன் கூறியும் கேட்டதில்லை. ஆனால் நமது எழுத்து ஏலியன்கள் கூறுவது என்ன ? அவர்களுடன் விவாதிக்க பல புத்தகத்தை படித்திருக்க வேண்டும். அவர்களிடம் எதையாவது கேட்டு கடிதம் எழுதினால் என்னுடைய புத்தகங்களில் நீ எதையும் படிதிருப்பதாய்'தெரியவில்லை எனவே பதில் கூற இயலாது என்று ஒரு பதிவு வருகிறது. இப்படி தம்முடன் பேசுவதற்கே, வாதம் செய்வதற்கே ஒரு தனிப்பட்ட தகுதி வேண்டும் என்று என்னும் எழுத்தாளர்களின் மமதையை ஏன் யாரும் கண்டிக்க மறுக்கிறோம் ?

//எந்திரிச்சு போய்யா…. எழுபது வயசுவரை மூளைய காலிச்சட்டி மாதிரி வச்சிருந்தா நீ பெரியாளாயிடுவியா? போய்யா” என்றேன்//
//நம்ம நாட்டில மட்டும் ஏன் இப்டி வடிகட்டின முட்டாளுங்க கூச்சநாச்சமில்லாம திரிய முடியுது//
//உன்னை மாதிரி முட்டாளுக்குத்தான் தான் ஒரு முட்டாளுன்னுகூட தெரியாது//
//நம்மிடம் மிக ஆழமான உளவியல் கோளாறு ஏதோ உள்ளது. அறிவுக்கு எதிரான ஒரு நரம்பு இறுக்கமா அது?//
-இது ஜெமோ 

//காரட்டை வைத்து சுயமைதுனம் செய்துகொள்ளுங்கள் //
இது சாரு.

இப்படி ஓவொரு எழுத்தாளரும் சக மனிதரை வார்த்தைகளால் கூறு போட்டுவிட்டு அன்பு அறம் என்று பேசுவது தான் வேடிக்கை. சாரு ஒரு படி மேல சென்று தான் ஒரு ஜென் குரு என்கிறார்.ஒரு பேச்சுக்கு கேக்கிறேன். இந்த எழுத்தாளர்களை சீன்டியவர்களை திட்டுவது அவர்கள் வரையில் நியாயமாய் இருக்கலாம்..ஆனால் எதற்க்காக அந்த நிகழ்வை எல்லாம் ஒரு பதிவாய் எழுத வேண்டும் ?. உங்கள் அறிவை திட்டி காட்சிபடுத்தியாகிற்று. ஆனால் அந்த பெரியவர் இணையம் பயன்படுத்தும் நபராய் இருப்பின் அவருடைய நிலையை நினைத்து பாருங்கள் ?..அந்த பெரியவர் மட்டுமல்ல சாரு கழுவி கழுவி ஊற்றிய பாமினி ஏனையோரும் இதில் அடக்கம்.

அவர்கள் மனதில் ஊரே தான் அசிங்கபட்டதை பற்றி தான் பேசுகிறது என்ற எண்ணம் எவளவு கொடூரமாய் காயப்படுத்தும் ?? அதற்க்கு என்ன பதில் வைத்திருக்கிறார்கள் இந்த எழுத்தாள சிங்கங்கள் ? ஒரே ஒருமுறை தன்னுடைய மேதமையை காட்ட முயன்ற அந்த பெரியவர் மற்றும் பாமினிக்கு இந்த எழுத்தாள சிங்கங்கள் ஒரு பதிவின் மூலம் நித்தம் நித்தம் கூறு போடுவது தர்மமா ??. இன்று பாமினி என்றாலே சாரு திட்டிய பெண்..பாண்டிச்சேரி பெரியவர் என்றாலே ஜெமோ திட்டிய பெரியவர் என்று யுவக்ரிஷ்ணா, அதிஷா, அராத்து, கருந்தேள் கண்ணாயிரம் விஜயபாஸ்கர் விஜய் முதலிய எல்லாம் இணைய பிரபலங்களும் பேசியபின் அந்த அந்த பெரியவர் நிச்சயம் எவரிடமும் சென்று இலக்கியமோ, அல்லது தன்னுடைய எழுத்து மேன்மையை காட்ட போவதில்லை...ஆனால் இதை எண்ணி ஒரு எழுத்தாளன் பெருமைப்படுகொள்ள இயலுமா ?? அவர்கள் ஒருமுறை செய்த விஷயத்திற்காக ஒரு பெரிய பதிவு எழுதி நான் இவனை இப்படி அடக்கி ரிவீட்டு அடித்துவிட்டேன் என்று கூறிகொள்வதில்' என்ன பெருமை வந்துவிட போகிறது தெரியவில்லை..ஒரு வகையில் பார்த்தால் அவர்களை விடவும், தன்னுடைய மேதமையை காட்ட அவர்களது சிறு தவறை ஒரு பெரிய பதிவு எழுத ஒரு கருப்பொருளாய் எடுத்துகொள்ளும் இந்த எழுத்தாளர்கள் செய்வது ஒன்னும் பெரிய வித்தியாசமானதாக இல்லை..தராசில் வைத்து பார்த்தால் அந்த முகம் தெரியாத மனிதர்களை நாறடித்த எழுத்தாளர்கள் பக்கம் முள் சாய்ந்து இருக்கபோவது இல்லை.

எழுத்தாளன் என்றால் எதாவது கேள்விகேட்டு இப்படி இணையத்தில் கூறு போட்டு அசிங்கபடுதுவான் என்றால் ஒரு பாமரனுக்கு எப்படி இலக்கியம் என்றால் ஆர்வம் வரும் .? இலக்கியவாதி என்றாலே இப்படி தான் என்று எண்ண தோன்றுவதில் ஒரு பாமரனுக்கான நியாயவாதங்களை குடுத்தது இந்த எழுத்தாளர்களின் செய்கை தானே... இலக்கியம் ஒன்ற ஒன்றில் இருக்கும் தங்கள் மேதமை மூலமே அனைவரைவிடவும் தான் உயர்ந்தவன் என்ற மனப்பாங்கு இருக்கும் வரை எந்த வாசகனும் எழுத்தாளனை நெருங்க போவது இல்லை..இத்தகைய செய்கைகளின் மூலம் எழுத்துக்கும் வாசகனுக்கும் இருக்கும் இடைவெளியை அதிகபடுதியத்தை தவிர வேறு எண்ண நடந்து இப்போது.
சாதி பற்றி பேசியதால் கொந்தளிக்கும் எழுத்தாளர்களை வரவேற்கிறேன்....ஆனால் தான் வானத்தில் இருந்து குதித்து வந்தாதாய் நினைத்து இலக்கியம் அறிந்த அறிவாளி, இலக்கியம் அறியா பாமரன் என்ற மிகப்பெரிய பாகுபாடை உருவாக்கிய குற்றம் இவர்களையே சாரும்...சாதி பாகுபாட்டை காட்டிலும் அறிவு வைத்து பாகுபாடு பார்க்கும் இந்த எழுத்துலக பிரம்மாக்கள் செய்வது தமிழ் சேவையா ??..இது தான் தாங்கள் இலக்கிய அண்ணைக்கு செய்யும் கொடையா...மெல்லிய மனித உணர்வுகளை காயப்படுத்திவிட்டு எவளவு கடவுளை பற்றி கூறினாலும் அது பிரோஜனம் இல்லாத ஒன்றாகவே தெரியும் மக்களுக்கு .அப்படி ஒன்றும் சுயமரியாதையை இழந்து ஞானம் பெற்றுக்கொள்ள எவரும் இங்கு கியு கட்டி நிற்கவில்லை..போய் ஓரமாய் பிதற்றுங்கள் என்று கூறவே தோன்றுகிறது..

புத்தர் வாழ்வில் ஒரு சம்பவம்.
தன் மாணவனை அழைகிறார் புத்தர் . அருகில் உள்ள ஊருக்கு சென்று ஞானம் தேட சொல்கிறார் . 
அவன் ஒப்புக்கொள்கிறான்.
அங்கே மக்கள் உன்னை தூற்றினால் என்ன செய்வாய் ?
" என் மமதை அழிய அவர் வழிவகுக்கிறார்கள் என்று எண்ணிக்கொள்வேன்." என்கிறான் அந்த இளைய பிட்சு
புத்தர் மேலும் கேட்கிறார் 
" உன் உடமைகளை அவர்கள் பறித்து கொண்டால் என்ன செய்வாய் ? " என்று ..
அவன் கூறினான் " என் பொருட் பற்றை அவர்கள் கலைக்கிறார்கள் என்று தெளிவடைவேன் "
அவர்கள் உன்னை கொன்றுவிட்டால் என்ன செய்வாய் ?
" நான் அடைய விழையும் முழு விடுதலையை அவர்களே எனக்கு வழங்கிவிட்டார்கள் " என்று எண்ணி ஆனந்தம் அடைவேன் என்றான்.

நீ இப்போதே ஞானம் அடைந்துவிட்டாய் !! நீயே ஞானத்தை போதிக்க தகுதியானவன் ..அந்த ஊருக்கு சென்று ஞானம் போதி என்று அனுப்பி வைக்கிறார்.

இது ஒரு புனைவு கதையாய் கூட இருக்கட்டும்..ஆனால் இது கூறும் உண்மை இதுவே..கீழிருப்பவர் நிலைக்கு இறங்கும் பக்குவம் இருப்பவர்கள் மட்டுமே ஞானம் போதிக்க தகுதி உள்ளவர்கலாய் இருக்க முடிகிறது..சிலுவையில் அறைந்தும் அனைவரையும் நேசிக்க விழந்த இயேசு பற்றி படம் எடுக்கும்முன், எந்த நிலையிலும் எவரையும் மனதளவில் காழ்புணர்வு காட்டாத ஜென் ஞானிகள் பற்றி எழுதும் முன்னரும் இந்த எழுத்தாளர்கள் தாங்கள் அவ்வாறு இருக்கிறோமா என்று சுயபரிசோதனை செய்துகொள்ளுதல் நலம்...இவர்களாலே அப்படி இருக்க முடியவில்லை என்னும்போது எப்படி எழுத்து என்றால் என்னவென்றே தெரியாத மனிதர்கள் பக்குவமாய் அல்லது நீங்கள் சொல்வதுபோல் எழுத்தாளனுடன் "பேச தெரிந்த அளவுக்கு ஞானத்துடன் " இருந்துவிட முடியும் ??..இன்ற இவர்கள் உமிழும் எச்சில் இவர்கள் முகத்தில் இவர்களே உமிழ்வது போல் தாம்.

கீழ்ஜாதி என்று ஒடுக்கப்பட்ட மனிதர்களை கூப்பிட்டு பூணுல் மாட்டி ஆனந்த கூத்தாடிய என் தலைவன் பாரதி எங்கே !
எழுத்தாளர்களை தெரியவில்லை , உலக இலக்கியம் தெரியவில்லை என்று தமிழ் சமூகத்தை சாடும் நீங்கள் தான் எங்கே ??

இன்று நிலவுவதை விட எம்மான் பாரதி காலத்தில் , என் உயிர் பாரதிதாசன் காலத்தில் உலக இலக்கியஞானம் இருந்துவிடவில்லை...ஆனால் எந்த ஒரு கணப்பொழுதிலும் பாரதி தமிழ் சூழல் குறித்து சாடியதில்லை....மாற்றவே முனைந்தார்கள்....

நீங்கள் அவர்கள் அளவிற்கு எழுதிவிடவும் இல்லை.அவர்கள் அளவுக்கு தமிழை நேசித்துவிடவும் இல்லை... தமிழ்நாட்டில் பாரதி போல் எவனும் வறுமையில் செத்து'விட மாட்டான்...ஆனால் அவர் ஒருபோது தமிழை சாடியது இல்லை.-
ஆனால் நீங்கள் ஒரு இலக்கிய உலகின் விடிவிள்ளியாய் மாறிவிட்டோம் என்ற நீர்க்குமிழி எண்ணத்தில் இருந்து விடுபடுங்கள்..

முகம் தெரியாத அந்த பெரியவரின் மனதிற்கு, பாமினி போன்ற ஏச்சுகளை வாங்கிய அந்த அத்மாகளிடம் மானசீகமாகவது மன்னிப்பு கோருங்கள். அவர்கள் இனி சந்திக்க போகும் அந்த கேலி பேச்சுகளின் வலியை உங்கள் எந்த பெரிய இலக்கியமும் , படைப்பும் துடைக்கபோவது இல்லை.

மாங்காய் பத்தையை மிளகாய்பொடி தடவி விற்கும் ஒரு கிழவி, ராட்டினம் சுத்தும் பொக்கைவாய் கிழவன், எச்சில் பண்டத்தை பகிர்ந்துகொள்ள நம்மிடம் நீட்டும் சளி ஒழுகும் சிறுவன்முதலிய ஜீவன்கள் காட்டும் அன்புஎதுவும் அறிந்தில்லை உங்கள் பின், முன், சைடு நவீனத்துவங்களை.... மனிதரை மனிதராய் அறிவுக்கு அப்பால் இதயம் வாயிலாக பார்க்கும் வித்தையை மட்டுமே வாழ்க்கை அவர்களிடமிருந்து நமக்கு கற்றுத்தருகிறது...எமக்கு அது போதும்,,

இறுதியாய் ஒன்று.
பல உருமாற்றம் அடைந்து, பல படையெடுப்புகள் கடந்து , களப்பிரர் காலத்தையும் கடந்து வாழும் எம்மொழியை நீங்கள் வந்து தான் வாழவைக்க வேண்டியது இல்லை.தமிழை தமிழே பார்த்துக்கொள்ளும்..அதை காப்பதாய், சேவை செய்வதை நினைத்து பாமரரை கடித்து குதறுவதை மாட்டும் நீங்கள் நிருத்திகொண்டால் நலம். 

உங்களை சுடுபவர்கள் அனைவரும் கோட்சே க்களாக இருக்கலாம்...ஆனால் நீங்கள் மகாத்மா இல்லை என்பதை உணருங்கள்.
நாளை காலை கழிக்க போகும் மலம் பாமரருக்கும் , எல்லா இலக்கியத்தை கரைத்து குடித்த எழுத்தாளனுக்கும் ஒரே மாதிரி தான் இருக்கும் 

- பாம்பாட்டி சித்தன்
***********************************************************************************************

2 comments:

Sujatha said...

Very true and excellent post. Hope those so called laureates should read this.

mathuran said...

இந்த தலைக்கனங்களுக்குத் தமிழ்நாட்டில் இருட்டடி கொடுக்க ஆள்ளில்லையா?