Wednesday, 22 January 2014

விமர்சகர் வட்டம் - புத்தக வெளியீடு அறிவுப்புகள் 2014 - சாரு டைம்ஸ் (23/1/14)

நண்பர்களே,

நாளுக்கு நாள் எங்கள் விமர்சகர் வட்டத்தின் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அனைவருக்கும் தெரிந்ததே. நமது வட்டத்தை ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை அறிவோம். நமது வட்டத்தின் செயல்பாடுகளைப் பற்றி செந்தழல் ரவி, அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நமது வட்டம் நடத்திய 'விமர்சகர் வட்டம் சிறுகதைப் போட்டி' வெற்றியடைந்ததைத் தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கையாக நமது வட்டத்தில் பகிரப்பட்டப் படைப்புகளின் (போட்டி சிறுகதைகள் இதில் அடங்காது) தொகுப்பினை ஒரு புத்தகமாக வெளியிடலாம் என்று முடிவுசெய்துள்ளோம்.

இதில் கிடைக்கும் லாபம் அல்லது ராயல்டியை, விமர்சகர் வட்டமோ அல்லது அதன் உறுப்பினர்களோ பகிர்ந்து கொள்ளப் போவதில்லை என்பதை இங்கு தெளிவுபடுத்திக் கொள்கிறோம். மேலும், இதில் கிடைக்கும் பணத்தை நலிந்த எழுத்தாளர்களின் மறுவாழ்விற்கு வழங்குவதற்காக திட்டமிட்டுள்ளோம். இதை எப்படி நேர்மையாகவும் வெற்றிகரமாகவும் செய்வது என்பதைப் பற்றிய உங்களது ஆலோசனை வரவேற்கப்படுகிறது.

புத்தகம் வெளியிடலாம் என்று சஹாரா சாரல் சொன்ன சில மணிநேரங்களில், செந்தழல் ரவி அதற்கான ஒரு அருமையான திட்டத்தை வடிவமைத்துவிட்டார். இதனைக் கேள்விப்பட்டவுடன் பலர் (உறுப்பினர்களும், அல்லாதவர்களும்) நம்மை தொடர்பு கொண்டு 'நல்ல திட்டம் உடனடியாக செயல்படுத்துவோம்' என்று சொல்லிவருகின்றனர்.

புத்தகம் அச்சிடும் முன்பே, வெளியிடும் தேதி அறிவித்த பிறகு அதற்கான முன்பதிவை தொடங்கிவிடலாம் என்று முடிவு செய்துள்ளோம். இதன் மூலம், எவ்வளவு புத்தகங்கள் அச்சடிக்கப் படவேண்டும் என்று நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இந்த புத்தக வெளியீடு 100 % வெளிப்படையாக இருக்கும், அதே சமயத்தில் தமது பங்களிப்பை வெளியிட விரும்பாதவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும். சிறுகதைப் போட்டி நடத்தியே பொழுதே இதனை பார்வையாளர்கள் உணர்ந்திருப்பார்கள் என்று நம்புகிறோம்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒருவர் பொறுப்பேற்று புத்தகம் வழங்கும் யுக்தியை நாங்கள் பின்பற்றுவோம்.

வட்ட உறுப்பினர்கள் தத்தமது சிறந்த நகைச்சுவை போஸ்டுகள் மற்றும் கமெண்ட்களைத் தொகுத்து, பிழை திருத்தம் செய்து கீழ்காணும் ஈமெயில் அட்ரஸ்ஸிற்கு அனுப்புமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம். சிறந்த போஸ்ட்களை மற்றவர்கள் மறந்தாலும், அவற்றை எழுதியவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்பதாலே இந்த முடிவு. மேலும், பங்களிப்பாளர்கள் அல்லாத மற்ற உறுப்பினர்களும் அவர்களுக்குப் பிடித்த பதிவுகளை தொகுத்து அனுப்பலாம். 

தொகுப்புகளை அனுப்பும்பொழுது,ஒவ்வொரு படைப்பிற்கும் தலைப்பு சூட்டி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. படைப்புகளின் தொகுப்பினை MS Word format-ல் அனுப்புங்கள். 

அனைவரின் தொகுப்புகளும் கிடைத்த பிறகு அதிலிருந்து சிறந்த படைப்புகளை செந்தழல் ரவி மற்றும் குழுவினர் தெரிவு செய்வர். இந்தக் குழுவில் பங்களிப்பாளர்கள் இடம்பெற மாட்டார்கள்.

தொகுப்புகளை அனுப்பவேண்டிய மின்னஞ்சல்: 
bookrelease.vimarsagar@gmail.com

தொகுப்புகளை அனுப்ப கடைசி நாள்: 
27 ஜனவரி 2014

நடுவர்கள் இறுதிப் படைப்புகளை தெரிவு செய்ய கடைசி நாள்: 
14 பிப்ரவரி 2014
***********************************************************************************************
இந்த பதிவை நீங்கள்  படித்துக்கொண்டிருக்கும் வேளையில் ஒலக எழுத்தாளனாகிய சாரு  இப்போது என்ன செய்து கொண்டு இருக்கலாம்.

 • அடுத்த கதைக்கு எந்த சொந்த கதையை எடுத்து விடலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கலாம்.
 • செவ்வாய் கிரகத்தில் வாசகர் வட்ட டாஸ்மாக் மாநாடு நடத்த ஆட்களை தேடிக் கொண்டிருக்கலாம்.
 • ரெமி மார்டினிக்கு தண்ணீரா இல்லை வெண்ணீரா என்று விவாதம் செய்துகொண்டிருக்கலாம்.
 • ஓசியில் டிக்கெட் கிடைத்த மொக்கை சினிமாவுக்குப் போய் ரசித்து விட்டு ஆஹா ஓகோ பேஷ் பேஷ் என்று எழுதுவ்தா இல்லை பாப்கார்ன் வாங்கித் தராத இயக்குனருக்கு எதிராய் படத்தை கடித்துக் குதறலாமா என பூவா தலையா போட்டுக் கொண்டிருக்கலாம்.
 • யூ ட்யூபில் ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் ஆன தேடலில் வந்து விழுந்த ஒரு லிங்கை கொடுத்து பாருங்கடா பாத்துட்டு ஞானம் அடையுங்கள் என்று பீலா விட்டுக் கொண்டிருக்கலாம்.
 • மொத்தமே 2000 பிரதிகள் கூட விற்கமுடியாமல் போன கதையை எரோட்டிகா பின்நவீனத்துவக் கதை என்று எவனாவது வெளிநாட்டு பதிப்பகத்தாளனிடம் பொய் சொல்லிக் கொண்டிருக்கலாம்.
 • அந்த இளிச்சவாய் பதிப்பாளனுக்கு கொடுக்க தன் கதையை கூகிள் ட்ரான்ஸ்லேட்டரில் மொழி மாற்றிக் கொண்டிருக்கலாம்.
 • நகரின் மைய்ய இடத்தில் இருக்கும் ஆடையகத்தில் ஜாக்கி ஜட்டி வாங்கிக் கொண்டிருக்கலாம்.
 • ஓசியில் குடித்துவிட்டுப் போன வாசகர் வட்ட நண்பனை ஒருமையில் வசைபாடிக் கொண்டிருக்கலாம்.
 • ஃபேஸ் புக்கில் பேக் ஐடியில் வந்த ஆணிடம் பெண் என நினைத்து "வெட்டாகுதா" எனக் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
 • தனக்கு முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணின் அந்தரங்க அவயங்களை பார்த்து நேர் பக்கங்கள் என்றெழுதினால் என்னவென்று கணக்கு பண்ணிக் கொண்டிருக்கலாம்.
 • பழைய சரோஜாதேவியின் மைசூர் பதிப்பகப் புத்தகங்களில் இருந்து இரண்டொரு அத்தியாயங்களைக் கிழித்து 360 டிகிரியின் மூன்றாவது அத்தியாயத்துக்கு தயார் செய்துகொண்டிருக்கலாம்.
 • ஓசியில் யாராவது லேப்டாப் கொடுப்பார்களா என்று வட்டத்துக்குள் துழாவிக் கொண்டிருக்கலாம்.
 • ஏதாவது புரியாத மொழியில் புத்தகம் படித்துவிட்டு இது ஜப்பானில் சாக்கி சான் எழுதியது ஆஸ்திரேலியாவில் கங்காரு எழுதியது என்று சொல்லிக் கொண்டிருக்கலாம்.
 • இவ்வளவையும் பார்த்த களைப்பில் இருக்கும் போதும் யாருக்காவது போன் போட்டு பேசலாமே என்பதற்காக ரீசார்ஜ் செய்யச் சொல்லி ஸ்டேட்டஸ் எழுதிக்கொண்டிருக்கலாம். ரீசார்ஜ் செய்த ஏமாளியை அதை வெளியில் சொன்னதற்காக திட்டிக்கொண்டிருக்கலாம்.
 • டேய் நான் படிச்ச புத்தகத்தை எவனாவது படிச்சிருக்கீங்களா.. எல்லாம் என் அடிமைகள்.... நான் ஒரு பல்கலைக் கழகம்டா என்று பிதற்றிக் கொண்டிருக்கலாம்.
 • சொந்த மனைவி மகனுக்கு செய்ததை என்னவோ உலகத்தில் யாருமே செய்யாததை செய்துவிட்ட தியாகி வேஷம் போட்டுக் கொண்டிருக்கலாம்.
 • தண்ணீரில் இருந்து மின்சாரம் பிரித்தெடுக்கும் ரசவாத ஆராய்ச்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கலாம்.
 • பேங்க அக்கவுண்ட் நம்பரை எழுதி பணம் அனுப்பச் சொல்லும் கட்டுரையின் கடைசி பாராவை எழுதிக் கொண்டிருக்கலாம்.

***********************************************************************************************
பிரபல எழுத்தாளர் ஆவது எப்படி? 

நீங்கள் ஒரு புண்ணாக்கு வியாபாரியாக இருக்கலாம், டாக்டராக இருக்கலாம், யாராக இருந்தாலும் இப்ப லேட்டஸ்ட் டிரெண்டு எழுத்தாளர் ஆகிறதுதான் பாஸ். டக்குனு ஒரு நோட்டும் பேனாவும் எடுத்துக்குங்க. கீழே கொடுத்திருக்கும் விஷயங்களை நோட் பண்ணி அதை ஃபாலோ செய்தால் போதும். நாளையில் இருந்து உங்களுக்கும் 'பிரபல எழுத்தாளர் .....க்கு’ என்று மின்னஞ்சல் வரும்.

எழுத்தாளர் ஆவதற்கான புதிய (திருத்தப்பட்ட) விதிகளில் முக்கியமானது ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுன்ட் ஆரம்பிக்கனும். அண்ணாச்சிக் கடை அக்கவுன்ட் மாதிரி கஷ்டம் எதுவும் இல்லை. இது செம ஈஸி! ஃபேஸ்புக்ல உங்க பேருக்கு முன்னாடி ரைட்டர்னு ஆங்கிலத்துல சேர்த்து எழுதணும். அப்பதான் நமக்கே நம்ம மேல் நம்பிக்கை வரும். 

எல்லாத்துக்கும் கருத்து சொல்லணும். முக்கியமா எல்லோரும் சொல்ற கருத்துக்கு எதிராச் சொல்லணும். உதாரணத்துக்கு 'கிராவிட்டி’ படம் நல்லாயிருக்குனு உலகமே சொல்லிட்டிருக்கும்போது, ''த்தூ.. படமா அது?'' என்று கவன ஈர்ப்பு ஸ்டேட்டஸ் போட்டு, கேப்ல கெடாயை வெட்டணும். ''இது நல்ல படம் இல்லைன்னா, வேற எது நல்ல படம்?''னு கோவமாக் கேட்டு, ஒண்ணு ரெண்டு ஆடு சிக்கும், இறங்கி அலசித் தேடினாலும் நெட்ல கிடைக்காத எதாவது ஒரு ஈரானிய, ஈராக்கிய, தைவானியப் படங்கள் பெயரைச் சொல்லி, அது மாதிரி வருமானு கேக்கணும். அந்தப் படத்தை தேடிப் போனவன், அப்புறம் ஃபேஸ்புக் பக்கமே வரமாட்டான். ஓகே இதுவரை சொன்னது அமெச்சூர் எழுத்தாளர்களுக்கு. இனிதான் கொஞ்சம் கொஞ்சமா கங்காவாக இருந்து சந்திரமுகியா மாறும் ஜோதிகா மாதிரி நீங்க பிரபல எழுத்தாளராகப் போறீங்க.

எப்படியும் இலக்கியவாதிகள்னா, அதிலே ஏகப்பட்ட குரூப்ஸ் இருக்கும். ஏதாவது ஒரு குரூப்ல ஐக்கியமாகித் தளபதி ஆகணும். அப்புறம் 'தல’யே உங்களைப் பத்தி பாராட்டியோ, திட்டியோ எழுதிப் பிரபலம் ஆக்கிடுவார்.

புத்தகக் கண்காட்சி ஆரம்பிக்கிறதுக்கு ஒரு மாசத்துக்கு முன்னாடியே நீங்க வெளியிடப்போற புத்தகத்துக்கான விளம்பரத்தை ஃபேஸ்புக்கில் ஆரம்பிக்கணும்.

''காபி ஷாப்பில் நல்ல காபி கிடைக்கிறது. ஆனால் ஒயின் ஷாப்பில் நல்ல ஒயின் கிடைப்பது இல்லை.'' வெளியாகவிருக்கும் 'கொலைவெறி’ நாவலில் இருந்து...

- இப்படி நாள் ஒன்றுக்கு 18 ஸ்டேட்டஸ் விளம்பரங்கள் போட வேண்டும்.

புத்தக வெளியீட்டு விழாவில் வாசகிகளின் சார்பாக ஒருவர் மட்டும் பேசுவார் என்று அறிவிப்பு வெளியிட்டு, நிறைய வாசகிகள் விழாவிற்கு வருவார்கள் என்று மறைமுகமாகச் சொல்ல வேண்டும். அப்புறம் என்ன, வெளியீட்டு விழாவுக்குக் கூட்டம் பிச்சுக்கும். விழா அன்று வாசகிகள் என்று யாரும் வரப்போவது இல்லை என்பதால், ஷூட்டிங் ரிச் கேர்ள்ஸ் புக் செய்து அழைத்து வர வேண்டும். அவர்களுக்கு பாதுகாப்புக்காக பௌன்சர்களையும் ஏற்பாடு செய்ய வேண்டும்.

மேல உள்ள டிப்ஸையெல்லாம் குறிச்சிக்கிட்டீங்களா? முதல் வேலையா வாசகர் வட்டம் ஆரம்பிச்சிருவோம். என்னாது... இன்னும் 'வணக்கம்’ ஸ்டேட்டஸே போடலையா, அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம் பாஸு, வட்டம் இருந்தாதான் வரலாற்றில் இடம் பிடிக்க முடியும்!
***********************************************************************************************
எங்கள் விமர்சகவட்டம் வெளியிடப்போகும் புத்தகத்திற்கான பெயர் பரிந்துரைகள்.. 

1. என்ன மாதிரியான உலகத்தில் வாழ்கிறோம்
2. ரெமி மார்ட்டினும், கெல்வின் க்ளைன் ஜட்டியும்
3. ஜென்குருவும் CK ஜட்டியும்
4. ஆட்டோபிகேஷனும் ஜாக்கி ஜட்டியும்
5. மை அக்கவுண்ட் நம்பர் இஸ்..
6. பயங்கரம், அதி பயங்கரம்
7. வெட்
8. ஈரம்
9. டாக்டர் ஜோன்ஸ்
10. குப்பி
11. மண்டையும், மக்கு குஞ்சுகளும்
12. ஆல் இன் ஆல் அறிவழகன்
13. கயவாளிப்பயல்
14. எங்க ஊரு சிலேக்காரன்
15. ’தெரிதா’ தெரியலையா
16. விரல் நடிகன்
17. பால்பிடேஷன்
18. வட்டத்துக்குள் மண்டை
19. கவித கவித to Ladies Only
20. தென் அமெரிக்க தேவாங்கு 
***********************************************************************************************
புத்தக வெளியீடு காணொளி:

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

1 comment:

GURUMOORTHY PALANIVEL said...

20. தென் அமெரிக்க தேவாங்கு

super title