Friday, 16 November 2012

உலக நாயகன் அடுத்த ப்ராஜெக்டில் ஒலக எழுத்தாளர் சாரு வசனம் - சாரு டைம்ஸ் (16/11/2012)..!!!!

சாரு நிவேதிதா - பதிவுலக கைபுள்ளை. இவரோட தொடர் காதல் கடிதங்கள் ஒலக பேமஸ். மிஷ்கினுக்கு நிறையவே எழுதி உள்ளார். அதே போல் நித்தி பிரச்சினை வெடித்த நேரத்தில் கோபிநாத் மண்டையை நீயா நானா நிகழ்ச்சிக்கு அழைத்து கதற கதற ஆழ விட்டு, நித்தி விஷயத்தில் இவர் ஆடிய டபுள் கேமிற்கு விஜய் டிவி முலம் தமிழக மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வைத்தார். இது போதாதா மண்டை கோபிக்கு கடிதம் எழுத... எழுதி தள்ளினர். அவைகளின் சில உங்கள் பார்வைக்கு.
***********************************************************************************************************
சாருசென்ற ஆண்டு (2010) நீயா நானா நிகழ்ச்சிக்காக அழைக்கப்பட்ட எனக்கு சன்மானம் எதுவும் கொடுக்கவில்லை. இது பற்றி ஒரு பத்திரிகையில் எழுதியிருந்தேன். அதற்குப் பழி வாங்கும் நோக்கத்துடனேயே மே 30-ஆம் தேதி நடந்த நீயா நானாவில் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. நானோ ஆண்டனி & கோபிநாத் பிரதர்ஸின் இத்திட்டம் பற்றி எதுவும் அறியாதவனாக அங்கே அமர்ந்திருந்தேன். என்னை மடக்க வேண்டுமென்று அவர்கள் முன்கூட்டியே திட்டமிருந்ததால் என்னால் அக்கேள்விகளை எப்படி எதிர்கொள்வதென்று புரியவில்லை. 
http://charuonline.com/blog/?p=594

சாரு:ஆண்டனியின் பக்கத்தில் உட்கார்ந்து நிகழ்ச்சியின் ஆரம்பக் கட்டங்களைப் பார்த்த போது எனக்கு ஒரு wwf நிகழ்ச்சியைப் பார்ப்பது போல் இருந்தது. ”விடாதே… அந்தப் பச்சை சட்டைக்காரனை விடாதே… நீ என்ன நினைக்கிறேன்னு கேளு… விடாதே விடாதே அமுக்கு….” என்று குறைந்த குரலில் – ஆனால் படு ஆவேசமாகக் கத்துவார் ஆண்டனி. அந்த் சேடிஸத்தை நான் எழுதி நீங்கள் புரிந்து கொள்ள முடியாது. ஆண்டனி கோபிநாத்திடம் “மைக்கை அந்தப் பச்சை சட்டைக்காரனிடம் கொடு; அவனைப் பேசச் சொல்லு… இப்போ அந்தக் குரங்கு மூஞ்சிக்காரண்ட்ட குடு…” என்றே கத்திக் கொண்டிருந்தாராம். இதையேதான் நானும் பார்த்தேன்.
http://charuonline.com/blog/?p=630

சாருஎந்த ஒரு மதத்தின் மீது காழ்ப்புணர்ச்சியோடு நடந்து கொள்ள ஆண்டனி போன்ற ஊடக நண்பர்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
http://charuonline.com/blog/?p=635

சாருஆண்டனி, கோபிநாத் என்ற இரண்டு சமூக விரோதிகளும் என்னை மட்டும் அவமானப்படுத்தவில்லை. அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் எல்லோரையும் அவமானப்படுத்துகிறார்கள். உடனடியாக அந்த நீயா நானா நிகழ்ச்சி தடை செய்யப்பட வேண்டும். இதற்கு வாசகர்கள் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
http://charuonline.com/blog/?p=757

சாரு அடிமைகள்நீங்க கவலைபடாதீங்க தல, இந்த கோபிநாத்துக்கு நம்ம யாருன்னு ஒரு காட்டு காட்டிடுவோம்! நாங்கள் நீயா நானா நிகழ்ச்சியை புறக்கணிப்போம்!

சாரு (4/11/12): ஒரு இயக்குனரை நண்பனாக மதித்துப் பழகினேன். அவரோ பொதுமேடையில் வைத்து என்னை அவமானப்படுத்தினார். உடனே நான் என்ன செய்தேன்? அவரைக் கிழி கிழி என்று கிழித்து சாருஆன்லைனில் நூறு பக்கம் எழுதினேன். பத்திரிகையில் எழுதினேன். ஆனால் காசு கிடைக்க வேண்டுமானால் என்ன செய்து இருக்க வேண்டும் தெரியுமா? 
என்ன புஷ்கின் சார்… இப்பூடி சொல்லிப் புட்டீங்க? என் மேல என்னங்க கோபம் சார்? என்று கேட்டு அவர் காலில் மஸ்கிட்டோ ஆயின்மெண்ட் தடவி (அவர் அரைக்கால் டவுசர் தான் போடுவார்; அதனால் காலில் கொசு கடிக்காமல் இருக்க ஆயின்மெண்ட் தடவி விட்டிருந்தேன் என்றால் நண்பர்களே உங்களிடம் நான் காசு கேட்டிருக்க மாட்டேன்.

லேட்டஸ்ட் சாருவரும் ஞாயிறு அன்று (11.11.2012) இரவு ஒன்பது மணியிலிருந்து பதினோரு மணி வரை ஒளிபரப்பாகும் நீயா நானா (விஜய் டிவி) நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டு பேசுகிறேன். முடிந்தால் பார்க்கவும்.

சாரு வட்டகுஞ்சுகள்நீங்க கவலைபடாதீங்க தல, கண்டிப்பாக கரண்ட் இல்லாட்டியும் பெட்ரோமாக்ஸ் லைட் வச்சாவது பார்த்துவிடுகிறோம்! எங்க மாமன், மச்சான், பங்காளி எல்லோரையும் பார்க்க சொல்றம்! நீங்க இல்லாம அந்த கோபிநாத் பயலால அந்த நிகழ்ச்சி நடத்த முடியாது தல

கும்மாங்கோ2 லட்சம் புத்தகம் விற்கும் கோபிநாத் 2000 புத்தகம் விற்கும் வெறிக்குட்டியிடம் மன்னிப்பு கேட்டிருக்கமாட்டார்! அப்ப நம்ம வெறிக்குட்டிதான் நாலு கால்ல போய் இருக்குமோ? ஆனா கோபிநாத் செகப்பானவரு, பொய் சொல்லமாட்டார், காலும் செகப்பா இருக்கும், மஸ்கிட்டோ ஆயின்மெண்ட் தடவறது சுலபம்!

கொயாக்கோஇந்த விடலை வெறிக்குஞ்சுகள நினைத்தால் பரிதாபமாக இருக்குது, எப்படியெல்லாம் சுடு, சொரணை, மானம், ஈனம், சுய மரியாதை, சுய புத்தி எல்லாத்தையும் அடகு வச்சுட்டு இந்த ஆளுக்கு ஜிங்சா போடவேண்டி இருக்குது!
***********************************************************************************************************
மண்டையோட சினிமா அறிவு நம்ம அறிந்ததே..ஒலக ஈலக்கியதில் அவருக்கு எந்த அளவு அறிவு இருக்கோ, அதே அளவு அறிவு தான் சினிமாவை பத்தியும் மண்டைக்கு இருக்கு. மண்டை கமலை தாக்கி நிறைய பதிவு எழுதி இருப்பது நாம் அறிந்ததே. அதே கமலிடம் இருந்தது மண்டைக்கு, கமலின் அடுத்த படத்துக்கு வசனம் (அட கலாய்க்குறதுக்கு தான்) எழுத வாய்ப்பு வந்தால்..ஒரு கற்பனை ..!!!!!
மிஷ்கின்க்கு எழுதிய காதல் கடிதங்களை மிஞ்சும் அளவுக்கு மண்டையின் கடிதங்கள் இருக்கும். சில கற்பனை கடிதங்கள்...

கடிதம் ஒன்னு: கமல் என்னும் ஒலக கலைஞன்.

கமலுடன் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், ஈரானிய நடிகர் எஸ்கிமோபட்லியோவுக்கு பிறகு ஆகச் சிறந்த நடிகர் என்றால் அது கமலஹாசன் தான் என்பதை என்னுடைய வாசகர்களிடம் அடிக்கடி கூறி வந்திருக்குறேன்.
அவருடைய ஆகச் சிறந்த படங்களான ஆடு புலி ஆட்டம், டெய்ஸி, பேர் சொல்லும் பிள்ளை போன்ற படங்களை நான் பிராண்ஸ் நடைபெற்ற உலகப் பட விழாவில் திரையிட்ட போது அதை பற்றி எழுதிய விமர்சணம் சீலே நாட்டின் சிறந்த இலக்கிய பத்திரிக்கையான ஸ்திரிமோல்வியாவில் வெளிவந்து இருந்தது. அதில் என்னுடைய பேட்டியை படித்துவிட்டு அந்நாட்டு அதிபர் என்னை பார்க்க வேண்டுமென்று கடிதம் எழுதியிருந்தார், அன்று அவரை பார்த்திருந்தால், துனை ஜனாதிபதி அல்லது கவர்னராகவோ ஆகியிருப்பேன். 
அவந்திகா கூட என்னிடம் புலம்புவது உண்டு, ஏன் எப்ப பார்த்தாலும் கமலோட, “சிகப்புகல் மூக்குத்தி” படத்தையே பாத்திட்டு இருக்கேன்னு. நான் சொல்வேன், இந்த படம் பட்டும் தென்னமெரிக்காவில் வெளிவந்திருந்தால், சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது இவருக்கு நிச்சயம் கிடைத்திருக்கும்னு. வரும் ஞாயிறு காலை பத்தரை மணிக்கு wintvவில் இந்த படத்தை பற்றி பேசுவதற்காக குறிப்பு எடுத்திக் கொண்டிருக்கும் போது தான் கமலுடைய அலுவலகத்தில் இருந்து ஃபோன் வந்தது.

கடிதம் ரெண்டு: கமல் என்னும் ஒலக கலைஞன் -2

இன்று அதிகாலை நாலரை மணிக்கு வழக்கம் போல் அர்க் குடித்து விட்டு நார்வே நாட்டு எழுத்தாளர் குஸுபுர்கோ என்னுடைய நாவலை கொரிய மொழியில் மொழிபெயர்க்க விரும்புவதாக கூறியதால் அதை ஃப்ரெண்சில் மொழிபெயர்த்துக் கொண்டிருந்த போது...என்னுடய நீண்ட நாள் வாசகர் ருவாண்டாவில் இருக்கிறார் பேரழகி, இருபத்தி ஓரு வயது, என்னுடைய எல்லா நாவல்களையும் கரைத்து குடித்தவர், இருபத்தி ஐந்து வருடஙகளாக ருவாண்டாவில் வசித்து வருபவர் சேட்டில் வந்து, hi charu என்றார், நானும் வழக்கம் போல, உனக்கு அங்க வெட் ஆகு.....சாரி சாரி..உனக்கு அங்க வெதர் எல்லாம் எப்படி இருக்குன்னு கேட்டு வைத்தேன். மைனஸ் 202 degree யாம். இருந்தாலும் உள்ளாடை அணியாமல் தான் தூங்குவாளாம். கருமம் என்ன பேசினாலும் இங்க தான் வந்து முடியுது.
ஆங் எங்க விட்டேன்..ம்ம் hi charu, உங்களுக்கு ஒரு டிவிடி அனுப்பி இருக்கிறேன், நிங்கள் அந்த படத்தை அவசியம் பார்க்க வேண்டும் என்று கூறியிருந்தார். கூரியர் வந்த உடன் பார்த்தால் டிவிடி அட்டையில் தமிழில் எழுதியிருந்தது, நான் தமிழில் படிப்பதை விட்டு எழுபது ஆண்டுகள் ஆனபடியால், அவந்திகாவிடம் இதில் என்ன எழுதியிருக்கிறது என்று படித்து காட்ட சொன்னேன். அவள் அதை வாங்கி படித்து விட்டு, எதோ “ தசவதாரம்”னு எழுதியிருக்குன்னு சொல்லிட்டு ஆன்மிக சொற்பொழிவிற்கு போய் விட்டாள். யாரோ கமலஹாசனாம், தமிழில் கொஞ்சம் பிரபலமானவராம். அட்டைப் படத்தில் பார்க்க கொஞ்சம் சுமாராக இருந்தார். சரி இன்று சீன பல்கலைகழகத்தில் நான் இனையத்தில் ஆற்ற வேண்டிய உரை இரண்டு தினம் தள்ளி போனதால், அந்த படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்திலேயே தெரிந்து விட்டது, நான் பார்த்துக் கொண்டிருப்பது ஒரு உலக படமென்று, நெப்போலியன் என்று ஒரு நடிகர் கமலை பார்த்து விடுங்கள் அவன் என் பால்ய நண்பன்னு சொல்லும் போது, அங்கே இருந்த குதிரை கமலை முறைத்து பார்க்கும், இது மாதிரி ஒரு பின்நவினதுவ திரைப்படத்தை நான் கொரிய, ஈராணிய படங்களில் மட்டுமே பார்த்திருக்கிறேன்.

கடிதம் முனு:ஆமாம் நான் கமலுக்கு கதை எழுதுகிறேன் (1)

இந்த விஷயத்தை (கமல் படத்திற்கு வசனம் எழுதும் வாய்ப்பு) நான் சுராதுவுக்கு தெரிவித்தவுடன், நாளை வேலை வெட்டி இல்லாத நாலு பேர் இந்த விஷயத்தை வைத்து கும்மி அடிப்பார்கள், இது தேவையா? என்றார். அடித்து விட்டு போகட்டும் , அய்யா நான் படாத அசிங்கமா ? எனது வாசகர்கள் அனைவரும் மத்திய தர வர்க்கத்தினர் , அவர்களால் எனது பயணங்களுக்கும் , அன்றாட செலவினுக்கும் பணம் தர இயலாது. நான் என்ன செய்வது ? நான் இருபது வயதில் செய்த வேலைகளை இப்போது என்னால் செய்ய இயலாது . how long should i lead this miserable life ? நானும் கமலும் பத்து வருடங்களுக்கு முன் சிறிய மனஸ்தாபம் கொண்டு கொண்டு இருந்தது உண்மை தான் . but we always had mutual respect to each other. இபொழுது நாங்கள் சேருகிறோம் என்றால் அவர் நடிப்பின் மீது நான் வைத்திருக்கும் மரியாதையும் என் எழுத்தின் பால் அவர் கொண்டிருக்கும் மரியாதையும் தானய்யா காரணம்.

ஒருபோதும் பணத்திற்காக சொம்பு தூக்கும் வேலையை நான் செய்ய மாட்டேன். பணம் தான் எனது குறிக்கோள் என்றால் நான் எதற்கையா தமிழில் எழுதுகிறேன். சுமார் பதினைந்து வருடர்த்திருக்கு முன் இஸ்பானிய எழுத்தாளர் டோரோ தத்யோ விடம் (doro datyio) பேசிகொண்டிருந்த போது (இஸ்பானியா மொழியில் தான் - இஸ்பானிய மொழி தெரிந்தவர்களிடம் அதே மொழியில் பேசுவது தான் அடியேனின் வழக்கம்) , நீங்கள் இஸ்பானியா அல்லது ஆங்கிலத்தில் எழுதியிருந்தால் பாதி தமிழ்நாட்டையே விலைக்கு வாங்கி இருக்கலாம் என்றார். ஆனாலும் நான் ஏன் தமிழில் எழுதுகிறேன்?
//கொயாக்கோ: அடிச்சு கூட கேப்பாங்க..அப்ப கூட சொல்லிடாதீங்க...நமக்கு மானம் தான் முக்கியம்.//
இன்னும் புரியவில்லையா உங்களுக்கு ? இப்படி ஒவொருவருக்கும் நான் விளக்கிகொண்டிருந்தால் என் எழுத்து வேலை என்னாவது? இதே கேள்வியை உ த எழுத்தாளரிடம் உங்களால் கேட்க முடியுமா? இதை நான் சுராதுவுக்கு மட்டும் சொல்லவில்லை , என்னிடம் விளக்கம் எதிர்பார்க்கும் அனைவருக்கும் தான் ...

தொடரும் ....
***********************************************************************************************************
படம் பார்த்து கதை சொல்: 

பாரு: டேய் டெனால்ட் டக்..

சொம்பாத்து : தல...அது டொனால்ட் பார்க்.

பாரு: மு...கூ... எனக்கு தெரியாதா, கூபாவுல டொனல்ட் டக்குனு தாண்டா சொல்லுவாங்க
//கொக்கரக்கோ: அவ்வ்வ்வ் எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு//
பல்லு குத்துனது போதும். கீழ கோக் பாட்டில் வச்சிருக்கேன், எவனாவது எடுத்து குடிச்சிங்க...நடக்குறதே வேற....

புரியரோகி : தல...நீங்க தானே ரெண்டு வருசம் முன்னாடி கோக்க கோலா கம்பெணிக்கு எதிரா பாலாகாட்டுல நடந்த போராட்டத்துல கலந்துகிட்டு வீர முழக்கம் செஞ்சிங்க, இப்போ நீங்களே அத குடிக்குறீங்க.
//கொக்கரக்கோ :அவர் நல்லா எழுதுறேன்னு கூட தான் சொல்லுறாரு//

பாரு : யாரங்கே...இவனை உடனே...வட்டத்துல இருந்து நீக்குங்க, இனிமே இவன் கூட யாரும் தண்ணி பொழங்க கூடாது.

சொம்பாத்து : தல...சாப்பிட்ட பில்லுக்கு காசு வச்சிருக்கிங்களா, இவ்வளவு கோவபடுறீங்க

பாரு : ஆங்...வந்து...அட விடுப்பா....அது ஒன்னுமில்ல புரியரோகி. நீங்க எல்லாம் என்னை தப்பா புரிஞ்சிட்டீங்க, இது கோக் பாட்டில் தான். ஆனா உள்ள இருக்கிறது, சுக்குத் தண்ணி. இத நான் காலையில நாலு மணிக்கு எந்திருச்சு, ரெண்டு லிட்டர் தண்ணியில கால் கிழோ சுக்கை நல்லா அரச்சு.......

சொம்பாத்து: தல நல்லா நாட்டா இருக்கு பாரு ஆப்லைன்ல போடுங்க படிச்சிக்குறோம் .


பாரு :அப்படிங்குறே....பேசாம இத பத்தி நான் லாஸ் டீவியில அரைமணி நேரம் பேசட்டுமா ???

//சொம்பாத்து மைண்ட் வாய்ஸ் : நீங்க எப்போ அந்த டிவியில பேச ஆரம்பிச்சிங்களோ, அப்போ இருந்தே அது லாஸ் டிவி தான்.//

சொம்பாத்து : நீங்க பேசுங்க, தல.. you proceed.... எப்படி்யும் கேரளாவுல அஞ்சு கோடி பேரு பாப்பாங்க.

புரியரோகி : அத விடுங்க.... இப்போ பிரச்சணை.....இந்த ஃபோட்டோவை அந்த வட்டத்துல யாராவது எடுத்து போட்டா, நாம இனிமே கேரளாவுல தலை காட்ட முடியாதே தல.

பாரு : இதெல்லாம் ஒரு பிரச்சணையா, வழக்கம் போல அது நான் இல்லை, மார்பிங்... எதிரணியினரின் சூழ்ச்சின்னு சொல்லிட்டா சரியா போச்சு.

சொம்பாத்து : நாசமா போச்சு...இத எடுத்ததே நாமா தானே.

பாரு : சரி விடு....எப்படியும் ஒரு வாரத்துல வேற எதுலையாச்சும் மாட்டுவோம்.... அப்போ இதை அவங்களே மறந்திடுவாங்க.

புரியரோகி : எதோ பாத்து செய்யுங்க தல, எனக்கு என்னமோ, இனிமேல் கேரளா போகாதீங்க, போனாலும் ஊரை கூட்டி சொல்லிட்டு போகாதீங்க, அந்த வட்டத்துல இருக்குறவங்க, இந்த ஃபோட்டோவை அவங்களுக்கு அனுப்பிட்டு தன் வேற வேலை பாப்பாங்க.
***********************************************************************************************************
இவன்: சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

6 comments:

வவ்வால் said...

நண்டு,

நல்லா கலாய்ப்பு,ஆனால் இதெல்லாம் ஒரு கூட்டு திட்டமா?

அப்புறம் படத்தில் இருக்கும் பாட்டில் பெப்சி, பாரு மானஸ்தன்யா...கொக்கோ கோலா குடிக்க மாட்டார் ஆனால் பெப்சி குடிப்பார் ,ஏன்னா பேரு வேற :-))

T.Thenmathuran said...

//சரி விடு....எப்படியும் ஒரு வாரத்துல வேற எதுலையாச்சும் மாட்டுவோம்.... அப்போ இதை அவங்களே மறந்திடுவாங்க.//ஹி..ஹி...
சூப்பர்....

mathuran said...

சாருவுக்கு அவருக்கு வசதியானதில் மறதி அதிகம், அப்பப்போ ஞாபகப்படுத்துவது அவசியம்.
வழமைபோல் கலக்கல்!

ராஜ் said...

பாஸ், செம காமெடி. You guys are really rocking, keep posting posts like this. :):):)
எனக்கும் இந்த ஆளை சுத்தமாய் பிடிக்காது.

நம்பள்கி said...

நேக்கு ஒன்னும் புரியலை. இது கிண்டலா இல்லை உண்மையா என்று;
யாரவது புளி போட்டு நன்னா விளக்கி சொல்லுங்கோ! நானும் ஜோதியில் திவ்யமா கலந்துக்கிறேன்...!

மாற்றுப்பார்வை said...

அருமை