Tuesday, 27 November 2012

ஒலக எழுத்தாளர் சாருவுக்கு வந்த காதல் கடிதம். சாரு டைம்ஸ் (27/11/2012) !!!!

ஈலக்கிய உலகின் பவர் ஸ்டார் சாரு நிவேதிதா அவர்கள் தனக்கு வந்த ஸ்பாம் மெயில் ஒன்றை, ஒரு பெண் எழுதிய காதல் கடிதம் என்று வாய்க்கு வந்தபடி ஒளறி தனது தளத்தில் வெளியிட்டு இருக்கிறார். கடிதம் ஸ்பாம் என்பதை இணைய அறிவு ஒரு சதவிதம் உள்ளவன் கூட சொல்லி விடுவான். ஆனால் தனது அடிமைகளால் என்சைக்லோப்பீடியான்னு என்று அன்போடு அழைக்க படும் மண்டைக்கு இது ஸ்பாம் என்று தெரியாமல் போனது ஆச்சிரியமே.


இது ஸ்பாம் என்பதருக்கு ஆதாரம்: Possible spammer: joylove

காதல் கடிதத்தில் இருந்தது:
//”நான் சும்மா நட்புக்காகப் போட்ட கடிதத்தை காதல் கடிதம் என்று சொல்லி கொச்சைப் படுத்தி என்னை மானபங்கம் செய்து விட்டார் எழுத்தாளர்” என்று சம்பந்தப்பட்ட பெண் பத்திரிகைகளில் பேட்டி கொடுத்து மீண்டும்  என்னை சிக்கலில் மாட்டி வைத்து விடக் கூடாதே என்று பயந்துதான் பெயரையும் ஈமெயில் முகவரியையும் நீக்கி விட்டேன்.ஆனால் இவரது முகநூலில் மிகக் குறைந்த ஆடையுடன் ஒரு பெண்ணின் படம் காணப்படுகிறது. ///

இதன் பின்விளைவுகள் எப்படி இருக்கும்...!!!!

கும்மாங்கோ: குஞ்சுகளா, உங்க மண்டைக்கு ஒரு கிரெடிட் கார்டு கொடுத்துருங்க! ஒரு நிமிசத்துக்கு $1.99 - 3.99, ஏகப்பட்ட lovejohnson கூட மஜாதான்!

கொயாக்கோ: அடங்கொய்யால, உன்னை போய் அறிவுஜீவி, இலக்கியத்தை கரைத்து குடித்த ஞானத்தந்தை சொல்லுதுங்க இந்த விடலைங்க! தாய்லாந்த் போய் baht சொருகியும், பாலியல் வரட்சி இன்னும் தல விரித்து ஆடுது, கெரகம்!

கொக்கரக்கோ: நான் சோறு தண்ணி இல்லாமல் ஒரு நாளைக்கு 26 மணி நேரம் இலக்கியம் படிக்கிறேன்னு சொல்லறது இந்த எழவத்தானா?

இந்த அவமானத்தை எப்படி சமாளிப்பது என்று சாரு வட்டத்து அடிமைகளுக்கு சில யோசனைகளை:

சாரு வட்டத்து குஞ்சு: சாரு ஒரு குழந்தை மாதிரி, அவர் ஈசியா ஏமாந்துவிடுவார், இப்படிப்பட்ட ஒரு வெள்ளை மனச குறை கூறும் உங்களை அந்த ஐயப்பன் பார்த்துக்கொள்வார்!

சாரு பாவம். செந்தில் கவுண்டமணிக்கு ஸ்ரீதேவி ஃபோட்டோவை காமிச்சு ஏமாத்துவாருல அது மாதிரி சாரு ஏமாந்துட்டார்.

மண்டை மைன்ட் வாய்ஸ் : அப்போ ஐரோப்பாவில் unclaimed ஆ இருக்கும் $900,000,000 மில்லியன் பணத்தை legal சார்ஜ் $5000 டாலர் அனுப்பி பெற்றுக்கொள்ளுங்கள்னு வந்த மெயிலும் ஃபிராடு தானா...?? இல்ல இல்ல பயபுள்ளைங்க பொறாமையில பேசுதுங்க, சீக்கிரமா உண்டியல் குலுக்கி 5000 டாலரை அனுப்பி மொத்த காசையும் வாங்கிடனும்.
***********************************************************************************************************
உலகம் சுற்றும் கோமாளி...!!! (ஒலக மேப்பை வச்சே உலகத்தை எப்படி சுற்றி வருவது என்று சாணி..சாரி சாரு சொல்கிறார் கேளுங்க)

சாணி (14.3.2010): இன்னும் சில மாதங்களில் நான் அமெரிக்கா செல்ல இருக்கிறேன். அப்போது நிச்சயம் டொரொண்டோவும் உண்டு.

சாணி (12.10.2010): கூடிய விரைவில் ஒரு ஐரோப்பியப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச இலக்கியம் பற்றி உரையாற்றுவேன்.

சாணி (30/03/2012): இந்த 2000 பேரில் 20 பேர் தான் என்னை போஷிக்கிறார்கள். சட்டை வாங்கிக் கொடுக்கிறார்கள்; மோதிரம் போடுகிறார்கள்; ரெமி மார்ட்டின் வாங்கிக் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட நண்பர் ஒருவர் நேற்று என்னிடம் “உங்களுக்குக் க்யூபாவுக்கு ஒரு டிக்கட் வாங்கிக் கொடுக்கிறேன்; போய் வாருங்கள்” என்று சொல்லி இருக்கிறார். கச்சி ஏகாம்பரன் என் குரலை செவி மடுத்து விட்டான் என்று நினைத்துக் கொண்டேன்.

சாணி (17/05/2012): this is about my chile trip. thanks nirmal and thomas samy. இப்போது எனக்கு சிலே போய் விடுவேன் என்ற நம்பிக்கை வந்து விட்டது. எங்கே சல்லிசாகத் தங்குவது என்பது போன்ற விபரங்களை நெட்டில் தேடிக் கொண்டிருக்கிறேன். நம் நண்பர்களில் யாருக்கேனும் சிலே அல்லது ப்ரஸீலில் நண்பர்கள் யாராவது இருக்கிறார்களா என்று தெரிவிக்கவும். Priyamudan Throgi, Raja Rajendran, Rajesh, Suresh, Aarathu: உங்களால் எவ்வளவு கொடுக்க முடியும்?

சாணி (06/06/2012): சிலே போக வேண்டும், ப்ரஸீல் போக வேண்டும், கூபா போக வேண்டும்… அதற்கு யாராவது ஸ்பான்ஸர் செய்ய முடியுமா, தனியாக முடியாவிட்டால் கூட்டாகச் சேர்ந்தாவது ஸ்பான்ஸர் செய்ய முடியுமா என்று வாசகர் வட்டத்தில் கேட்டால் ....
7:30 to 8:00 மண்டைக்கு அர்ப்பணம்!


***********************************************************************************************************
சாரு அடிமைகள் வட்டத்தின் ரமணா ஸ்டைல் புள்ளி விவரம் : தமிழ்நாட்டில் மக்கள் தொகை ஏழு கோடி, அதில் தமிழர் மட்டுமே ஐந்து கோடி என்று வைப்போம், அதில் படிக்கத் தெரிந்தவர்கள் மூன்று கோடி, அதில் சாரு போன்ற இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும் அறுபது லட்சம் பேர் வருகிறார்கள். இதை குடும்பத்திற்கு பத்து பேர் என்று பிரிப்போம், அப்படி பார்த்தால் ஆறுலட்சம் குடும்பம் வரும், இதில் புத்தகம் வாங்கி படிக்குமளவு சக்தி கொண்ட குடும்பங்கள் ஐம்பது சதவிகிதம் எனில் அது மூன்று லட்சம் குடும்பம் ! ஆக, ஒரு தரமான படைப்பு வந்தவுடன் மூன்று லட்சம் பிரதிகளாவது ஒரே வருடத்தில் விற்கவேண்டும். சரி, சாருவுடையது பின்நவீனத்துவமானது என்றால் ஒரு லட்சமாவது விற்க வேண்டும், எக்சைல் இதுவரை ஐந்தாயிரம் விற்றிருக்கும் (?) இப்போது சொல்லுங்கள், சாரு கோபப்பட வேண்டுமா, தேவையில்லையா ? (நான் சொன்னது தோராயக் கணக்கு, மிகவும் குறைவான சதவிகித கணக்கையே சொல்லியிருக்கிறேன், இதில் வெளிநாட்டுத் தமிழர்களை வேறு சேர்க்கவில்லை)//

எங்களின் கவுண்டர் ஸ்டைல் பதிலடி : வாக்களி, நீங்க எப்போ காமெடி பண்ண ஆரம்பிச்சீங்க. உங்க கணக்கு படியே இலக்கியவாதிகளை படிக்குமளவு தமிழ் கற்றவர்கள் குறைந்தது 20 சதவிகிதம் என்று வைத்தாலும். இலக்கியங்களை படிப்பவர்களில் சாருவை படிப்பவர்கள் எத்தணை சதவிதம் பேர்ன்னு ஒரு கணக்கு எடுத்திருக்கனும்ல. சுஜாதா,சுரா,அசோகமித்திரன், ஜெமோவை படிக்குறவங்களும் சாருவை படிப்பாங்கன்னு கணக்கு போட்டா எப்படி சார் ???

அப்புறம் 20 சதவிகிதத்துல பாதி பேர் பெண்கள்ன்னு கணக்கு போட்டா, பெண்களில் எத்தணை பேர் சாருவை படிப்பாங்கன்னு கணக்கு போடனும்ல. சின்னதா உங்க வட்டத்துலேயே ஒரு கணக்கு போட்டு பாருங்க. உங்க வட்டத்துல ஆண் பெண் வாசகர்கள் ratio எவ்வளவுன்னு. 2000 பேரில் ஒரு நாலு பொண்ணுங்க இருப்பாங்களா??

எங்க கணக்கு படி பாத்தா எக்ஸைல் ஐந்தாயிரம் வித்ததே ரொம்ப பெரிய விசியமா தெரியுது, மூனு லட்சம் விக்கனும்னு சொல்றீங்களே இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா இல்லை.
***********************************************************************************************************
மலேசிய பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு சென்னை திரும்பிய ஒலக எழுத்தாளரை வரவேற்க்க ஓட்ட பட்ட போஸ்டர்.
போஸ்டர் பார்த்த சாணி : என் நண்பர் ஒருவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது இந்த போஸ்டரை பார்த்து குழப்பம் அடைந்துவிட்டார்! இதை போட்டோ எடுத்து எனக்கு மின்னஞ்சலில் அனுப்பி எனக்கு ஏதாவது தெரியுமா என்று கேட்டு இருக்கிறார்! இந்த "phenomenon"ஐ அவருக்கு எப்படி விளக்குவது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கிறேன்!

சாரு வட்டத்து குஞ்சுகள்: இதே மாதிரி தான் ஐடியில வேலை பார்க்கும் இளைஞர்கள் கையில் காசு நிறைய இருந்தால் அதை ஊதாரிதனமா செலவு செய்து கெட்டுப்போயிடுவார்களேன்னு நினைச்சு தான் அவர்களிடம் நண்கொடை வாங்குகிறார் சாரு. இப்படி இளைய சமுதாயத்தை காப்பதற்காக தன்னுடைய பெயர் கெட்டாலும் பராயில்லை என்று வாழும் ஒரு ஜென் குருவை தான் நீங்க இப்படி கலாய்குறீங்க.
***********************************************************************************************************
சாரு வாசகர் வட்டத்தின் அனாடமி:

உள் வட்டம்: வருசத்துக்கு ஒரு முறையாவது காசு இல்லாட்டி சரக்கு கொடுத்து, காது ஜவ்வு கிழியிர அளவுக்கு ஜால்ரா அடிக்கணும். எந்த முரணையும் அபத்தத்தையும் கேள்வி கேட்டகாமல் வாயையும் சூ... மூடிட்டு இருக்க கத்துக்கணும்!

நடு வட்டம்: காசு கொடுக்காட்டி பரவா இல்லை, ஆனா காசு கொடுக்க முடியாத bloody மிடில் கிளாஸ்னு மண்ட மானத்தை வாங்கினா கண்டுக்க கூடாது. காது ஜவ்வு கிழியிர அளவுக்கு ஜால்ரா அடிக்கணும். எந்த முரணையும் அபத்தத்தையும் கேள்வி கேட்டகாமல் வாயையும் சூ... மூடிட்டு இருக்க கத்துக்கணும்!

வெளி வட்டம்: காசு குடுக்காம, கேள்வி கேட்காம, சத்தம் கட்டாம வேடிக்கை பார்த்து, முரணையும் அபத்தத்தையும் விமர்சகர் வட்டத்திலே கிழிக்கலாம்!
***********************************************************************************************************

No comments: