Thursday, 18 April 2013

உனக்கு அங்க "வெட்" ஆகுதா. ?? - பெரியவர் சாட் சாரு - சாரு டைம்ஸ் (19/04/13)

சாருவின் அல்டிமேட் காமெடி பதிவுகள் தொடர்கிறது,படித்து மகிழுங்கள்..

ஜப்பான்ல ஜாக்கிசான்  கூப்புட்டாகோ.... !!!

பொதுவாக 420 என்று தொடங்கும் எந்த அழைப்பையும் நான் எடுப்பதில்லை.வெள்ளி கிரகத்தில் இருந்து ஏதாவது ஒரு "கால் " சென்டரில் இருந்து ஒரு பெண் " ஆர் யு மிஸ்டர் அ ..ல்..டி ..மே..ட் ..ரை ..ட் ..ட ர் ...?? "என்று நீட்டி முழக்குவதற்குள் நான் போனை கட் பண்ணி விடுவேன். சீலே காரர்களுக்கு அல்டிமேட் என்ற பெயரை உச்சரிப்பதற்குள் வேர்த்து விறுவிறுத்து விடும். அதனால்தான் நான் சீலேவில் உண்டியல் குலுக்கியபோது போது என் பெயரை குப்பர்சிங் என்று வைத்துக் கொண்டேன்.

நேற்று காலை தில்லியிலிருந்து ஒரு போன் அழைப்பு. எடுக்கவில்லை. ( எடுத்தா கடனை திருப்பி கேப்பானுங்க ) பிறகு ஒரு கைத்தொலைபேசியிலிருந்து. தெரியாத எண். எடுத்தேன். ஒரு பெண் குரல். நீண்ட நாள் பழகியது போல் பேசி விட்டு ஒருவரின் பெயரைச் சொல்லி அவர் உங்களோடு பேச விரும்புகிறார் என்றார். அதிர்ச்சியில் ஒருக்கணம் உறைந்து போனேன். அண்டார்டிக்காவின் போக்கையே மாற்றிய 50 பேரில் ஒருவராகப் பேசப் படும் ஒழுத்தாளர் அவர். அண்டார்டிகாவில் மேயும் பென்குவின் என்ற பறவைகளிடம் உளவியல் ரீதியான ஆராய்ச்சி செய்தவர்.அந்த பறவைகளிடம் சென்று " எனக்கு கள்வெறி கொள்ளவைகிறாய்யடி பென்குவின் என்று காதல் வசனம் பேசியவர்.. ஆட்டோபிக்ஷன் முறையில் அந்த பென் குவினிடம் " நேற்று இரவு கனவில் உன் யோனி பருப்பை சுவைத்தேன் " என்று காதல் வசனம் பேசியவர்...அந்த பறவை பதில் ஏதும் தராததால் 
"ஏய்ய்ய் பென் குவின் ,,உனக்கு அங்கே WET ஆகுதா ? " என்று கேட்டு குனிந்து குனிந்து பென்குவினை பார்த்தவர் அந்த ஒழுதாளர் ... அதற்க்கு அந்த பறவை " டேய் மூதேவி !! ஒட்டுமொத்த அண்டார்டிகாவும் WET ஆ தான் டா இருக்கு" என்று காறி துப்பியதும் .. என்னை மாயவளியில் வீழ்த்த அந்த பென்குவின் செய்த சதி என்று ஜகா வாங்கியவர்....
ஓரிரு முறை சர்வதேச பாங்காக் பன்னாடைகள் கருத்தரங்குகளின் மாலைவேளையில் நடக்கும் காக்டெய்ல் பார்ட்டிகளில் சந்தித்திருக்கிறேன். அவ்வளவு தான்.
அவர் சொன்ன விஷயம் இன்னும் ஆச்சரியம். 90 டிகிரி படித்தேன். இந்தியாவில் இப்படி ஒரு நாவலைப் படித்ததில்லை; most astounding book. இன்னும் பலது சொன்னார். நான் அண்டார்டிகாவில் பென்குவினிடம் செய்த ஆராய்சியை நீங்கள் ஒரு பெண்ணிடம் சாட் மூலம் செய்துள்ளீர்கள்...வாவ் !! என்றார்.

கடைசியாக, “தில்லி வாருங்கள்; ஒருநாள் மாலைப்பொழுதில் சாவகாசமாக விஸ்கி அருந்தியபடி உரையாடலாம்” என்றார். மை காட், என்னால் நம்பவே முடியவில்லை. அடுத்த மாதம் தில்லி கிளம்பலாம் என்று இருக்கிறேன். ( வாசகர் வட்டம் மைண்ட் வாய்ஸ் :: எங்களாலையும் தான் நம்ப முடில தலிவா !! டெல்லி போறதுக்கு இப்படி ஒரு பிட்டா ??.வர வர ரீல் வண்டி வண்டியா ஓடுது " )

என் எழுத்து ஆங்கிலத்தில் சென்றால் அதற்கான அங்கீகாரம் கிடைக்கும் என்பது எனக்கு மிகவும் உறுதியாகத் தெரிந்த விஷயம். 90 டிகிரி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட வேண்டும். white tiger புக்கர் பரிசு பெற்ற நாவல். அந்த நாவலை சமீபத்தில் நான் குஜராத் சென்றிருந்த போது ((இது எப்போயா நடந்தது ?? ஒரிசானு தானே நெனச்சோம்... ஒருவேள ஈரோடு பக்கம் , இல்ல தூத்துக்குடி பக்கம் இருக்கா ?? ) இரண்டே நாளில் படித்து முடித்தேன். காலையில் எழுந்து பல் கூட துலக்காமல் பத்து மணி வரை படிப்பேன். இந்த அளவுக்கு வெறித்தனமாகப் படிக்க வைத்த புத்தகம் இந்தியாவில் இல்லை. வெளிநாட்டில் mario vargas llosa. நான் சொல்ல வந்த விஷயம், ஒய்ட் டைகரை விட நூறு மடங்கு அதிகமாக 90 டிகிரி  யில் நான் சாதித்திருக்கிறேன். 90 டிகிரி வோடு ஒப்பிட்டால் ஒய்ட் டைகர் ஒரு ஜுஜுபி. ஒய்ட் டைகருக்கு புக்கர் பரிசு. 90 டிகிரி கிணற்றில் கிடக்கிறது. காரணம், அது இன்னும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. விரைவில் நடக்கும் என்று விரும்புகிறேன்…...

***********************************************************************************************

த்ரிஷா இல்லன்னா திவ்யா !!

இதையே நான் எத்தனை முறை கூறிக்கொண்டு இருக்க முடியும் என்று தெரியவில்லை..சினிமா டிக்கெட் வேண்டும் என்று பதிவு போட்டால் கண்டுகொள்ளாத என் வட்டம் ஒரு நடிகையை பற்றிய கிசு கிசு க்கு 4 லைக் போட்டிருப்பது மிகவும் ஆயாசமாய் இருக்கிறது...இதை தான் நான் தமிழ் எஹுதாலனாய் இருப்பது கஷ்டம் என்று கூறினேன்...அதிலும் இந்த சமந்தா என்பவர் யார் ?? என் முன்னாள் காதலி...!! ஆம்..என்ன எஹுதை படித்து கிறங்கி என் பின்னே அலைந்தவள்....ஆனால் எழுத்தில் எனக்கு இருக்கும் ஒருவித வெறி...அதாவது Blind Obsession.. அதாவது infatuation ...அதாவது obsessive compulsive writer disorder.. அதாவது ( அட போதும் சாமி ) ஒரு உன்மத்த நிலை கண்டு என்னை பிரிந்து சென்றவள் சமந்தா...இன்று அவள் திருமணத்தையே செய்தியை என் வட்டத்தில் வெளியிடுவது தான் ஆபாசம்..நீங்கள் அனைவரும் வெந்த புண்ணில் வெடி வைகிறீர்கள்....சரி விடுங்கள்....அட்லீஸ்ட் இதை கண்டித்து ஒரு கம்மென்ட் யாரவது போட்டீர்களா ??..இல்லை....

ஆனால் நான் இதற்கெல்லாம் கவலை பட போவது இல்லை ...லத்தின் அமெரிக்க எழுத்தாளர் ஒனவகோ தச்லேண்டின் சொன்ன ஒரு தத்துவத்தை பின்பற்றி வாஹ்வைதால் சமந்தா என்னை விட்டு போனது எனக்கு வருத்தம் இல்லை...80 களில் , 90 களில் கவர்ச்சியில் ஒரு கலக்கு கலக்கிய Samantha Fox என்னை காதலித்து கைவிட்டபோதே நன் கலங்கவில்லை..இதற்கெல்லாம் நான் கலங்கி விடுவேனா ??

அந்த இலத்தீன் எஹுதாளர் கூறிய தத்துவம் 

"சமந்தா இல்லன்னா சொனாக்ஷி சின்ஹா "" ( த்ரிஷா இல்லன்னா திவ்யா )

***********************************************************************************************
வாசகர் கடிதம் :

Dear aitel customer. You have not paid your bill for the months of january, february, march, april, Please pay the bill immediately. Or else your services will be disconnected. Thank you

அன்புகுறிய வாசகர் airtel அவர்களுக்கு நன்றி,january, february, march, april மாதங்களுக்கு உங்கள் வீட்டில் தங்குவதர்க்காக அழைத்திருக்கிறீர்கள்,ஆனால் என்னால் உங்களுடைய ஊர் Please க்கு வர முடியாது,ஒரு ஏழை எழுத்தாளனால் அவ்வளவு பணம் செலவு செய்து பயணம் செய்ய முடியாது,

இனி மேல் எனக்கு கடிதம் தமிழில் மட்டும் எழுதவும்,ஆங்கிலத்தில் வரும் கடிதம் படிக்க மொழிபெயர்ப்பாளரை தேடுவது சலிப்பாக இருக்கிறது,

உங்களுக்கு பதில் எழுத தாமதம் ஆனதுக்கு கூட காரணம் என்னுடைய மொர் பாத பூசாரி கடுமையான வேலை பளுவுக்கு இடையில் மாட்டிக்கொன்டது தான். ஆங்கிலத்தில் எழுதிய உங்கள் கடிதத்தை தமிழில் மொழிபெயர்க்க மிகவும் சிரமப்பட்டுள்ளார்,உங்களுடைய மொழிநடை அப்படி,

உங்கள் அன்புக்கு நன்றி

***********************************************************************************************
அணுவிஞ்ஞானிகளின் மாநாடு:

இந்தியாவின் பாடத்திட்டத்தை மாற்ற அணுவிஞ்ஞானிகள் சிலர் ஒன்னு கூடி பேசிக்கிறாய்ங்க.... பிரதான விஞ்ஞானிக்கு மட்டும் மூளை வளர்ரதுக்காக "சோம பானம் " தருகிறார்கள். சைடிஷ்சாக ஆலிவ் காய்களை நசுக்கி ஊறுகாய் பாக்கெட்டில் வைத்து தருகிறார்கள். இதோ சில ஹைலைட்ஸ்....

 *4:38 நிமிடத்தில் ஒரு விஞ்ஞானி தன்னோட கோவத்த காட்டுறாரு பாருங்க யப்பா...

 *நெஞ்சில் நின்ற சில டயலாக்குகள்.

 "பாடத்திட்டம் தப்புங்க"

 "திட்டம் போட்டு பண்ணின பாடம் திட்டம் தானே " ( நோட் பண்ணுங்கப்பா.. நோட் பண்ணுங்கப்பா...)

 * 4:52 வது நிமிடத்தில் இன்னுமோர் விஞ்ஞானி தியான நிலையில் இருந்து கடுமையாக சிந்திக்கிறார். அவர் விழிக்கும் போது " டேயி மொண்ண நாயே.. இன்னும் முடிக்கலையா நீயி " அப்டீன்னு பிரதான விஞ்ஞானியை பாத்து கேட்டுப்புட்டு "இவன் சரிப்பட மாட்டான்னு " மறுபடி தியான நெலைக்கு போயிடுறாரு.

 * 5:12 நிமிடத்தில் அனைவரும் கண்களை இறுக பொத்திக்கொள்ளும்படி கேட்டுக்கொள்ள படுகிறீர்கள்.

 * இங்கு யாருக்கும் மலையேறவும் , மரமேறவும் தெரியவில்லை என்று மூத்த விஞ்ஞானி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். ( கொரங்கே.. கொரங்கே.... ஒன்னய மாதிரி கொரங்கா நாங்க? உனக்கும் தான் எழுத்தே வரல.. ஏதுனாச்சும் கேட்டோமா நாங்க? )

 * 6:08வது நிமிடத்தில் அமேரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் முகமாக தலீவர் தனது "நடுவிரலை" உயர்த்தி தனது எதிர்ப்பை காட்டுகிறார்.

 * 6:30இல் தான் 12 ஆன்டுகளாக ஆங்கிலம் படித்ததாக தலீவர் கூறுகிறார். ( ஓ ! படிச்சியா நீயி ?)

 * 6:35இல் "ஆனாலும் தன்னால் தனது தமிழை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் அளவுக்கு ஆங்கிலம் வராது என்கிறார். ( இந்த லட்சணத்தில இந்த மொண்ண நாயி அருந்ததி ராய் ஆங்கிலத்தை குப்பைங்குமாம். )

 * 7:14வது நிமிடத்தில் ஆறே மாசத்தில் "மை ஹவுஸ், மை ஃபிரண்ஸ், மை டவுன்" அப்டீன்னு ஃபிரஞ்சில் ஒலக எலக்கியம் எழுதிவிட முடியும்னு தலீவர் சிதம்பர ரகசியத்தை கட்டவிழ்த்து விடுகிறார்.

 * 8:04ம் நிமிடத்தில் டாக்டர் ஜோன்சை தான் ரொம்பவும் மிஸ் பண்ணியதாக தலீவர் வருந்தினார்.

 * 8:35 "மெடிக்கல் ஷாப்பு எங்கேயாவது இருக்கு " ( பின்ன.. ஜேர்மன் போறேன்னு உதார் விட்டுட்டு போயி முதுமலை காட்ல நீயி நின்னுட்டு வந்தா , அங்க என்ன மெடிகல் ஷாப்பு , சூப்பர் மார்கெட்டு , மஸாஜ் சென்டரா இருக்கும்?)

 * 9:22 ஒரு உப அணு விஞ்ஞானி சந்தேகம் கேட்கிறார். "இஞ்சி சாப்பிட்டா நெஞ்சி எரியிற மாதிரி இருக்கே" ( டேய் மானம் கெட்டவனே .. இது உனக்கே ஓவரா தெரியலயா? இஞ்சி சாப்பிட்டா நெஞ்சி எரியாம பின்ன என்ன கு.... சா எரியும்?)

 * 9:30 ற்கு பின்பு மாநாடு "ஒலக சொகாதாரம்" பத்தி ஆரம்பிக்குது.

மாநாட்டின் அதிசிறந்த ஜால்ரா விஞ்ஞானிகளாக அந்த கறுப்பில் வெள்ளை கோடு போட்ட டீசேர்ட் அணிந்த விஞ்ஞானியும் , பின்னணியில் தனது முகம் காட்டாமல் "வெரிகுட் , சூப்பர், இந்தியாவை கண்டிக்கிறேன், மானே , தேனே, பொன்மானே " போன்ற அளப்பெரிய விஞ்ஞான சொற்பதங்களை உலகுக்கு அறிமுகம் செய்த அந்த விஞ்ஞானியும் தேர்வாகிறார்கள்.

 # கும்பலா சேர்ந்து குடிக்குது, ஒன்னு சிகரட் பத்துது, நாலைஞ்சி சேந்து அரட்டை அடிக்குது, இன்னொன்னு தூங்குது, சிலதுங்க என்ன நடக்குதுன்னு தெரியாமலே உக்காந்துக்கிட்டு இருக்குதுங்க.. கேட்டா எலக்கிய சந்திப்பாம்.

***********************************************************************************************
சாரு வாசகர் வட்ட சந்திப்பு!

***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

No comments: