Tuesday, 13 August 2013

ஒலக நடிகை ஷகிலாவுடன் ஒலக எழுத்தாளர் - சாரு டைம்ஸ் (14/08/13)

தமிழில் ஓர் உலக சினிமா:

இப்போதெல்லாம் நான் தமிழ் சினிமா பற்றிய விமர்சனங்களை எழுதத் துணிவதில்லை. காரணம் , அந்த விமர்சனங்களுக்கு வரும் எதிர்வினைகள் என்னை அவமானப் படுத்துவதாக இருக்கின்றன.

அதையும் தான்டி ஒரு சினிமாவை பற்றி எழுத காரணம் youtubeயில் சமீபத்தில் நான் பார்த்த சினிமா தான் . ஒரு நல்ல ஜனரஞ்சக சினிமா அது.படத்தை இயக்கியவர் ஒரு உயர்ந்த கலா ரசனையும் , சுரணையுணர்வும் கொண்ட இயக்குனர் என்பதற்கான அடையாளங்கள் அப்படத்தில் பல இடங்களில் தென்பட்டன . அதிலும் முகேஷாக நடித்திருப்பவரின் நடிப்பு உலகத்தரம் , க்ளாஸிக் டச். பட ஆரம்பத்தில் டாக்டராக வருபவரின் நடிப்பு , உடையலங்காரம் , அனைத்துமே ஒரு டாக்டரை நினைவுபடுத்துகிறது.தமிழ்ப் படங்களில் வழக்கமாகக் காணப்படும் அருவருப்பான அம்சங்கள் எதுவுமே இந்தப் படத்தில் இல்லாமல் இருந்தது.

பட்சத்தின் பன்ச் டயலாக் புகையிலை கேன்சரை கொடுக்கும் , புகைப்பழக்கம் மிகவும் கொடியது , மிகவும் கொடியது

சிரித்துச் சிரித்து வயிறே புண்ணாகி விட்டது. சிரிப்புப் படம் அல்ல. ஆனாலும் அப்படிச் செய்திருக்கிறார்கள்

முகேசாக நடித்திருக்கும் இளம் நடிகரின் நடிப்பு மிகவும் அற்புதம் - அதிலும் அவர் பேசிய வசனம் , நா ஒரு வருஷமா குட்கா சாப்புடுறேன்... அதனால எனக்கு வாய் கேன்சர் வந்துருச்சி... இதனால எனக்கு பேச்சு வராம கூட போகலாம்” என்று வசன்ங்களை உணர்ச்சி பூர்வமாக பேசுகையில் மெய்சிலிர்க்க வைக்கிறது. இந்த காட்சி படத்திலேயே மிகவும் கொண்டாட்டமான தருனம் , எனக்கே எழுத்து ஆட வேண்டும் போல இருந்தது.

படத்தில் அனைவரும் புதுமுகம் என்று யாராலும் சொல்ல முடியாது , இன்றைய கால கட்டத்தில் மனிதாபிமானம் தான் மிகப் பெரிய ஃபாஸிஸம். சக மனிதன் மீது அன்பு செலுத்துவதாகக் கருதிக் கொள்பவன் தன்னை மற்றவர்களிடமிருந்து உயர்ந்த இடத்தில் வைத்துக் கொள்கிறான்.இந்தப் படத்தின் Patriarch- ஆன டாக்டரை பார்த்த போது எனக்கு பப்பு ஞாபகமே வந்தது.

குடுபம்பத்துடன் காணவேண்டிய குதூகலமான படம் - இந்த படத்தை பார்த்து விமர்சனம் எழுதும்படி தினமும் 180 மெயில் வருகிறது , என் தீவிர வாசகர்களுக்கு இந்த விமர்சனத்தை பரிசலிக்கிறேன் .

இந்த படத்தின் ஆங்கில வடிவம்:

***********************************************************************************************
ஒலக நடிகை ஷகிலாவுடன் ஒரு பேட்டி:

நடிகை ஷகீலாவுடன் ஒரு பேட்டி எடுக்க முடியுமா என்று ஒரு பிராபல பத்திரிக்கை என்னை கேட்டிருந்தது.உடனே சரி என்று ஒப்புக்கொண்டேன்.பத்திரிக்கை பேட்டி முடிந்த பிறகும் பேசிக்கொண்டிருந்தோம். அது பேட்டியில் வரவேண்டாம் என்றும் , வேண்டுமானால் உன்கள் கதையில் பயன்படுத்திக்கொள்ளுங்கள் என்றும் சொன்னால் ஷகீலா.

"நான் உங்களுடைய தீவிரமான ரசிகன்" என்றேன் நான். இது ஷகீலாவுக்கு ஆச்சரியத்தை தந்தது.

"நான் உங்களுடைய கதைகளை படித்திருக்கிறேன் ,நீங்கள் ஒரு சரோஜாதேவி எழுத்தாளர் என்றும் புரிந்தும் வைத்திருக்கிறேன் . நீங்கள் எப்படி என்னுடைய ரசிகனாக இருக்கமுடியும்? நம்ப முடியவில்லையே ?என்றாள் ஷகி.

" என்னை பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா ? ஆச்சரியத்துடன் கேட்டேன்

" நான் தான் முன்னாலேயே சொல்லிவிட்டேனே உங்களுடைய சமாச்சாரங்களை படித்திருக்கிறேன் என்று.உங்களுடைய சமாச்சாரங்களை படிக்க படிக்க மிகவும் சுவாரசியம் ஏற்பட்டது.அதிலும் "குனிந்து கொடு" என்று சொல்லி அதை விளக்கும் பகுதியெல்லாம் ஏதோ என்னை பற்றியே எழுதியிருப்பது போல் இருந்தது".

"ஷகீலாவின் இந்த பதிலை கேட்டவுடன் ,மிகவும் ஆச்சரியம் அடைந்தேன் அதை காட்டிக்கொள்ளாமல் , சரோஜாதேவி எழுத்தாளராகிய நான் உங்கள் ரசிகனாக இருப்பது ஒன்றும் ஆச்சரியமான விஷயமல்ல."

"சரி அது எப்படி சாத்தியம் "நான் வெறும் பெட்ரூம் , குளியல் ரோல்களிக் நடிக்கும் ஒரு சாதாரண நடிகை தானே ?"

" சாதாரண ஒரு பொறம்போக்கு பய எப்படி உங்கள் ரசிகனாக இருக்கிறானோ அதே மாதிரி தான் நானும் இருக்கிறேன் , தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் உண்மையை சொல்லகிறேன்.உங்களுடைய அசாதரணமான சமாச்சாரங்கள் தான் காரணம்"

நான் சொன்னதை கேட்டு வாய்விட்டு சிரித்தாள் ஷகீலா , ஆனால் அது மட்டுலமல்ல . என்ன தான் அவள் செக்ஸ் ரோல்களில் மட்டும் நடிப்பவள் என்றாலும் நடிப்பிலும் பெரீய நடிகை தான் என்பதையும் சொன்னேன்.

"ஒரு படத்தில் மாடியிலிருந்து படிக்கட்டில் இறங்கி வருகிரீர்கள் , அந்த காட்சி உலகப்புகழ் பெற்ற நடிகர்களின் தரத்திற்க்கு நிகராக இருந்தது.அந்த கதாபாத்திரத்தின் உணர்வுகளை அவ்வளவு தத்ரூபமாக வெளிப்படுத்தி இருந்தீர்கள் .ஆனால் பாருங்கள் நான் மட்டும் உங்கள் தீவிர ரசிகனாக இல்லை , இந்த தென்னிந்தியாவே கிரங்கிப்போய் தான் கிடக்கிறது , நாங்கள் எங்கள் கனவுகளை இழந்துவிட்டோம் ; நீங்கள் தான் எங்கள் எல்லாருடைய கனவாக விளங்குகிரீர்கள்.

நீங்கள் மட்டும் ஈஸ்ப்பனியோவிலோ , பிரன்ச்சிலோ நடித்திருந்தால் குறைந்தது நான்கு ஆஸ்கார் அவார்டுகளை வாங்கியிருக்கலாம் , ஆனால் என்ன செய்வது தமிழ்நாட்டின் அவலம் இது , இந்த நாட்டு மக்களுக்காக உடல், உடலிலுள்ள பொருள் , ஆவி அனைத்தயும் தியாகம் செய்யும் நம்மை போன்ற தியாகிகளை மதிப்பதில்லை" என்று முடித்தேன் .

***********************************************************************************************
ஆட்டோகிராப்:

ராமசாமிக்கு ஒரு நீண்ட கால ஆசை , ஒரு விலை அதிகமான ஆட்டோகிராப் நோட் வாங்கி எல்லா பிரபலங்கலளிடமும் ஆட்டோகிராப் வாங்கவேண்டும் என்பது , சிறுக சிறுக பணம் சேர்க்க ஆரம்பித்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது . 3000 ரூபாய் ஒரு அழகான ஆட்டோகிராப் புத்தகம் தங்க நிற அட்டையுடன் வாங்கியும் விட்டான்.

இனி சந்திக்கும் பிரபலங்களிடம் ஆட்டோகிராப் வாங்க ஆரம்பிக்க வேண்டியது தான் , அவனுடைய ஊருக்கு நாளை ஒரு பிரபலமானவர் வருவதாக ஒரு தகவலை நண்பன் பிரவின் சொன்னான் . ராமசாமிக்கு ஒரே சந்தோஷம் , இரவு தூக்கம் கூட பிடிக்கவில்லை , அதிகாலையே கிளம்பிவிட்டான் அந்த செலிபிரட்டியிடம் ஆட்டோகிகிராப் வாங்க .

ராமசாமி ஹோட்டலை அடைந்த போது அந்த செலிபிரட்டி வெள்ளாடை அணிந்து ரிஷப்ஷன் இருக்கையில் தியானம் செய்வது போல அமர்ந்திருந்தார் , மிகுந்த படபடப்புடன் அவர் அருகில் சென்று ஆட்டோகிராப் புத்தகதை நீட்டினான் , அவர் ராமசாமியை மேலும் கீழும் ஒரு முறை பார்த்துவிட்டு , புன்னைகையுடன் கவிதையை போல ஏதோ எழுதி புத்தகத்தை மூடி ராமசாமியிடம் கொடுத்துவிட்டு ஒரு வார்த்தை கூட பேசாமல் எழுந்து சென்றுவிட்டார்.

ராமசாமிக்கு சந்தோஷத்தில் தலை கால் புரியவில்லை , உடனே தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்க்கு கிளம்பிவிட்டான் , அவனுக்கு வாகனதை ஓட்டிக்கொண்டே ஏகப்பட்ட கற்பனைகள் , அவர் அன்புடன் என்று எழுதியிருப்பாரா , அல்லது என்னதான் எழுதியிருப்பார் என்று ,எதோ கவிதை மாதிரி எழுதிக்கொடுத்தாரே ஏதாவது வாழ்த்துக்கவிதையாக தான் இருக்கும் என்று .கிட்டத்தட்ட வானத்தில் மிதந்தான் .

வீடு வந்ததும் ஆவலுடன் தன்னுடைய ஆட்டோகிராப் புத்தகத்தை பிரித்துப்பார்த்தான் , அதில் எழுதி இருந்ததை பார்த்ததும் அவனுடைய கண்களில் கண்ணீர் துளி எட்டிப்பார்த்து , அதில் எழுதியிருந்தது...
.
.
.
.
.
.
.
.
.
.
.
Name : Ar.........
A/C No xxxxxxxxxx
Branch T.Na...

IFC Code :.....

***********************************************************************************************
நீ படித்த புத்தகங்கள் மூன்று
நான் வாங்கும் 'பிச்சை' மூன்றெழுத்து
நான் வாழும் 'வெள்ளி' மூன்றெழுத்து
அனைத்துக்கும் ஆமாம் போடும் 'குஞ்சு' மூன்றெழுத்து
அனைவரையும் சேர்த்துச்சொல்லும்
'பன்மை' மூன்றெழுத்து
விமர்சகவட்டத்தில் என்னுடைய நண்பன்
'பாம்பு' மூன்றெழுத்து
என்னை அவர்கள் செல்லமாக கூப்பிடும்
'மண்டை' மூன்றெழுத்து...
இன்னும் இருக்கிறது 'மூன்றெழுத்துக்களில்'
நான் கொடுக்கும் 'குப்பி' மூன்றெழுத்து
ஆனால் பிழையாய் போன இரண்டு வார்த்தைகள்
'ஜென்' 'சிலே' இரண்டெழுத்தாய்
போனதால் எனக்கு இந்த 
தலையெழுத்து....


- 'மண்டை'யின் மானங்கெட்ட 'கவிதை' தொகுப்புகளிலிருந்து.
***********************************************************************************************
நோ-பெல் பரிசு எனக்கு தான்:


***********************************************************************************************
சிறுகதை போட்டி:

எங்கள் வட்டத்தின் "சிறுகதை போட்டி கடைசி கட்டத்தை எட்டி உள்ளது. கடைசி சுற்றுக்கு தேர்ந்தெடுக்க பட்டுள்ள 22 கதைகளை கீழே குடுத்து உள்ளோம். அந்த கதைகளை படித்து பார்த்து உங்களுக்கு பிடித்து இருந்தால் பிடித்த கதைகளுக்கு லைக் செய்யவும். 

Story: 62 நெஞ்சம் மறப்பதில்லை
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547982115251729/
********
Story: 58 விதியை நீங்கள் நம்புகிறீர்களா?
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547981831918424/
********
Story: 64 கருவறை
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547581125291828/
********
Story: 63 முள்வேலி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547580378625236/
********
Story: 57 பரதேசி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547579841958623/
********
Story: 65 பிழைப்பு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235988659675/
********
Story: 56 மனிதனிலிருந்து குரங்கானேன்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235845326356/
********
Story: 55 கனவுகளின் பரமபத பாதைகள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/547235698659704/
********
Story: 66 நீண்ட இரவு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546774778705796/
********
Story: 54 கடவுளும் கந்தசாமியும்.
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546774512039156/
********
Story: 71 மன வளர்ச்சி குன்றியவர்கள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546402288743045/
********
Story: 46 வோல்கா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546398838743390/
********
Story: 73 மிச்சமிருக்கும் உயிர்.
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546023232114284/
********
Story: 41 நாய்க்குட்டி மனசு
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/546022848780989/
********
Story: 81ப்ரதீல்யா!
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545669478816326/
********
Story: 40 பாரம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545669062149701/
********
Story: 83 தஸ்லீமா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545272985522642/
********
Story: 29 பூந்தளிர்க் காலம்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/545273468855927/
********
Story: 94 ஈவா
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544884498894824/
********
Story-26 நாவலுக்கான 23 குறிப்புகள்
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544883865561554/
********
Story-95 அவள் பெயர் பூவெழினி
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544482285601712/
********
STORY-12: திருட்டுப் பசங்க...!!!
https://www.facebook.com/groups/charuvimarsagar/permalink/544481765601764/


***********************************************************************************************
இவன் - சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்

No comments: