Wednesday, 17 October 2012

ஒலக விமர்சகர் கருப்புதேள்க்கு வேலை கிடைக்க செய்த நித்யா சாமியின் மகிமை- சாரு வாக்குமூலம் !!


நித்தி சர்ச்சை வெடிக்கும் முன்பு  சாருவே (மண்டை) நித்தி புகழ் பாடி எழுதிய பதிவு, ஒலக சினிமா ஜீவிக்கு எப்படி நோகாமல் வேலை கிடைத்தது என்பது பற்றியும் சாருவே எழுதிய பதிவு. சர்ச்சை வெடித்த உடன் பதிவை அழித்து விட்டார் மண்டையர். ஆனால் எங்களின் சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம் வழக்கம் போல் அதை தோண்டி எடுத்து விட்டது. படியுங்கள். படித்து மகிழுங்கள். விருப்பம் இருந்தால் எங்கள் குழுமத்தில் சேர்ந்து மண்டையை காய்ச்சு எடுங்கள்.கும்மாங்கோ, கொய்யாகா எல்லாம்  மனசாட்சிகள்.

பரமஹம்ஸ நித்யானந்தரை தரிசித்த எனது அனுபவங்களைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கும் இந்தத் தொடருக்கு என் வாசகர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வந்தது. அந்த எதிர்ப்புக்கான காரணங்கள் எதுவும் புதியன அல்ல. ஆன்மீகவாதி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று நாம் சில எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுகோலுக்குள் அடங்கவில்லையெனில் நிராகரித்து விடுகிறோம். உதாரணமாக, உலகெங்கிலும் உள்ள ஜெஃப்ரி மதுபான விடுதிகளில் நுழைவதற்கு ஒரு ட்ரெஸ் கோட் தேவை. இல்லாவிட்டால் அனுமதி கிடையாது. அதேபோல் ஞானிகளுக்கும் நாம் ட்ரெஸ் கோட் எதிர்பார்க்கிறோம்.

கும்மாங்கோ: ஸ்டார்ட் தி மியூசிக்.

கிழிந்த ஆடையும் வயதான தோற்றமும் இருந்தால்தான் ஞானி, இல்லாவிட்டால் அஞ்ஞானி என்கிறோம். இன்னொரு பிரச்சினை, நம்முடைய புரிதல் முறையே தர்க்கம், விஞ்ஞானம் என்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது. தர்க்கத்துக்கு உடன்படாத எதையுமே மூர்க்கமாக மறுதலிக்கிறோம். நித்யானந்தர் தனது இளம் பிராயத்திலேயே துறவறம் பூண்டு இந்தியா முழுவதும்பாத யாத்திரையாக அலைந்து திரிந்தார். பிச்சை எடுத்தே சாப்பிட்டார். கிடைக்காத போது பட்டினி கிடந்தார். ஒருமுறை நகைச்சுவையாகக் குறிப்பிட்டார், தமிழ்நாட்டில்தான் அதிகம் பட்டினி கிடந்ததாக. காரணம், இங்கேதான் காவிக்கு மரியாதை இல்லை. பிச்சையாக அரிசி கிடைத்தால் அதைசுடுநீரில் போட்டு, அதில் ஓரிரண்டு புளியங்காய்களைப் போட்டுப் பொங்கிச்சாப்பிடுவதும் உண்டு. இது போன்ற ‘சமையல்’ அனுபவங்களை வைத்து ஒரு சமையல் புத்தகமும் எழுதிக் கொண்டிருக்கிறார் நித்யா.

கும்மாங்கோ: இப்ப நீ உலகத்துக்கு என்ன சொல்ல வர. இன்டர்நெட் பிச்சைக்காரனும் ஒரிஜினல் பிச்சைகாரனும் ஒன்னு சேர்ந்துடோம்ன்னு ஒரே வார்த்தையில் முடிக்க வேண்டியது தானே.

வாசகர்கள் சிலருக்கு சாமியை நான் நித்யா என்று குறிப்பிடுவது ஆச்சரியமாக இருக்கலாம். நித்யானந்தருக்குப் பெயர் எதுவும் கிடையாது. ஆரம்பத்தில் அவருக்கு பாஸ்போர்ட் கொடுப்பதற்காக அதிகாரிகள் வந்தபோது நாளை பார்க்கலாம், நாளை பார்க்கலாம் என்றே தள்ளிப் போட்டுக் கொண்டுவந்திருக்கிறார். இப்படியே ஒரு வார காலம் ஆகியிருக்கிறது. என்ன காரணம் என்றால், நித்யாவுக்கு எந்தப் பெயரில் பாஸ்போர்ட் எடுப்பது என்று தெரியவில்லை. காரணம், அவருக்குப் பெயரே இல்லை. அவர் கையெழுத்துப் போடுவதும் ஓம் என்று சம்ஸ்கிருதத்தில் போடுவார். அவ்வளவுதான்.ஆக, நித்யானந்தம் என்பது ஒரு பெயர் அல்ல; அது ஒரு நிலை. ஆங்கிலத்தில் Bliss என்று உத்தேசமாகக் குறிப்பிடலாம். அதனால் இந்தப் புத்தகத்தில் அடியேன் பரமஹம்ஸ நித்யானந்தரை சாமி என்றும், பரமஹம்ஸர் என்றும், நித்யா என்றும் பலவிதமாகக் குறிப்பிடுவேன். பாரதி கண்ணனைத் தனது தோழனாகவும், காதலனாகவும் – ஏன், வேலைக்காரனாகவும் குறிப்பிட்டது போல். நித்யாவை நான் நான்கு முறை தரிசித்ததாக எழுதியிருந்தேன். நான்கு முறைநான்கு வரங்கள் கிடைத்தன. இரண்டு முறை “நீங்கள் எப்போதும் என்னுடனேயே இருக்க வேண்டும்” என்று கேட்டேன். அடுத்த இரண்டு வரங்கள் பற்றி நான் வெளிப்படையாக எழுதவில்லை. ’அது இலக்கியம் பற்றி’ என்று சொல்லி அதோடு விட்டுவிட்டேன். இப்போது அதை வெளிப்படையாக எழுதலாம்.

கொய்யாகா: காசு குடுத்தா பண்ணி கர்ப்பத்துக்கு கூட நீ தான் காரணம்னு ஒதுக்குற ஆளு நீ. நித்தியை சாமின்னு சொல்லுறது பெரிய ஆச்சிரியம் இல்லை.

நான் கேட்ட வரம் இதுதான்: ஸீரோ டிகிரி என்று ஒரு நாவல் எழுதியிருக்கிறேன். அது ஆங்கிலத்திலும் வெளிவந்துள்ளது. டெஹல்கா போன்ற முக்கியமான பத்திரிகைகளில் அது பற்றிய உற்சாகமான மதிப்புரைகள் வந்துள்ளன. ஆனால் ஐரோப்பாவிலும், அமெரிக்காவிலும் அதை எடுத்துச் செல்ல ஆள் இல்லை. இந்த வரத்தைக் கேட்டு மூன்று வாரங்களுக்குள் உலகின் மிக முக்கியமான, 200 ஆண்டுகள் பழமையான ப்ரிட்டிஷ்/அமெரிக்கப் பதிப்பகம் ஒன்றிலிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. 50 Indian Classics-இல் ஒன்றாக ஸீரோ டிகிரியும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாகவும், இது தங்களுக்கு ஒரு unconventional choice-ஆக இருந்தது என்றும் அக்கடிதத்தில் கண்டிருந்தது. கடிதத்தில் அந்த இரண்டாவது வாக்கியத்தை நான் மிகவும் ரசித்தேன்.

கொய்யாகா: டெஹல்கா ஊழல் scam எல்லாம் வெளியே கொண்டு வர பத்திரிக்கை தானே. அவங்க எப்ப இருந்தது சரஜோதேவி புக் எல்லாம் promot பண்ண ஆரம்பிச்சாங்க. நல்லா பாருயா உன்னோட கதை எல்லாம் playboy magazine-ல தான் வர லாயக்கு.

என்னுடைய நண்பர் ராஜேஷ் நீண்ட நாட்களாக ஒரு பிரச்சினையில் இருந்தார். அவர் ஒரு பெண்ணை ஏழு ஆண்டுகளாகக் காதலிக்கிறார். பெண்ணுக்கு பெங்களூரில் வேலை. சென்னைக்கு மாற்றல் கிடைக்க முடியாத வேலை. இவர்தான் பெங்களூர் போகவேண்டும். ஏழு ஆண்டுகளாக பெங்களூரில் வேலைக்கு முயற்சி செய்கிறார். கிடைக்கவில்லை. இதனால் திருமணமும் ஒத்திப் போய்க் கொண்டிருக்கிறது. அவர் வேறு ஒரு ஊருக்குச் சென்று ஒரு சூஃபி ஞானியைப் பார்க்கச் செல்வதாக இருந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ஆம் தேதி கிளம்புவதாகத் திட்டம். நானோ அவரிடம் ”அந்த சூஃபி மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு; ஆனாலும் நீங்கள் சூஃபியைப் பார்ப்பதை விட நேரடியாகக் கடவுளிடமே கேட்டு விடலாமே?” என்று சொல்லிக் கொண்டிருந்தேன்.

ராஜேஷ் “ஏற்கனவே போட்ட திட்டத்தை ரத்து செய்ய வேண்டாம்; நீங்கள் சொல்வது போல் கடவுளைப் பார்க்க அடுத்த வாரம் பிடதி செல்கிறோம்” என்றார். 
நானும் விடாமல் “கடவுள் அடுத்த வாரம் அமெரிக்கா கிளம்புவதாக இருக்கிறார்;பார்த்துக் கொள்ளுங்கள்” என்றேன் எச்சரிக்கும் தொனியில்.

கும்மாங்கோ: இப்ப தான் மையின் கதைக்கே என்ட்ரி ஆகுற.. வா..வா..


நான், கடவுள் என்று சொன்னது நித்யாவை என்பது உங்களுக்குத் தெரியும். என் நண்பர் ஒருவர் பத்திரிகையில் வெளிவந்த என் கட்டுரை ஒன்றைப் பற்றிப் பாராட்டுவதற்காக காலை ஆறரை மணிக்கு போன் செய்திருக்கிறார் போல. நானோ அப்போது நித்ய தியானம் செய்து கொண்டிருந்தேன். போன் சைலண்ட் மோடில் இருந்தது. பிறகு தியானத்தை முடித்து விட்டு நண்பரை அழைத்தேன். “முதல் பாராட்டு என்னுடையதாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன்” என்றார்.”நான் தியானத்தில் இருந்தேன்” என்றேன்.

ஒரு தியான ஆசிரியரின் பெயரைக் குறிப்பிட்டு “அந்த தியானமா?” என்று
கேட்டார். ”நித்யானந்தர்” என்றேன்.
”அவரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?”
“மற்றவர்களைப் போல் அவர் குரு அல்ல; கடவுளின் அவதாரம்.”
”அப்புறம் பேசுகிறேன்” என்று சொல்லி நண்பர் போனை வைத்து விட்டார்.

கும்மாங்கோ: அவதாரம்தான்..ஆனா அவதாரத்துக்கு hidden Camera மட்டும் எங்கிருக்குன்னு கண்டு பிடிக்க தெரியாது.


ராஜேஷ் விஷயத்துக்கு வருகிறேன். சரியாக ஆகஸ்ட் 21-ஆம் தேதி ராஜேஷுக்கு சூஃபி வெளியூர் செல்வதாகவும், அடுத்த வாரம் சந்திக்கலாம் என்றும் ஒரு செய்தி வந்தது. சூஃபியைச் சந்திக்கும் திட்டம் ரத்தாயிற்று. மறுநாள் காலை ராஜேஷ் டீவி சத்தம் கேட்டு கண் விழிக்கிறார். பார்த்தால் டீவியில் நித்யானந்தரின் சொற்பொழிவு. “நான் ஒரு நதியைப் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன். சிலர் தங்கள் கைகளைக் குவித்து கொஞ்சம் தண்ணீரை சிந்தச் சிந்த எடுத்துக் கொண்டு போகிறார்கள். வேறு சிலரோ இந்த நதியில் இறங்கி இதன் போக்கோடு சென்று நீந்தி விளையாடி நித்யானந்தம் பெறுகிறார்கள்…” “நித்யானந்தம் என்பது தென்றலைப் போன்றது. நீங்கள் உங்களுடைய கரங்களைத் திறந்து வைத்துக் கொண்டிருக்கும் வரை அதை நீங்கள் அனுபவிக்கலாம்; ஆனால் அதைப் பிடித்து வைத்துக் கொள்ளலாம் என்று கரங்களை மூடினால் தென்றல் உங்களிடமிருந்து விலகி விடும்.” 

கொய்யாகா: ஒலக விமர்சகர் ராஜேஷ் தமிழ் டிவி சேனல் எல்லாம் பார்கிறாரா ?? அது எல்லாம் பெரிய கேவலம் ஆச்சே.  

உடனே ராஜேஷ் என்னைத் தொடர்பு கொண்டு நாளையே சாமியைப் பார்க்க முடியுமா என்று கேட்கிறார். மறுநாள் ராஜேஷும் அவர் திருமணம் செய்து கொள்ள இருக்கும் ஸ்ரீவாணியும் நித்யாவுக்குப் பாத பூஜை செய்து கொண்டிருக்கிறார்கள். 
உங்களுக்கு என்ன வேண்டும் அம்மா? என்று ஸ்ரீவாணியிடம் கேட்கிறார். ஸ்ரீவாணிக்கு எதுவுமே கேட்கத் தோன்றவில்லை. அலங்க மலங்க விழிக்கிறார். கேள்வி ராஜேஷிடம் பக்கம் திரும்புகிறது. ராஜேஷ் விஷயத்தைச் சொல்கிறார்.
”ஆகஸ்டுக்குள் நடக்கும்.”
ராஜேஷுக்குக் குழப்பம். ஆகஸ்ட் முடிவடைய இன்னும் ஒரு வாரம்தான் பாக்கி 
சாமி இந்த ஆகஸ்டை சொல்கிறாரா, அல்லது அடுத்த ஆகஸ்டா? கேட்கலாமா? அய்யோ, சாமியிடம் எதிர்க் கேள்வி கேட்பதா? குழம்பியபடியே வந்து விடுகிறார். என்னிடம் சொன்னார். அடுத்த ஆகஸ்டாக இருக்கும் ராஜேஷ் என்றேன். ராஜேஷுக்கும் சந்தோஷம்தான். ஏழு ஆண்டுகளாக நடக்காத காரியம் இன்னும் ஒரு ஆண்டில் நடக்க இருப்பது பற்றி. ஆனால் நானும் ராஜேஷும்தான் தவறாக நினைத்து விட்டோம். நித்யா சொன்னது அடுத்த ஆகஸ்ட் அல்ல. இந்த ஆகஸ்ட். பாத பூஜை செய்த ஒரே வாரத்தில் பெங்களூரில் ராஜேஷுக்கு வேலை கிடைத்து விட்டது.

கொய்யாகா: ஏன்யா. படிச்சவங்க தானே நீங்க எல்லாம், அறிவு என்பது எலி புழுக்கை அளவுக்கு கூட உங்க கிட்ட கிடையாதா. இவரு கால்லை கழுவுனா விமர்சகரக்கு வேலை கிடைச்சிருமா. உங்களுக்கு உங்க திறமை, அறிவு மேல நம்பிக்கையே இல்லையா. இப்படி அடுத்தவன் கால் நக்கி வேலை வாங்குறதுக்கு நீ ரெண்டு சான் கயறு வாங்கி அதுல தொங்கலாம், இதுல ஒலக ஈலக்கியம் கரைச்சு குடிச்ச மாதிரி பேச்சு வேற. எவனுக்கும் ஒன்னும் தெரியில என்கிற லொள்ளு பேச்சு வேற. 

நித்யானந்தர் சொல்கிறார். ’இதெல்லாம் வெறும் கத்தரிக்காய் சமாச்சாரம். உங்களுக்கு நான் கொடுக்க விரும்புவது இதையெல்லாம் விட மிகப் பெரிய விஷயம்’ என்று. எனக்குக் கண்டனக் கடிதம் எழுதிய ஏராளமான பகுத்தறிவுத் திலகங்களுக்குச் சொல்லிக் கொள்கிறேன். நதியின் இக்கரையில் நின்று கொண்டு அக்கரை பற்றி கருத்துச் சொல்லாதீர்கள். இறங்கி நீந்தி எதிர்க்கரைக்குச் சென்று பார்த்து பிறகு கருத்து சொல்லுங்கள்; விவாதிப்போம். நீந்தத் தெரியவில்லை என்றால் நீந்துவதற்கும் நித்யானந்தரே கற்றுத் தருகிறார். சிலர் கேட்கிறார்கள்; நித்யானந்தர் ஏன் பணம் வாங்குகிறார் என்று. என் நண்பர் ரங்கநாதன் அருமையாகச் சொன்னார். மக்கள் என்ன நினைக்கிறார்கள்? ‘நீ கடவுள்தானே? அப்படியானால் என்னை நீயே வந்து சந்தித்து ஒரு லட்சம் பணத்தைக் கொடுத்து விட்டுப் போயேன்; அதை விட்டு விட்டு என்னிடம் எப்படி நீ பணம் கேட்கலாம்?’ அப்படிச் செய்தால் மக்கள் கடவுளை நம்புவார்கள். கடவுளுக்கும் லாட்டரிச் சீட்டு விற்பவனுக்கும் வித்தியாசம் தெரியாத மௌடீகம் மனமே இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கும். ’ரமணர் பணம் கேட்டாரா?’ என்கிறார்கள் சிலர்.

ஒரு விஷயத்தை உரத்துச் சொல்ல வேண்டியிருக்கிறது எனக்கு. இதுவரை இந்த உலகில் வந்து உதித்த ஞானிகளுக்கும் நித்யானந்தருக்கும் ஒரு வித்தியாசம் உள்ளது. அவர்கள் தங்களை ஞானிகளாகவும், உங்களை மனிதர்களாகவும் பாவித்து ஆசி வழங்கியவர்கள். ஆனால் நித்யாவோ உங்களையும் ரமணராகவே மாற்ற விரும்புகிறவர். இதன் பொருள், உங்களுடைய சட்டை பேண்ட்டை அவிழ்த்து விட்டு உங்களுக்கும் காஷாயம் தருவார்’ என்பதல்ல. நீங்கள் குடும்பஸ்தராகவே இருந்தாலும் அந்த நிலையிலேயே உங்களை ஒரு ஜீவன் முக்தராக மாற்றுவதே இந்த அவதாரத்தில் நித்யானந்தரின் பணியாக இருக்கிறது. அதற்குத்தான் அவருக்குப் பணம் தேவை.

கும்மாங்கோ: ஐயோ சாமி, வாங்குனா காசுக்கு மேலயே குவுறியே ராசா. இதுக்கு மேல முடிஞ்சா படிங்க. என்னால முடியல சாமீ.ரீல் அந்து போச்சு.

ரமணர் உங்களுடைய இடத்துக்கு வரவில்லை. நீங்கள்தான் அவரைத் தேடிச் சென்றீர்கள். ஆனால் நித்யானந்தரோ உங்களைத் தேடி உங்களுடைய இடத்துக்கு வருகிறார். தன்னுடைய பிரபஞ்சப் பிரக்ஞா நிலையிலிருந்து வெகுவாகக் கீழிறங்கி உங்களுடைய மொழியில் உங்களுக்குப் புரிவது போல் பேசுகிறார். கிராமங்களுக்குக் கூடச் செல்கிறார். பாமர மக்களிடம் அவர் பணம்பெறுவதில்லை. ஒரு ஆண்டில் ஒரு லட்சம் கிலோமீட்டர் விமானத்தில் பறக்கிறார். ஒரு ஆண்டில் ஒரு லட்சம் கிலோமீட்டர் தரை வழியில் பயணம் செய்கிறார். இவ்வாறாக ஒரு நாளில் 22 மணி நேரம் வேலை செய்கிறார். மற்ற அவதார புருஷர்களைப் போல் நித்யானந்தரும் இமயமலையில் ஒரு குகையில் இருந்திருக்கலாம். இங்கே நம்மிடையே வந்து நம்முடைய மொழியில் பேசி இருந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. ஆனால் அவருடைய நோக்கம் வேறு.

ஒருமுறை சொன்னார் நித்யா: ”நான் உங்களுடைய வேலைக்காரன். உங்களுக்குத் தேவையானதைச் செய்யவே வந்திருக்கிறேன். இந்தக் காரியத்துக்கு எனக்குப் பணம் தேவை. ஆனால் இந்த முறை நான் பிச்சை எடுக்கப் போவதில்லை. கொடுக்கும் உங்களுடைய கரம் தாழ்ந்திருக்க, எடுத்துக் கொள்ளப் போகும் என் கரம் உயர்ந்திருக்கும். ஏனென்றால் இந்த வேலையை நான் உங்களுக்காகவும், உங்கள் பிள்ளைகளுக்காகவும்தான் செய்கிறேன்.”

ஒரு லட்சம் குழந்தைகளுக்கு சீரான கல்வியைத் தரப் போகும் தன்னுடைய திட்டத்தைப் பற்றி உரையாற்றிய போது இப்படிச் சொன்னார் நித்யா. உதாரணமாக, குழந்தைகளின் ஏழு வயது வரை அவர்களுக்கு எண்கள் கற்பிக்கப் படக் கூடாது. அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் மூளைக்குள் எண்களைத் திணித்து அவர்களைச் சித்ரவதை செய்கிறது இன்றைய கல்வி முறை.

”ஒரு 15 வயது மாணவனின் கைகளை அவர் தொடும் போது அந்த உடம்பில் ஒரு 65 வயது ஆசாமியின் உடம்பிலும் மனதிலும் தெரியும் ஆயாசமும் சோர்வும் மன உளைச்சலும் – depression – தெரிகிறது” என்றார் நித்யா. அப்படியானால் அந்தக் குழந்தைகளை எந்த அளவுக்கு நாமும் நம்முடைய கல்வி முறையும் சித்ரவதைக்கு உள்ளாக்குகிறோம் என்று தெரிந்து கொள்ளுங்கள். அதனால்தான் நம்முடைய இளைய சமுதாயம் நமக்கு எதிராகச் செயல்படுகிறது. வீட்டில் உங்கள் குழந்தைகள் உங்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என்றால் இதுதான் ஒரே காரணம். ஒரு குழந்தையை எந்தெந்த சித்ரவதைக்கெல்லாம் உட்படுத்த முடியுமோ அப்படியெல்லாம் செய்து விட்டு அந்தக் குழந்தை உங்களுடைய சொல்படி நடக்க வேண்டும் என்றால் எப்படி நடக்கும்?

குழந்தைகளின் சிருஷ்டித் தன்மையையே அழித்து விட்டு மனப்பாடம் செய் என்று சொன்னால் அது எப்படி மனப்பாடம் செய்யும் என்று கேட்டார் நித்யா. இங்கே நான் எழுதுவதெல்லாம் இன்றைய கல்வி முறை பற்றி நித்யா ஆற்றிய சொற்பொழிவிலிருந்து எனக்கு நினைவில் இருப்பது மட்டுமே ஆகும். மனித வாழ்வில் எழுத்து அறிமுகமாகி எத்தனை ஆண்டுகள் இருக்கும்? ஆனால் அதற்கு முன்பே இந்த உலகத்தின் மிக நீண்ட காவியமான மகாபாரதத்தின் ஒரு லட்சம் சுலோகங்களும் நம்முடைய முன்னோருக்கு மனப்பாடமாகத் தெரிந்திருந்ததே, அது எப்படி? காரணம், நம்முடைய மூளையில் 13 விழுக்காட்டையே நாம் பயன்படுத்துகிறோம். மீதி 87 விழுக்காடு எந்தப் பயன்பாடும் இல்லாமல் செயலற்றுக் கிடக்கிறது. இந்த 87 விழுக்காட்டையும் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே நித்யானந்தரின் கல்வி முறை.
கொய்யாகா: மகனே எனக்கும் இஸ்க்-இஸ்க் என்று தான் கேட்கிறது. உன்னகும் அப்படி தான் கேட்கிறதா ?

நித்யானந்தரின் பிடதி ஆஸ்ரமத்தில் உள்ள பள்ளியில் படித்த குழந்தைகள் விடுமுறையில் தத்தம் வீடுகளுக்குச் செல்லும் போது அங்கே மற்ற குழந்தைகளைப் போல் விடியோ கேம்ஸ் ஆடுவதில்லை. அதில் அக்குழந்தைகளுக்கு ஆர்வமே வருவதில்லை. ஆனால் அறிவிலும், புத்திசாலித்தனத்திலும், அன்றாட லௌகீக வாழ்விலும் மற்ற குழந்தைகளை விடப் பல மடங்கு சிறந்து விளங்குகிறார்கள்.

இதற்கெல்லாம் பணம் வேண்டாமா? அதனால்தான் நித்யானந்தர் பணம் கேட்கிறார். இப்போதும் அமெரிக்காவில்தான் இருக்கிறார். அமெரிக்காவிலிருந்து இதை வாசித்துக் கொண்டிருப்பவர்கள் நித்யானந்தர் என்ற நதியில் மூழ்கி எழலாம். என்னுடைய நண்பர்கள் சிலர் சொன்னார்கள். உங்கள் எழுத்தே நித்யானந்தரின் எழுத்தை விட நன்றாக இருக்கிறது என்று. ஒருவர் இருவர் அல்ல; பலர் சொன்னார்கள். எனக்குக் குழப்பமாகி விட்டது. இங்கே நான் என்றால் சாரு நிவேதிதா என்று அர்த்தம் அல்ல. மனித சரித்திரத்தில் இதுவரை கவிஞர்களாக அறியப்பட்டவர்கள் அத்தனை பேரையுமே அவர்கள் அப்படி அர்த்தப்படுத்தினார்கள். விளக்கமாகச் சொன்னால், ஒரு ரமணரை விட ஒரு தாஸ்தாவஸ்கி எங்களுக்குப் பிடித்திருக்கிறது என்று பொருள்.

யோசிக்க யோசிக்க குழப்பம் அதிகமானது. அது எப்படி? எனக்கு உறக்கம் வரவில்லையானால் நான் நித்யானந்தரிடம் செல்கிறேன். அவர் சக்தி தாரணை என்ற ஒரு தியானத்தைக் கற்பிக்கிறார். வெறும் ஐந்து நிமிட தியானம். தூக்கம் பிய்த்துக் கொண்டு வருகிறது.

காமத் தீயால் சரீரமும் மனசும் வெந்து சாகிறது. நித்யாவிடம் செல்கிறேன். என் ஆக்ஞா சக்ரத்தில் தன் கட்டை விரலை வைக்கிறார். காமம் காணாமல் போய் விடுகிறது.

இப்படி எந்தப் பிரச்சினை என்று போனாலும் தீர்த்து வைக்கும் அற்புதத்தை நிகழ்த்திக் கொண்டே இருக்கும் நித்யா எங்கே, ஒரு சராசரி மனிதனாகிய நான் எங்கே? ஆனால் இலக்கிய வாசகர்கள் வேறு விதமாகச் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதை என்னால் நிராகரிக்கவும் முடியவில்லை. ஏற்கவும் முடியவில்லை. குழம்பியபடி வந்து கணினியைத் திறக்கிறேன். நித்யா சொல்கிறார். ”நான் சொற்களுக்கு அப்பால் என் அற்புதங்களை நிகழ்த்துகிறேன்.”

உடனே எனக்கு விஷயம் விளங்கி விட்டது. கவிஞன் தனது அற்புதத்தை சொற்களில் நிகழ்த்துகிறான். கடவுள் தனது அற்புதத்தை சொற்களுக்கு அப்பால் நிகழ்த்துகிறார். ஆனால் நித்யானந்தரைப் பொறுத்தவரை அவர் சொல்லிலும் கடவுள் என்றே சொல்லுவேன்.

நித்யாவை கடவுள் என்று பார்க்க வேண்டாம்; கடவுளின் அவதாரம் என்று பார்க்க வேண்டாம்; ஞான குரு என்று பார்க்க வேண்டாம்; ஏன், ஒரு யோகாச்சாரியார் என்று கூட பார்க்க வேண்டாம். ஆனால் அவரிடமிருந்து பொங்கிப் பிரவாகிக்கும் கவித்துவம் இருக்கிறதே, அது 50 ஷேக்ஸ்பியரையும், 50 கம்பனையும், 50 வியாசனையும் ஒன்றாகச் சேர்த்தால் கூடச் சமமாகாது. ஒரு கனமான மழை எப்படி இருக்கும் என்று பார்த்திருக்கிறீர்களா?

வானத்துக்கும் பூமிக்கும் இடைவெளியே இல்லாமல் கனத்துப் பொழிந்து கொண்டிருக்கும் மழை போலவே இருக்கும் நித்யாவின் கவிதாப் பிரவாகம். என்ன கல்வி முறை இது? கண்களை விற்று விட்டு ஓவியம் வாங்க ஓடுகிறீர்கள்! கால்களை விற்று விட்டு நடனம் பயிலச் செல்கிறீர்கள்! (இப்படியே ஒரு ஐந்து நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் அடுக்கிக் கொண்டே செல்கிறார் நித்யா. இன்றைய கல்வி முறை பற்றிய அவருடைய ஆங்கிலச் சொற்பொழிவில் எனக்கு ஞாபகம் இருந்தது இவ்வளவுதான்).

கவிதை, கவிதை, நித்யா வாயைத் திறந்தாலே கவிதையாய் பொழிகிறது. யாரோ பணபலம் பற்றிக் கேள்வி கேட்டார்கள். உடனே நித்யா “எனக்குப் பணபலம் வேண்டாம்; ஜன பலம் போதும்” என்றார். இப்படி ஒவ்வொரு வார்த்தையுமே அவரிடமிருந்து கவிதையாகத்தான் வருகிறது.

அமெரிக்காவில் ஒரு பெண் நித்யாவிடம் கேட்டார். ”நீங்கள் உங்களுடைய செய்தியை ஆறு ஏழு ஆண்டுகளாகத்தான் பரப்பி வருகிறீர்கள். இவ்வளவு குறுகிய காலத்தில் உலகம் பூராவும் இத்தனை கிளைகளைப் பரப்பி இருக்கிறீர்கள் என்பதைப் பார்க்கும் போது நீங்கள் ஒரு சூப்பர் பிஸினெஸ்மென் என்று தெரிகிறது.”

கண்ணிமைக்கும் நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு நித்யா அளித்த பதில்: “ஆமாம்; நான் ஒரு வியாபாரிதான். ஆனால் இதுவரை நீங்கள் அறிந்த வியாபாரிகளுக்கும் எனக்கும் ஒரே ஒரு வித்தியாசம்தான் உண்டு. நான் உங்களுடைய துக்கத்தை வாங்கிக் கொண்டு, பதிலாக நித்யானந்தத்தைத் தருகிறேன்.” அப்படிப்பட்ட அந்த ஆனந்த வியாபாரி இதுவரை ஒரு 300 புத்தகங்களை எழுதியிருக்கிறார். பெரும்பாலும் ஆங்கிலத்தில் எழுதியவை. வருகின்ற ஜனவரி முதல் தேதி, 2010 நித்யானந்தரின் 33-ஆவது ஜெயந்தி தினம் வருகிறது. அன்றைய தினம் அவருடைய 33 புத்தகங்களை தமிழில் கொண்டு வரலாம் என்று ஒரு திட்டம். அதில் Living Enlightenment என்ற புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்க்கத் துவங்கியிருக்கிறேன். A4 அளவில் மொத்தம் 900 பக்கங்கள். அக்டோபர் இறுதிக்குள் முடித்தாக வேண்டும். தினமும் 30 பக்கம் என்றால் மட்டுமே முடிக்க முடியும். அதனால் அதை முடித்த பிறகே ’கடவுளைக் கண்டேன்’ தொடருக்குத் திரும்ப முடியும். அதுவரை…
குஞ்சுகள் நித்யானந்தம் அடைந்த நிலையில்
அடுத்து வருவது: பட்டாயா பயணங்கள்

2 comments:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதைப் புடிச்சு வைத்திருந்து தருவதற்கு மனமார்ந்த நன்றி!
சிரித்து மகிழ்ந்தேன்.

காட்டான் said...

இந்தாளு "கொடுத்ததற்கு"மேல கூவியிருக்கான்யா..!