Tuesday 12 February 2013

ஒலக எழுத்தாளரின் ஜென் நிலை அனுபவங்கள் - சாரு டைம்ஸ் (13/2/13)


ஒலக எழுத்தாளர் சாருவின் காம"நெடி" கதைகள் தொடர்கிறது...!!!

ஜென் நிலை:

ஜென் நிலை என்றால் என்ன என்று என்னிடம் கேட்க்கும் அற்ப மானிட பதர்களுக்கு என்ன சொல்வது..அது ஒரு உன்மத்த நிலை..ஊம குத்து நாலு வாங்கினால் வலி வெளிகாடிகொள்லாமல் ஒரு சிரிப்பு சிரிப்போம் அல்லவா..அது தான் ஜென் நிலை. நான் பலமுறை என் வாசகர்களுக்கு ஜென் நிலை என்றால் என்ன என்று எடுத்து கூறி இருக்கிறேன்..இருந்தும் கடிதங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.டலிவா ஜென் நிலை என்றால் என்ன என்று கூறுங்கள் என்று..ஒரு கொரங்கு தன காயத்தை சொரிய்வது போல் தொடர்ந்து ஒரே கேள்வியை கேட்கிறது இந்த சமூகம் .சரி மீண்டும் சொல்கிறேன் . கடும் வேலை செய்து முடித்து விட்டு நீங்கள் வீடிற்கு சென்று ஜட்டியை கேசதஈ இருகின்றீர்களா? ( போடும் பழக்கம் இல்லாதவர்கள் ஒரு முறை போட்டுப்பார்த்து கழட்டவும் )...இறுக்கமான ஜட்டியை கழட்டிய பின் வரும் ஒரு ஏகாந்த நிலை தான் ஜென் நிலை.. 4 குளிர்ந்த பீர் அடித்துவிட்டு பஸ்ஸில் பயனிததுண்டா ?..உச்சா முட்டும்.அப்போது திடீரென்று ஒரு motel பக்கம் நிறுத்துவான்..அப்போது நீங்கள் சிறுநீர் கழித்தப்பின் வரும் நிலை தான் ஜென்..


சீனாவில் ஜெட் லீ என்கிற ஞானி " வேட்டிய தூக்கு வெளையாடு " என்ற மாபெரும் ஜென் புத்தகத்தில் 

"முட்டியது மூச்சா மயிரா போச்சா" 
என்ற மகா தத்துவத்தை இதன் மூலம் கூறி இருக்கிறார்...இதெல்லாம் எங்கே இந்த காமன் மேன்களுக்கு புரிகிறது ?? 

பல முறை நான் கூறி இருக்கிறேன் ஜென் தத்துவமும் சினிமாவும் ஒன்று சேர வேண்டும் என்று ..

80ஸ் களில் 

"வாடா என் மச்சி 
வாழக்கா பஜ்ஜி 
உன் உடம்ப பிச்சி 
போட்டுடுவேன் பஜ்ஜி "

போன்ற வித்யாசமான ஜென் ஹைக்கூ க்களை டி ஆர். எழுதி இருக்கிறார்..சமகாலத்தில் இது போல் பார்த்த நியாபகம் இல்லை ..கடைசியாக சென்னை 600028 படத்தில் 

"வானமோ நீலம் 
நீதான் எண் பாலம் " 

என்று மிர்ச்சி சிவா பின் நவீனத்துவமும் , இருத்தலியல் மற்றும் ஜென் இந்த மூன்றையும் கலந்து ஒரு கவிதை பாடினார் ..அதன் பிறகு இந்த பாமர சினிமா ஜென்னை நோக்கி முன்னேறவே இல்லை ?..எங்கே நடந்தது இந்த தவறு ?..உத்தம எழுத்தாளர் ஜெயமோஹனை எல்லாம் வசனம் எழுத வைத்தால் எப்படி ஜென் கருத்து மக்களிடம் சென்றடையும் ??.. ஜென்னை நிலையை எட்டிய இயக்குனர்கள் சுராஜ், பேரரசு, போன்றவர்களே ஜென்னை சினிமாவில் புறம் தள்ளும் போது நாம் என்ன செய்ய இயலும் ??..

தூள் படத்தில் சொர்ணாக்கா என்ற கதா பாத்திரம் " தூத்தேரி !! யாரு கிட்ட டா வச்சிகிடீங்க ??" என்று ஒரே வார்த்தையில் ஜென்னை கூறி நம்மை அதிசயிக்க வைத்தார்..பின்பு போயே போச்சு..ஜென்னவது மயிராவது !!

சரி அதை விடுங்கள் ....விஷயத்திற்கு வருகிறேன் !!

ஒரு முறை நண்பர் கொக்கி குமாருடன் மஹா முத்ராவில் டீ அடித்துக்கொண்டு இருந்தேன்..ஜென் நிலையில் ஒரு கவிதை சொல்ல இயலுமா என்று என்னிடம் சவால் விட்டார் ..

என் சகாப்தத்தில் நான் செய்த ஒவ்வொரு chat டும் கவிதையே...இருப்பினும் நீங்களே ஒரு தலைப்பு சொல்லுங்கள் என்றேன்...நிலா பற்றி ஜென் கவிதை சொல்ல முடியுமா ?? சொல்லிவிட்டால் ஓசியில் உங்களுக்கு ஜானி வாக்கர் வாங்கி தருகிறேன் என்று சொன்னார்...ஓசி என்ற வார்த்தையை கேட்டாலே தான் நான் ஜென் நிலைக்கு சென்று விடுவேனே,,

கண்ணை மூடி மனதினை திறந்தேன்...சேலம் சித்த வைத்தியர், பாண்டிச்சேரி தர்மராஜன், போன்ற ஜென் ஞானிகள் என் உடலில் புகுந்து நர்த்தனம் ஆட தொடங்கினர்...பப்பா !! என்ன ஒரு நிலை அது..? கவிதை தானாக ஊற்றெடுத்தது ..

""நிலவே !! நீ என்ன Item மா ??
இரவில் மட்டும் வந்து விட்டு 
பகலில் சென்று விடுகிறாயே ?? ""

என்றேன்...

நன்றாக இருக்கிறது ஆனால் அந்த ஜென் டச் இல்லையே என்றார்..

""நிலவே !! நீ என்ன Item மா ??
இரவில் மட்டும் வந்து விட்டு 
பகலில் சென்று விடுகிறாயே 
காசு கூட வாங்காமல் ?? ""

என்ற மஹா கவிதை உதித்தேன்...கொக்கி குமார் அழுதே விட்டார்...கடைசியாக தன் பாட்டி வயசுக்கு வந்த நேரத்தில் அழுதவர்..இப்போது என் கவிதைக்கு அழுகிறார்.. நீங்கள் ஜென்னை புரிந்து கொண்டது போல் எவனுமே புரிஞ்சக்வில்லை டலிவா என்று கண்ணீர்மல்க கூறினார்..

"உங்களுக்கு தெரிகிறது..ஆனால் என்னை விமர்சிக்கும் மக்களுக்கு இது புரிவதில்லையே!!" கொக்கி கொமாரு என்றேன் .. எவளவு அடிச்சாலும் வலிக்காத மாதிரியே நடிக்கிறதும் ஜென் நிலை தான் !! இதை தான் நான் அடிகடி கூறுவது...இப்போது சொல்லுங்கள் நான் ஜென் முனியா இல்லையா ??

***********************************************************************************************
டலிவரு (சாரு)ஸ்டைலில் கடிதம் எழுதுவது எப்படி ?? ( ஒரு Template)

நண்பர் ஒருவருடன் (கற்பனை பெயர் ) _____________ பேசிக்கொண்டு இருந்தேன் /போய்கொண்டு இருந்தேன். திடீரென்று அவர் " _________________________" ( நம்மள பத்தி ஒரு ஓவர் பில்ட் அப் ......" உங்களை ஏன் இந்த சமூகம் அங்கிகரிக்க வில்லை ?, ஆஸ்கார் ஏன் உங்களுக்கு தரவில்லை?..இந்த மாதிரி பில்ட் அப் ) என்று கேட்டார் ..

(கவனிக்க : இங்க தான் சமூகத்தை திட்ட ஆரம்பிக்க வேண்டும்,)

என்னசெய்வது விபீஷணன் ? ( தருமசேனன் , குசேலன் , ஆரிய பட்டா இப்படி எக்குதப்பு பெயர் இருக்க வேண்டும் ). என்னால காம்ப்ரமைஸ் பண்ணிக்க முடியல .காசுக்காக நான் சினிமா வசனம் எழுத முடியாது .

(கவனிக்க : இங்க தான் " ஜப்பான்ல ஜாக்கி சான் கூப்டாகோ " ரேஞ்சில் ரீல் விட வேண்டும் )

ஜெய்பூர் விழாவில் பேச வந்த ________ ( நிச்சயமாய் ஒரு வெளிநாட்டு பெயர் ..புஸ்கா குஸ்கி , கொசப்போ லெக் பீசா இந்த மாதிரி ) என்னிடம் கூறினார். "நீங்கள் மட்டும் பாரிஸ் , ஜெர்மனி வந்தால் மக்கள் உங்களை தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் " என்று .

அவருக்கு தெரிகிறது !!! 
(//கவனிக்க : "ஆள் இன் ஆள் அழகுராஜ் அண்ணே நல்லவரு ஒரு வல்லவரு " அந்த Slang யில் சொல்ல வேண்டும்// )

நான் கம்மென்று சிரித்துக்கொண்டேன் ( //இப்படி ஒரு ஜென் effectu குடுக்க வேண்டும்// )

(கவனிக்க : சம்பந்தமே இல்லாமல் குடி, சரக்கு இங்கே வர வேண்டும் )

ரெமி மார்டின் வாங்குவதற்கே என் மொத்த காசும் போய்விடும் போல் இருக்கிறது .( என்னவோ இவரே வாங்குற மாதிரி ).ஏதோ ____ புண்ணியத்தில் நேற்று குழி பணியாரம் கிடைத்தது ( இப்படி சொன்னதான் அடுத்த வாட்டியும் வரும் )

(//கவனிக்க : இங்க தான் சித்தப்பு மெயின் பிட்டு ஸ்டார்டிங் !!// )

பிட்டு 1 : ஆனால் எவ்வளவு நாள் இப்படியே செல்வது ?. சீலே போய்விடவேண்டும் ,, பாப்லோ நெருடா வாழ்ந்த இடத்தில் அந்த மண்ணை தொட்டு பார்க்க வேண்டும் என்ற எண்ணம் என்ன ஆவது ??

பிட்டு 2 : ஆனால் எவ்வளவு நாள் இப்படியே செல்வது ? " NURSERY RHYMES" மொழி பெயர்த்து உலக இலக்கியம் எப்படி படைப்பது ? நீங்களே சொல்லுங்கள் ( காமெராவை பார்த்தபடி ) ஒரு ஒழுதாலன் தனியாய் இதை செய்ய முடியுமா ??

(கவனிக்க : மறுபடியும் சமூகத்த ஒரு திட்டு ! ஆனால் இந்த முறை இங்கிலிபீசு, மானே தேனே பொன்மானே மாதிரி சில பல இங்கிலிபீசு கேட்ட வார்த்தைகள் )

what to do? The society fucks off the creativity of a creator. and sucks him dry 

நான் செய்வது எழுத்துப்பணி மட்டும் அல்ல. அது ஒரு தவம் .வெறி பிடித்து ஒரு பைத்தியகார மனநிலையில் இருந்தால் மட்டுமே அந்த மாதிரி ஒரு படைப்பை படைக்க இயலும். ஒரு நாளைக்கு 32 மணி நேரம் தட்டச்சு செய்கிறேன் .ஆனாலும் எனக்கு நேரம் போதவில்லை ! (// நான் ரொம்ப பிசிய்
ய்ய்!!!!!//)

(//கவனிக்க : இந்த இடத்தில ஜெயமோகன் , எஸ் ரா , மனுஷ்யபுத்திரன், கமல், மிஸ்கின், இளையராஜா இவர்களில் யாராச்சும் வம்புக்கு இழுக்க வேண்டும் )

நான் என்ன உத்தமஎழுத்தாளனை போல் ஜால்ரா அடிக்க முடியுமா ? இல்லை "புஷ்கின் நீங்க ரொம்ப நல்லவரு" என்று கால் அமுக்கி விட முடியுமா ?

அதை விடுங்கள் !! ((//கவனிக்க : இந்த "அதை விடுங்கள்" மிக முக்கியம். " சரி விஷயத்துக்கு வருகிறேன் " இந்த வார்த்தை கூட உபயோகிக்கலாம் !// )

யார் இதற்க்கு Cover design செய்து தர முடியும் ?(// இதுக்கு தானே இவ்வளவு நேரம் பிட்டு !!)
ஒரு ஆளாக இதை செய்வது கடினம் (// ரெண்டு மூணு பேருக்கு பிட்டு )

(//கவனிக்க : இது தான் கிளைமாக்ஸ் !!)
My bank details
டலிவரு ,
மயிலாப்பூர் பிரான்ச் ,
சிங்கார சென்னை

***********************************************************************************************
என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ??

நேற்று மதியம் கால்போன போக்கில் நடந்து கொண்டிருந்தேன்.வழியில் ஒரு சிக்னலில் எனது பழைய நண்பர் கொக்கி குமாரை பார்க்க நேரிட்டது .

"என்னங்க மதிய நேரத்துல வந்துடீங்க வெளிய..? "

" இங்க தான் இது மதியம் , சீலே ல இது ராத்திரி 3 13 ..நான் தான் தென்னமெரிக்க டைம் பாலோ பண்ணுகிறேன் என்று உங்களுக்கு தெரியாதா ? இதே மாதிரி தான் கொலம்பியன் எழுத்தாளர் ரொனால்டோ ....

சரி சரி தெரியாமா கேட்டுட்டேன்..அதுக்காக கண்ட பேரு எல்லாம் சொல்லி என்ன கதி கலங்க வைக்காதீங்க.வந்து வண்டியில ஏறுங்க " என்று கொக்கி அறசீற்றம் காட்டினார் .

4 சிக்னல்கள் கடந்து வண்டி சென்றுகொண்டு இருந்தது .." எங்கே போகிறோம் ? " என்றேன்... "வாவ் டலிவா ! "மழையா பெய்கிறது" மாதிரி இதுவும் ஒரு நல்ல தலைப்பு " என்று கொக்கி இங்கிதமே தெரியாமல் பேசினார்.

நாங்கள் ஒரு ஆரம்ப பள்ளிக்கு சென்றோம்.கொக்கி தன்னுடைய தோழி ஒருவரை சந்திக்க வந்திருந்தார் ..தோழி அங்கே கணித ஆசிரியை.. மகாமுத்ரா அழைத்து செல்வார் என்று நினைத்தால் ஒரு maths கிளாசுக்கு அழைத்து வந்து விட்டார்..இதுவே பாரிஸ் ஆக இருந்தால் ஒரு எழுத்தாளன் மதிய வெயிலில் நடந்தால் அவனை அழைத்து சென்று Medium Margherita Pizza, Blue Mojito, French Fries and salsa dip sauce ஆர்டர் செய்வார்கள்..பட்டயாவாக இருந்தால் அவர்களே மடியில் வைத்து ஊட்டி விடுவார்கள்...அதை விடுங்கள்.. இப்போது நான் சொல்லவருவது அது இல்லை ..ஒரு மாபெரும் வரலாற்று அபத்தம்..

அங்கே மாணவர்களுக்கு எண்களை ஒப்புவிக்க சொல்லி குடுத்தாள் அந்த தோழி 

"ஒ , என் , ஈ ...ஒன் "
" டீ , டபுலு , ஓ "....டூ 

இவ்வாறு அவர் சொல்ல சொல்ல அந்த பிஞ்சிகள் கோரசாக சொல்லிகொண்டே வந்தனர் ..

அங்கே தன அந்த ஆபாசம் நிகழ்ந்தது ..

21 என்றால் twenty one
31 என்றால் thirty one
41 என்றால் forty one
51 என்றால் fifty one

அப்படி என்றால் 11 என்றால் ஒண்டி ஒன் ( அதாவது onety one ) என்று அல்லவா கூறியிருக்க வேண்டும் ?? கேனத்தனமாக அவர் லவன் ( eleven ) என்று ஏதோ சொல்லி குடுக்கிறார்..

என்ன உலகம் இது ?? ஆங்கிலம் தமிழை அழித்தது போதாது என்று இப்போது கணக்கையும் அழிக்கிறதா ?? சீலேவில் இதை நான் சொல்லி இருந்தால் எனக்கு வஞ்சிரம் மீனும் , grape wine னும் குடுத்து எனக்கு மரியாதை செய்திருப்பார்கள்... அமெரிக்க பல்கலைகழகம் இதை நிச்சயம் பட திட்டத்தில் சேர்த்திருக்கும்...என் நேரம் ..ஒரு மிடில் கிளாஸ் ஆரம்ப பள்ளியில் இதை சொல்ல நேரிடுகிறது ..

இதை சொன்னால் அந்த தோழி " நீங்கள் கழகம் செய்கிறீர்கள் ..பெரியார் எழுத்தை மாற்றியதை போல் நீங்கள் எண்களை மாற்றுகின்றீர்கள்...உங்களுக்கு numerology தெரியுமா ? " என்று கேட்டால் ..கிழிஞ்சது...

இவர்களிடம் பேசி பிரோஜனம் இல்லை என்று அமைதியாக நாகேஸ்வர ராவ் பூங்காவிற்கு நடக்க தொடங்கினேன்..

என் மனதில் ஒரே ஒரு கேள்வி மட்டும் எதிரொளித்துக்கொண்டே இருந்தது 

அது 
/
/
/
/
/
" என்ன மாதிரியான சமூகத்தில் வாழ்கிறோம் ?? "
***********************************************************************************************
நன்றி - பாம்பாட்டி சித்தன் (சாரு நிவேதிதா- விமர்சகர் வட்டம்)

6 comments:

Unknown said...

இந்த வாரம் மண்டையை ரொம்ப வாரியிருக்கீங்க.என்னுடைய பெயரை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதுக்கு கண்டனம்.

Nandu Neelakkal !!! said...

எல்லாம் நம்ம சித்தரின் கை வண்ணம் தான்...
தூள் படத்து சொர்ணாக்கா வசனம் ஜென் நிலையில் வருவது பாஸ்...கண்டுக்கபடாது.

அகலிக‌ன் said...

இப்படியெல்லாம் நடக்குதா பாஸ்! யாரும் சொல்லவேயில்ல.

N said...

Some years ago, I gave about 1500 rs for this idiots website. He said some thanks and I never heard back from him again.

We can never satisfy this guy's hunger for money. He is the literary robber.

What he does with all the collected money? Does he keep accounts? Ellam govinda!!!

Unknown said...

//இங்க தான் இது மதியம் , சீலே ல இது ராத்திரி 3 13 ..நான் தான் தென்னமெரிக்க டைம் பாலோ பண்ணுகிறேன் என்று உங்களுக்கு தெரியாதா ?// Ha ha ha....

mathuran said...

இப்படி வரிக்கு வரி வாரியுள்ளீர்களே!.