Monday, 11 March 2013

சீலே பயணத்திற்கு கிட்னியை விற்ற பாரு தகதிமிதா - சாரு டைம்ஸ் (12/03/13)


மண்டை (சாரு நிவேதிதா) எப்படி எல்லாம் பிச்சை எடுக்கிறதுன்னு தெரியாம எப்படி எப்படியோ உண்டியல் குலுக்கிகிட்டு இருக்கும். அது போற ஸ்பீட்க்கு எப்படியும் குவாட்டர்க்கு காசு சேர்த்திரும் போல. மண்டைக்கு காசு சம்பாரிக்க எங்க வட்டத்தின் சார்பில் சில யோசனைகளை இதோ.

ஜெய் ஜக்கம்மா 

சாரு: கூட்டத்துல வேடிக்கை பார்குற மகா சனங்களே,

இப்போ இந்த கூடையில் நான் தமிழில் எழுதிய புஸ்தகம் இருக்கும் - அதை அந்த கூடியுள் இருக்குற பிரெஞ்சு புஸ்தகமா மாத்த போறேன் !

எல்லாரும் ஜோரா ஒருதபா கை தட்டுங்க 

தட்டுல முடிஞ்சா அளவு ரூவா போடுங்க !!!

ஜெய் சக்கமா !!!!!

என்னோட இந்த பொஸ்தகத்தின் பிரெஞ்சு மொழியாக்கம் படித்தால் 

பிரான்ஸ் தேசத்து சுடுகாட்டுக்கு நாடு ராத்திரி 12 மணிக்கு தனியா தைரியமா போவலாம் ....

காசு போட்டவங்க , ஸ்பானிஷ் மொழி பெயர்ப்புக்கு காசு வேணும் ; மறுபடியும் போடுங்க.

காசு போடாதா ப்ளடி மிடில் கிளாஸ் - இது ஒன்னும் ப்ரீ F #$< இல்லை 

காசு போட்டுட்டு கமண்ட் அடிக்குறவன் ரத்தம் கக்கி சாவான் !!!

காசு போடாமல் கேலி செய்யுறவன் , வாந்தி எடுக்கும் போது , அவன் குடல் குந்தாணி எல்லாம் வெளியே வந்துடும் இது நான் சொல்லலை !

ஜக்கம்மா சொல்லுறா !!!!!

ஜெய் ஜக்கம்மா !!!!!
***********************************************************************************************
சிலே மற்றும் இத்தாலி பயணம்:

நேற்று காலை சுமார் பத்து மணி அளவில் amethyst ல் அமர்ந்திருந்தேன். இரண்டு மூன்று ஐரோப்பிய பெண்கள் மட்டுமே சத்தமாக ஏதோ ஒரு மொழியில் பேசிகொண்டிருன்தனர். மற்ற படி அந்த இடத்தில் நான் மட்டுமே. என் கடைசி நாவலின் பிரெஞ்சு மொழியாக்கத்தை திருத்தி கொண்டிருந்தேன். இன்னும் ஒரு மூன்று நாட்கள். தயாராகிவிடும். சரி, விஷயத்துக்கு வருகிறேன்.

இப்பொழுது அந்த மூன்று பெண்களுடன் வந்து இணைத்து கொண்டார் ஒரு நபர். அவர் ஒரு இந்தியர். சென்னைக்காரர் . மேலும் அவர் ஒரு டாக்டர். சிறிது நேரம் அவர்களுடன் பேசிகொண்டிருந்தவ்ர் , என்னை பார்த்ததும் ஓடி வந்தார். இதற்கு முன் அவரை நான் பல முறை டென் டௌனிங் இல் பார்த்திருக்கிறேன். பெரிதாக பேசிக்கொள்ள சந்தர்பம் அமைந்ததில்லை. மிகபெரிய மருத்துவ மனையில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி கொண்டிருபதாக கூறினார். பேச்சிற்கு இடையில் அவருக்கு தொலைபேசி அழைப்பு. பேசி முடித்தவுடன் என்னிடத்தில் மிகவும் ஆயாசமாக , ஒரு மிக மிக்கியமான நபருக்கு கிட்னி கிடைபதில் சிக்கல் என்றும் பல நாட்களாக காத்து கொண்டிருப்பதாகவும் கூறினார். 

மேலும் அந்த நபர் கிட்னி கிடைத்தால் 3 லட்சம் வரை செலவழிக்க தயார் என்றும் கூறினார். 3 லட்சம் என்றதும் எனக்கு சிலேயும் எனது தென் அமெரிக்க பயணத்தையும் நிறைவேற்றுவதற்காக மஹா அவதார் பாபா தான் இவரை அனுப்பியது போல் தோன்றியது. எனது கிட்னி யை நான் தருவதாக சொன்னதும் , அவர் என்னிடம் நமது ஊரில் இன்னும் கிட்னி தானத்தை பற்றிய விழிப்புணர்வு வர வில்லை, உங்களை போன்ற ஒரு சிலரால் தான் அது சாத்தியம் என்று கூறினார். சில டெஸ்டுகள் செய்வதற்காக என்னை மருத்துவமனைக்கு வர சொன்னார். மதியமே கார் அனுப்புவதாகவும் கூறி விடைபெற்றுக்கொண்டார்.உடனடியாக அடத்தூ விற்கு போன் செய்து விசயத்தை கூறினேன். 

அடத்தூ சந்தோசபடுவார் என்று நான் நினைத்ததற்கு மாறாக அவர், உங்களை போன்ற ஒரு அப்பாவியை நான் பார்த்ததே இல்ல தல, சிலி பயணத்திற்கு கிட்னியை கொடுத்துவிட்டால் அடுத்து இத்தாலி பயணத்திற்கு என்ன செய்வீர்கள் என்று கேட்டு ஒரு குண்டை தூக்கி போட்டார். சரி என் இத்தாலி பயணத்திற்கு என் கிட்னியை நான் கொடுக்க நான் தயார். என் சிலி பயணத்திற்கு உங்கள கிட்னியை யாரேனும் கொடுத்து உதவ சம்மதமா? கிட்னி கொடுப்பதில் கிடைக்கும் 3 லட்சத்தையும் என் பயணத்திற்கு மட்டுமே செலவு செய்வதாக உத்தேசம்..விருப்பமுள்ளவர்கள் உனடியாக எனையா அல்லது அட்மின்கலையோ தொடர்பு கொள்ளவும் .

பி கு : பீது மற்றும் கருப்புவிடம் இதை போன் செய்து சொன்னவுடன் , ஒரே நிமிடத்தில் திரும்ப அழைக்கிறேன் தல என்றனர். இப்பொழுது போன் செய்தால் சுவிட்ச் ஆப் என்று வருகிறது. மகா அவதார் பாபாஜி யின் மொபலை தொடர்பு கொண்ட போது 
"The subscriber you are calling , can not be reached at the moment " 
என்று ஒரு பெண் கூறினார் !
அடி முட்டாளே , மகா அவதார் பாபாஜி யை நான் எப்போது வேண்டுமானாலும் reach செய்வேன் ! குறுக்கே நீ யார் ?
சீலே பயணத்திற்கே உனது கிட்னியை கொடுக்கலாமே என்று கேட்பவர்களுக்கு, வாருங்கள் வட்ட சந்திப்பில் பதில் கூறுகிறேன்.

***********************************************************************************************
குப்பி ராஜா: குப்பி குடுப்பது என் குல தொழில்.

ஆபாசம் என்பது வார்த்தையில் இல்லை; மனதில் இருக்கிறது. சரி, ஏன் இந்தப் பழமொழியைச் சொன்னேன் என்றால், வெத்தாக நான் செய்து கொண்டிருந்த குப்பி கொடுக்கும் நிகழ்ச்சிகளை நிறுத்திக் கொண்டு விட்டேன். முதலில் ஆட்டோ செலவைக் கூட ஏற்றுக் கொண்டுதான் அந்த நிகழ்ச்சியைச் செய்து வந்தேன். அவர்களின் அலுவலகத்துக்குச் செல்ல ஆட்டோவுக்கு 200 ரூ. ஆகும். திரும்ப 200 ரூ. மொத்தம் 400 ரூ. செலவு செய்துதான் அந்த நிகழ்ச்சியைச் செய்து வந்தேன். ஒரு ஆறு ஏழு நிகழ்ச்சி செய்திருப்பேன். ’சின்னதம்பி’ என் நண்பன் அல்ல; என் தோழன். அவன் என்னிடம் வந்து “ஏன் இவ்வளவு ஏமாளியாக இருக்கிறாய்?” என்று கேட்டான்.

நான் அவனிடன் சண்டைக்குப் போனேன். ”நீயெல்லாம் ஒரு ஆன்மீகவாதியா? நம்மிடம் இருப்பதை மற்றவர்களுக்குக் கொடுப்பதில் பைசா கணக்கெல்லாம் பார்க்கலாமா? ஒரு வேசி செய்யும்காரியத்தை அல்லவா நான் செய்து கொண்டிருக்கிறேன்?” என்றேன். ”மிகவும் சரி, ஆனால் வேசிகளை சமூகம் கவனித்துக் கொண்டது. உன்னை யார் கவனித்துக் கொள்கிறார்கள், உன்னுடைய ஒன்றிரண்டு வாடிக்கையாளர்களைத் தவிர?” பிறகு அவன் சொன்னதை யோசித்தேன். இரவு நிகழ்சி நடத்துபவர்கள் ஒன்றும் சமூக சேவை செய்வதற்காக நடத்தவில்லை. அது ஒரு வியாபாரம். அப்படி இருக்கும் போது நாமே ஏன் ஆட்டோவுக்குக் கூட செலவு செய்து கொண்டு போய் குப்பி குடுத்து விட்டு வர வேண்டும் என்று யோசித்தேன். பிறகு அவர்களே வண்டி அனுப்பினார்கள். இதுவரை சுமார் முப்பது விதமான வகைகளில் குப்பி கொடுத்து இருக்கிறேன். சர்வதேச அளவில் குப்பி கொடுத்தல் பற்றிய மிக முக்கியமான ஆவணங்கள் அவை. குப்பி கொடுக்க கற்றுக் கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் அந்தப் பேச்சுக்கள் பாடமாக அமையும். ஆனால் அந்த முப்பது நிகழ்ச்சிகளையும் இலவசமாகவே செய்து கொடுத்தேன். என்னுடைய ஏராளமான நேரம் சக்தி (!!)இதில் விரயம். அதற்கெல்லாம் என்ன கூலி என்று கேட்காதீர்கள்.

இந்த நிகழ்ச்சிக்கு – அரை மணி நேரம் குப்பி பற்றிய நிகழ்ச்சிக்கு மற்ற லாட்ஜுகள் 30,000 ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் வரை சம்பளம் கொடுக்கின்றன. நான் வெறும் 5,000 ரூ. கேட்டேன். 

சாத்தியமே இல்லை என்றார்கள். ’சரி, நிகழ்ச்சி மிகவும் பாப்புலராகப் போய்க் கொண்டிருக்கிறது. யார் யாரோ என்னிடம் அது பற்றி விசாரிக்கிறார்கள்’ என்று நினைத்து, பணப் பிரச்சினையால் இது நின்று விடக் கூடாது என்ற நல்ல எண்ணத்தில் 2000 ரூ. தர முடியுமா என்று கேட்டேன். அதுவும் சாத்தியமாகாது என்று சொல்லி விட்டபடியால் இனிமேல் மோகனா லாட்ஜில் “நான் கொடுத்த குப்பி” நிகழ்ச்சியில் நான் பேச மாட்டேன். வரும் ஞாயிற்றுக் கிழமை ரத்தம் தவிர்த்தல் பற்றிப் பேசுவேன். அதோடு சரி.

ஒன்றரை மாதத்துக்கு முன்பு கேரளாவில் கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு இப்போதுதான் என் முகவரி கேட்டுத் தொலைபேசி வந்தது. அதுவும் பத்து இருபது முறை விடாமல் அடமாக அவர்களுக்கு போன் போட்டுப் பேசிய பிறகு.சென்ற வாரம் பிரான்சில் நிகழ்ச்சிக்கு அழைத்தார்கள். பணம் கொடுத்தால் மட்டுமே வர முடியும் என்றேன். சரி, தருகிறோம்; நீங்கள் கலந்து கொண்ட மற்ற இரண்டு நிகழ்ச்சிகளுக்கும் சேர்த்துத் தந்து விடுகிறோம் என்றார்கள். ஆஹா பேஷ் பேஷ் என்று சொல்லிக் கொண்டு சென்றேன். பேசினேன். ஆனால் பேசியபடி பணம் தரவில்லை. அது பற்றிய பேச்சே இல்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரிடம் பலமுறை இது பற்றிப் பேசினேன். ஏற்பாடு செய்கிறேன் என்றார். இப்போது தினம் மூன்று முறை வீதம் மெஸேஜ் அனுப்பிக் கொண்டிருக்கிறேன். காலையில் சற்று முன்னர்தான் ஒரு மெஸேஜ் அனுப்பினேன். மதியம் அனுப்ப வேண்டும்.

நண்பர்களே, வாடிக்கையாளர்களிடம் பணம் கேட்கிறேன் என்று என்னைப் பலரும் விமர்சிக்கிறார்கள். இண்டர்நெட் பிச்சைக்காரன் என்று சொல்லி இழிவு செய்கிறார்கள். என் உழைப்புக்குக் கூலியே கொடுக்காவிட்டால் நான் என்னதான் செய்வது? சிவ ராஜ் சித்த வைத்தியர் நம் இந்திய சமூகத்துக்குப் பல நற்காரியங்களைச் செய்தார். அவர் ஏதாவது ஆபீஸில் போய் வேலை செய்து சம்பாதித்தாரா? அவருடைய செயல்களுக்கான பணம் எப்படி வந்தது? மக்கள் கொடுத்தார்கள். அதற்குப் பெயர் பிச்சையா? பாண்டிச்சேரி தர்மராஜன் எடுத்தது பிச்சையா? நான் மக்களுக்காக கொடுக்கிறேன். மக்களுக்காகப் பேசுகிறேன். அவர்கள்தானே எனக்கு அன்னமிட வேண்டும்?

இங்கே உள்ள லாட்ஜுகள் மத்திய காலகட்டத்தின் துருக்கி சுல்தான்களின் அரண்மனைகளைப் போல் காட்சியளிக்கின்றன. ஆயிரம் கோடி ரூபாய்களில் கட்டப்பட்டவை. ஆனால் ஒரு இரவுக்கு ஆயிரம் ரூபாய் கூலி கொடுக்க அழுகிறார்கள்.ஆனால் மற்ற மாநிலங்கள் எப்படி இருக்கின்றன? சமீபத்தில் புபனேஸ்வர் சென்று வந்தேன். விமான நிலையத்தில் இறங்கியவுடனே என் புகைப்படம் அங்கே உள்ள பிரபலமான Badsani என்ற ஆல்பத்தில் வந்திருந்தது. நான் வரும் செய்தி சரோஜா தேவியில் இரண்டாம் பக்கத்தில் முழுப்பக்க செய்தியாக – அதாவது என்னைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரையாக வந்திருந்தது. அதில் கூப்பியடித்தல் பற்றி நான் கொடுத்திருந்த பேட்டியும் இருந்தது. அந்தப் பேட்டி Tasty Dissy எடுத்தது. ஆக முதல் நாளே ஒடிஸா முழுவதும் நான் யார் என்று தெரிந்து விட்டது.

மறுநாள் நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டது பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் வெளிவந்தது. ஏதாவது புரிகிறதா? அல்லது, நான் ஏதாவது உளறுகிறேன் என்று நினைக்கிறீர்களா? பத்திரிகைகள் என் கைவசம் உள்ளன. அந்தப் புகைப்படங்களை நகல் எடுத்து சாரு ஆன்லைனில் வெளியிடும் தொழில்நுட்பம் எனக்குத் தெரியவில்லை. சரோஜாதேவி என்று தலைப்பு இருக்கிறது அல்லவா? அந்தத்தலைப்புக்குக் கீழே முதல் பக்கத்தில் நான் நிகழ்ச்சியை துவக்கி வைத்து குத்து விளக்கு ஏற்றும் புகைப்படம் வந்தது. அடுத்த பக்கத்தில் அந்தக் கருத்தங்கில் நான் பேசிய பேச்சு விபரம் அரைப்பக்கம் வந்திருந்தது.

சரி, இப்போது உண்டியல் விஷயம். குப்பி கொடுப்பவன் உண்டியல் குலுக்குவதே ரொம்பவும் அவமானகரமான காரியம். அவனுக்கு அல்ல; சமூகத்துக்கு.
கொடுத்த குப்பிக்கு கூலி மறுக்கப்பட்டுக் கொண்டே இருப்பதால்தான் மீண்டும் உண்டியல் குலுக்குகிறேன். எவ்வளவு குறைந்த பணமாகவும் இருக்கலாம். விபரம்:

Account holder’s Name: அறிக்கி என்கிற அறிவழகன்
Account number: 122333444455555666666
Branch: சீலே பஸ்ஸ்டாண்ட் பின்புறம், சீலே
IFSC ABDCD98765
***********************************************************************************************
குப்பிகள் விற்பனைக்கு:

என்னுடைய நூலகத்தில் எத்தனை ஆயிரம் ரெமி மார்டின் குப்பிகள் உள்ளன என்ற கணக்கு என்னிடம் இல்லை. இதில் விலையே மதிக்க முடியாத குப்பிகளும் உண்டு. கடைகளில் கிடைக்கும் குப்பிகளும் உண்டு. இவற்றை 1980-இலிருந்து வீடு வீடாக சுமந்து திரிகிறேன். ஒரு பெரும் யானைப் படையையே வைத்துத் தீனி போட்டு சமாளிப்பது போல் உள்ளது. பெரும் கஷ்டம் என்னவென்றால், வீடு மாற்றுவது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தில்லியில் வீடு மாற வேண்டும். அங்கே அது கட்டாயம். 1980-இலிருந்து எத்தனை முறை வீடு மாறி இருப்பேன் என்று கணக்குப் போட்டுக் கொள்ளுங்கள். பல காலம் நான் சிறிய பொந்துகளிலேயே வசித்து வந்ததால் இத்தனை குப்பிகளும் பரணிலும் கட்டிலுக்கு அடியிலும் தான் ஜாகை கொண்டிருந்தன. பிறகு தான் ஓரளவு வசதி வந்த பிறகு அலமாரிகளுக்கு மாறின. ஆனால்,

இனியும் இவற்றை வைத்துச் சமாளிக்க முடியாது போல் தோன்றுகிறது. அதனால் எனக்கு மிகவும் தேவைப்பட்ட குப்பிகளை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற குப்பிகளை ஏலத்தில் விற்று விடலாம் என்று நினைக்கிறேன். இதனால்தான் குடிக்காரனுக்கு லட்சக் கணக்கில் பணம் தேவை என்கிறேன். என்னிடம் பணம் அல்லது ஒரு நிரந்தரத் தங்குமிடம் இருந்தால் இவற்றை என் ஆயுள் முழுவதும் பாதுகாத்து ஒரு நல்ல Barக்கு இலவசமாகக் கொடுத்து விட்டுப் போவேன். அந்த நம்பிக்கையில்தான் இவ்வளவு காலம் பாதுகாத்தேன். இனியும் இந்தப் குப்பிக்ளை போஷிப்பதற்கு என்னிடம் பணம் இல்லை. முதலில் ஒரு 200 குப்பிகளை ஏலம் விடப் போகிறேன். அதன் முதல் கட்டமாக இன்று நடக்க உள்ள வாசகர் வட்டச் சந்திப்புக்கு பத்து குப்பிகள் எடுத்துச் செல்கிறேன்.

குப்பிகள் தேவைப்படுகின்றவர்கள் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
***********************************************************************************************

No comments: